ஹவுஸ் ஹஸ்பண்ட்களும் இருக்க முடியும்.. அதென்ன பெண்கள் மட்டும்? இல்லத்தரசர் இருக்கலாமே: மதுரை ஹைகோர்ட்

Subscribe to Oneindia Tamil

மதுரை: திருமணத்துக்குப் பிறகு பெண்கள்தான் வேலை, குடும்பம் என இரண்டையும் சமாளிக்க வேண்டும் என்ற நிலை மாற வேண்டும்.. வீட்டையும் குடும்பத்தையும் கவனிக்கும் ஹவுஸ் ஹஸ்பண்ட்களும் (House Husband) இருக்கலாம்.. இது ஒரு புதிய இயல்பாக மாறினால் திருமணம் மற்றும் குடும்பம் என்ற அமைப்பைப் பாதுகாக்க உதவும் என்று மதுரை ஹைகோர்ட் வழக்கு ஒன்றில் தெரிவித்துள்ளது. என்ன நடந்தது?

திருவண்ணாமலையைச் சேர்ந்த கார்டியாலிஜிஸ்ட் அதாவது இதய மருத்துவர் ஒருவர், தேனியைச் சேர்ந்த பெண் பல் மருத்துவரை கடந்த 2011-ம் ஆண்டு திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

house husband Madurai High Court homemaker

ஆனால் தம்பதிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், கணவனும் மனைவியும் விவாகரத்து கோரி தனித்தனியாக தேனி குடும்ப நல நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்தனர். ஆனால், இருவரது மனுக்களையும் குடும்ப நல நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மதுரை ஹைகோர்ட் நீதிபதிகள் தந்த உத்தரவு

இதையடுத்து, அந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி கணவனும் மனைவியும் மதுரை ஹைகோர்ட்டில் தனித்தனியாக அப்பீல் செய்தார்கள்.. இந்த இந்த மேல்முறையீட்டு மனுக்களை நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், எம்.டி.சுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு தற்போது விசாரித்துள்ளது.. அதில், நீதிபதிகள் தங்கள் உத்தரவில் சொன்னதாவது:

"பாரம்பரியமாக குடும்பத்துக்கான வருமானத்தை ஈட்டும் பொறுப்பு கணவரிடமும், வீட்டு நிர்வாகப் பொறுப்பு மனைவியிடமும் இருந்தது. ஆனால், கணவனும் மனைவியும் சமமான மரியாதைக்கு உரியவர்கள். கடந்த அரை நூற்றாண்டில் இந்த நிலை மாறி வருகிறது.

பெண்களும் அதிக அளவில் தொழில் மற்றும் வேலை சார்ந்த வாழ்க்கைக்குள் வந்துள்ளனர். இதனால் பல குடும்ப உறவுகளில் பாதிப்பு ஏற்படுவதையும் பார்க்கிறோம். குறிப்பாக, தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் பிற தொழில்முறை துறைகளில் இது அதிகமாக காணப்படுகிறது.

ஹவுஸ் ஹஸ்பண்ட்

வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு திருமணம் என்பது இரு தரப்புக்கும் பயனளிக்கும் விஷயமாக அமைவதில்லை. திருமணம் தங்களுடைய தொழில் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் என்று கருதும் சில பெண்கள், திருமணத்தைத் தவிர்ப்பதையே தேர்வு செய்கின்றனர். இதனால் திருமணம் ஆகாத பெண்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

கணவர்கள் வீட்டு நிர்வாகப் பொறுப்பை ஏற்றுக்கொண்டால், இந்த நிலையை ஒருவேளை சரிசெய்ய முடியும். சிறிது காலத்துக்கு முன்புவரை, பெண்கள் தங்களை மகிழ்ச்சியுடன் 'இல்லத்தரசிகள்' என்று அறிமுகப்படுத்திக் கொண்டனர். ஆனால், சில நாட்களாக சங்கடப்பட்ட முகத்துடன் 'வெறும் இல்லத்தரசி' என்று கூறும் நிலை ஏற்பட்டுள்ளது.

பெண்கள் இல்லத்தரசிகளாக இருக்க முடியும் என்றால், ஆண்களும் இல்லத்தரசர்களாக இருக்க முடியும். இது ஒரு புதிய இயல்பாக மாறட்டும். இது திருமணம் மற்றும் குடும்பம் என்ற அமைப்பைப் பாதுகாக்க உதவும்.

வீட்டுப் பராமரிப்பாளர்

"வீட்டுப் பராமரிப்பாளர்" என்ற சொல் பொதுவாக நடுநிலையானது. வீட்டில் வேலை செய்து, வீட்டையும் குடும்பத்தையும் கவனித்துக் கொள்பவரை 'இல்லப் பராமரிப்பாளர்' என்று ஆக்ஸ்போர்டு அகராதி வரையறுக்கிறது.

ஒரு இல்லத்தரசி வீட்டைப் பராமரித்து, குடும்பத்தை கவனிப்பதன் மூலம் செய்யும் பணிகளுக்கு மிகப்பெரிய பொருளாதார மதிப்பு உள்ளது. இந்த உண்மையை உச்ச நீதிமன்றமும் வலியுறுத்தியுள்ளது. இந்த வழக்கில், கணவன்-மனைவி இடையேயான உறவு கரோனா காலத்திலும் பலனளித்ததாக இருந்தது. ஆனால், தற்போது அந்த உறவு இருவராலும் சேர்ந்து வாழ முடியாத அளவுக்கு முறிந்துவிட்டது.

வைப்புத்தொகை

இருவரையும் அழைத்துப் பேசியபோது, அந்த உறவை மீண்டும் சரிசெய்ய முடியாத அளவுக்கு அது முறிந்துவிட்டது என்பது தெரியவந்தது. திருமண உறவு இறந்துவிட்டதாக கணவர் தெரிவித்தார். அதே நேரத்தில், தனது குழந்தைகளுக்கான நிதிக் கடமைகளை நிறைவேற்றுவதாகவும் அவர் உறுதி அளித்தார்.

குழந்தைகளின் நலனைக் கருத்தில் கொண்டு, மனைவிக்கு ரூ.2.5 கோடி வழங்க கணவர் ஒப்புக்கொண்டுள்ளார். இதற்கு மனைவியும் சம்மதம் தெரிவித்துள்ளார். அதனால் இருவரின் பரஸ்பர ஒப்புதலின் அடிப்படையில் விவாகரத்து வழங்கப்படுகிறது.

கணவர் 3 மாதங்களுக்குள் ரூ.1.5 கோடியை மனைவியின் வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும். மேலும், ஒரு வருட காலத்துக்குள் குழந்தைகள் பெயரில் தலா ரூ.50 லட்சம் வைப்புத் தொகையாக செலுத்த வேண்டும்" என்று நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியுள்ளனர்.

தாக்கத்தை ஏற்படுத்துமா

மதுரை நீதிபதிகள் தெரிவித்துக்கும் இந்த ஹவுஸ் ஹஸ்பண்ட் கருத்து பலரது கவனத்தையும் பெற்று வருகிறது.. நீதிமன்றம் சொல்கிறபடி, ஆண்களும் வீட்டுப் பணிகளை ஷேர் செய்து கொண்டால் பல்வேறு மாற்றங்கள் குடும்பத்துக்குள் கண்டிப்பாக ஏற்படும்..

குறிப்பாக, குடும்பப் பொறுப்பு ஒருவர்மீது மட்டும் விழும் சுமை குறையும்... இதனால் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு தொழிலும் குடும்பமும் சமநிலைப்படுத்துவது ஓரளவு எளிதாகலாம்.. கணவன் மனைவி இருவரும் பொறுப்புகளைப் பகிர்ந்து கொள்வது குடும்ப உறவுக்கும் உதவும்.. ஈகோ நீங்கும்.. பெண்களின் மன அழுத்தம் குறையும் என்றே நம்பப்படுகிறது.. பார்ப்போம்..!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+