மதுரை தனிஷ்க் நகைக் கடை சிசிடிவியில் தெரிந்த ஒரு உருவம்! 35 கிலோ கொள்ளையில் நடந்தது என்ன?

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரை தனிஷ்க் ஜுவல்லரியில் அதிகாலை 3 மணிக்கு 35 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் 3 முகமூடி கொள்ளையர்கள் ஈடுபட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கிறார்கள். அதாவது கடையின் உள்ளே இருந்த சிசிடிவி காட்சியில் முகமூடி அணிந்த ஒருவர் பை பையாக யாரிடமோ கொண்டு போய் கொடுக்கும் வகையில் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

மதுரை பைபாஸ் சாலையில் உள்ள பிரபல Tanishq நகைக் கடையில் சுமார் 35 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. நேற்று இரவு முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவர் கடையின் பின்பக்க வழியாக உள்ளே புகுந்து நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

madurai Tanishq

கொள்ளை போன நகைகளின் மதிப்பு சுமார் 35 கோடி ரூபாய் எனக் கூறப்படுகிறது. இந்த நகைக்கடை திறக்கப்பட்டு சுமார் 15 நாட்களே ஆகும் நிலையில், இதுவரை பெரிய அளவில் திறப்பு விழாவும் நடத்தப்படவில்லை. மேலும், கடையின் உள்புறப் பணிகளும் முழுமையாக நிறைவடையாத நிலையில் இந்த கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த எஸ்.எஸ். காலனி காவல்துறையினர் மோப்பநாய் உதவியுடன் விசாரணை மேற்கொண்டனர். தடயவியல் நிபுணர்களும் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர்.

30 சதவீதம் நகைகள்

இதற்கிடையே, மதுரை மாநகர காவல் ஆணையாளர் ராஜேந்திரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், கடையில் இருந்த மொத்த தங்கத்தின் அளவில் சுமார் 30 சதவீதம் திருடு போயுள்ளதாக தெரிவித்தார். கொள்ளை சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த கொள்ளை சம்பவம் குறித்து முதற்கட்ட தகவல்கள் கிடைத்துள்ளன. அதாவது கடை திறக்கப்பட்டாலும் முழுவதுமாக கட்டடப் பணிகள் நடைபெறவில்லை. 70 சதவீதம் முடிந்த நிலையில் 30 சதவீத பணிகள் நடைபெற்று வருகின்றன.

வடமாநில இளைஞர்கள்

இந்த கட்டடப் பணியில் பெரும்பாலும் வடமாநில இளைஞர்கள் ஈடுபட்டிருந்ததால் அவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பக்கத்தில் நடக்கும் கட்டட வேலைகளில் பணியாற்றுவோரிடமும் விசாரணை நடத்தப்படுகிறது. அது போல் தீபாவளிக்கு ஊருக்கு சென்ற கட்டடத் தொழிலாளர்கள், கடை ஊழியர்கள் உள்ளிட்டோரை உடனடியாக மதுரை திரும்ப போலீஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

கடையில் இருந்த 25 ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொருவரையாக அழைத்து அவர்களது பின்புலத்தை கேட்கும் போலீஸார் அவர்களது கைரேகையை சேமித்து வைத்துக் கொண்டனர். மேலும் மதுரை மாநகர கமிஷனர் ராஜேந்திரன் கடை முழுவதையும் சுற்றி பார்த்தார்.

மேல்தளம் வழியாக

அப்போது கடையின் பின்புறம் சாரம் வழியாக மேல் தளத்திற்கு சென்று அங்கு லிப்ட் பொருத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த வழியில் நுழைந்து கடையில் கொள்ளையடித்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

கடையில் இருந்த ஜன்னலில் கம்பிகள் சில வளைக்கப்பட்டிருக்கின்றன. எனவே அந்த வழியாக கடைக்குள் நுழைந்திருக்க வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. நகைக் கடையின் உள்ளே வைக்கப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன.

முகமூடி

அதில் முகமூடி அணிந்த ஒருவர் கடைக்குள் இருந்து மூட்டை மூட்டையாக நகைகளை கொண்டு போய் யாரிடமோ கொடுக்கிறார். எனவே இந்த சம்பவத்தில் 3 அல்லது அதற்கு மேற்பட்டோர் ஈடுபட்டிருந்திருக்கலாம் என சொல்லப்படுகிறது. மேலும் கடையை சுற்றியிருக்கும் சிசிடிவி காட்சிகளையும் போலீஸார் ஆய்வு செய்து வருகிறார்கள். கடையில் கொள்ளையர்கள் விட்டுச் சென்ற துப்புகளை போலீஸார் சேகரித்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+