ஆம்னி பேருந்து ஓட்டுநரால் சிக்கிய நிஷாந்த்! மதுரை தனிஷ்க் நகை கொள்ளையன் கைதானது எப்படி?

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரை தனிஷ்க் நகைக் கடை கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளி நிஷாந்த் கைது செய்யப்பட்டது எப்படி என்பது குறித்து தகவல்களை பார்க்கலாம். நிஷாந்தை போலீஸிடம் சிக்க வைக்க உதவியது ஆம்னி பேருந்து ஓட்டுநர் என்றும் தகவல்கள் கிடைத்துள்ளன.

மதுரை காளவாசல் பைபாஸ் சாலையில் உள்ள தனிஷ்க் நகைக் கடை இயங்கி வருகிறது. இந்த கடையில் கடந்த 12 ஆம் தேதி நள்ளிரவு 11 கிலோ நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.

madurai tanishq

இந்த வழக்கில் 9 தனிப்படை போலீஸார் குற்றவாளிகளை தேடி வந்தனர். கடையில் இருந்த சிசிடிவி காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்தனர். மேலும் கடை ஊழியர்களிடம் நடத்திய விசாரணையில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் ஒரு இளைஞர் தங்களது கடைக்கு வந்து சென்றதாக ஊழியர்கள் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து போலீஸார் அந்த சிசிடிவி காட்சிகளையும் கொள்ளையடிக்கப்பட்ட போது கிடைத்த காட்சிகளையும் ஒப்பிட்டு பார்த்தனர். அதில் அந்த நபரின் கையில் பறவை, கொம்புள்ள மான் இருக்கும் டாட்டூ வரையப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து கடைக்கு பின்னால் இருக்கும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது ஸ்கூட்டி பைக்கில் கருப்பு உடை அணிந்து கைகளில் கிளவுஸுடன் முன்னால் பெரிய பைகளுடன் ஒரு இளைஞர் வேகமாக செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன.

மேலும் அந்த நபர் சிசிடிவி காட்சிகளில் சிக்காமல் இருக்க சந்து சந்தாக சென்றதும் தெரியவந்தது. இறுதியாக பழங்காநத்தம் பகுதியில் எம்.கே.பி. நகரில் உள்ள ஆட்டோ டிரைவர் சுரேஷ் என்பவரின் வீட்டுக்குள் சென்றது தெரியவந்தது. இதையடுத்து அந்த வீட்டில் போய் விசாரணை நடத்திய போது அந்த இளைஞரின் தந்தைதான் சுரேஷ் என்பது தெரியவந்தது. சுரேஷிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவருடைய மகன் நிஷாந்த் என்பதும் அவர் வேலை விஷயமாக வெளியூர் சென்றிருப்பதாகவும் தகவல் கிடைத்தது.

நிஷாந்த் கொண்டு வந்த நகை பை குறித்து போலீஸார் கேட்ட போது தனக்கு எதுவும் தெரியாது என சுரேஷ் தெரிவித்திருந்தாராம். இதையடுத்து நிஷாந்த் வந்த பைக் யாருடையது என விசாரித்த போது அது திருப்பாலையை சேர்ந்த இன்ஸ்டா இன்ப்ளூயன்சர் மீனாட்சி நாச்சியாருக்கு சொந்தமானது என தெரியவந்தது.

இந்த நிலையில் சுரேஷ், மீனாட்சியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் நிஷாந்த் தனி ஒருவனாக கொள்ளையடித்துவிட்டு அந்த நகைகளை காதலி மீனாட்சியிடமும், தந்தை சுரேஷிடமும் பிரித்து பிரித்து கொடுத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து மீனாட்சியும் சுரேஷும் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் மாடக்குளம் மலை பகுதியில் நிஷாந்த் பதுக்கி வைத்திருந்ததாக மீனாட்சி கூறிய தகவலின்பேரில் அந்த நகைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். இந்த நிலையில் முக்கிய குற்றவாளியான நிஷாந்தை போலீஸார் தேடி வந்தனர்.

கடந்த 5 நாட்களாக போக்கு காட்டிவந்த அவர் இன்று தருமபுரி மாவட்டம் சேஷம்பட்டியில் சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். அவர் எவ்வாறு கைது செய்யப்பட்டார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகின.

நகைக் கொள்ளை நடந்த அடுத்த நாள் முதல் நிஷாந்த் மாறு வேடத்தில் பரமக்குடி, கேரளா, கோவை, ஹைதராபாத் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றிக் கொண்டிருந்தாராம். ஒவ்வொரு முறையும் அவர் வாட்ஸ் ஆப் காலில் மட்டும் யாருடனோ பேசியிருந்தாராம்.

அவர் சென்ற எந்த ஊரிலும் அவரது முகத்தை காட்டவேயில்லையாம். இந்த நிலையில் நேற்றைய தினம் இரவு பெங்களூரில் இருந்து சேலம் செல்லும் ஆம்னி பேருந்தில் நிஷாந்த் பயணம் செய்திருந்தார். அப்போது அவரது செயல்பாடுகள் அந்த ஆம்னி பேருந்து ஓட்டுநருக்கு சந்தேகத்தை கொடுத்ததாம்.

மேலும் தனது செல்போனில் அந்த நபர் குறித்து வெளியான புகைப்படங்களை அவர் பார்வையிட்டு, பேருந்தில் இருப்பது நிஷாந்த் என்பதை அறிந்து கொண்டார். இதையடுத்து சேலம் நெடுஞ்சாலை அருகே வந்ததும் அதியமான்கோட்டை போலீஸாருக்கு ஓட்டுநர் தகவல் கொடுத்தார்.

அந்த தகவலின்பேரில் அதியமான்கோட்டை போலீஸார் அந்த பேருந்தின் ஜிபிஎஸ்ஸை டிராக் செய்து சென்ற போது தருமபுரி மாவட்டம் சேஷம்பட்டியில் பேருந்தை வழிமறித்தனர். அப்போது நிஷாந்த் அந்த பேருந்தில் இருந்து தப்பி செல்ல முயன்றார். ஆனால் போலீஸார் சுற்றி வளைத்து நிஷாந்தை கைது செய்தனர்.

இது குறித்து தனிப்படை போலீஸாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. முகத்தை மறைத்துக் கொண்டே சுற்றிய போதிலும் அவரது நடவடிக்கைகளால் ஓட்டுநருக்கு சந்தேகம் ஏற்பட்டு நிஷாந்தை பிடிக்க துப்பு கொடுத்துள்ளார். போலீஸார் அந்த ஓட்டுநருக்கு பாராட்டுகளை தெரிவித்திருந்தனர். நிஷாந்த் நீதிமன்றத்தில் சரணடைய வந்ததாகவும் சொல்லப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+