மதுரையில் மழலையர் பள்ளி உரிமையாளர் வகுப்பறையில் இருந்த கோலம்.. ஆடிப்போன உறவினர்கள்

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரை கண்ணனேந்தல் சந்தனம் நகரை சேர்ந்த அஜிதாகுமாரி மழலையர் பள்ளி நடத்தி வருகிறார். இவரது மூத்த மகள் சுவேதாவுக்கு திருமணமாகி அவர் குடும்பத்துடன் தேனியில் வசித்து வருகிறார். இளையமகள் கீர்த்தி மட்டும் அம்மா உடன் வசித்து வருகிறார். இந்நிலையல் அஜிதா குமாரி பள்ளி வகுப்பறையில் இருந்த கோலம் உறவினர்களை ஆடிப்போக வைத்துள்ளது.

மதுரை கண்ணனேந்தல் சந்தனம் நகரை சேர்ந்தவர் முகுந்தன். இவருடைய மனைவி அஜிதாகுமாரிக்கு 50 வயது ஆகிறது. இவர் கண்ணனேந்தல் பகுதியில் மழலையர் பள்ளி நடத்தி வந்தார். இவர்களுக்கு, சுவேதா, கீர்த்தி என்ற 2 மகள்கள் இருக்கிறார்கள். இதில், மூத்த மகள் சுவேதாவுக்கு திருமணமாகி அவர் குடும்பத்துடன் தேனியில் வசித்து வருகிறார்.

Ajithakumari

அஜிதாகுமாரி நடத்தி வரும் பள்ளியில் மாடியில் தான்அவரது வீடு உள்ளது.. அவரது கணவர் முகுந்தன் இறந்துவிட்டதால், 2-வது மகளுடன் வசித்து வந்தார். சில நாட்களுக்கு முன்பு, மதுரையில் சுவேதாவுக்கு குழந்தை பிறந்தது. பிரசவ செலவு மற்றும் தன்னை சரியாக கவனிக்கவில்லை என தாயாரிடம் சுவேதா கோபித்துக்கொண்டதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து, மருத்துவமனையில் இருந்து வெளியேறி சென்றதாகவும் தெரிகிறது.

இதுதொடர்பாக நேற்று முன்தினம் இரவில் இளைய மகள் கீர்த்தி, தனது தாயாரிடம் கேட்டுள்ளார். அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.. இதனால் மனவருத்தம் அடைந்த அஜிதாகுமாரி, வீட்டில் யாரிடமும் பேசாமல் இருந்து வந்துள்ளாராம்.

இந்தநிலையில் நேற்று காலையில் அஜிதாகுமாரியை வீட்டின் அறைகளில் தேடியபோது அவரை காணவில்லை. இதனை தொடர்ந்து வீட்டின் கீழ் பகுதியில் உள்ள பள்ளியில் தேடியபோது அங்குள்ள ஒரு வகுப்பறையில், அவர் தூக்குப்போட்ட நிலையில் இருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின்பேரில், திருப்பாலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அஜிதாகுமாரியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவனைகு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, குடும்ப பிரச்சனைதான் தவறான முடிவுக்கு காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதுரையில் வறண்ட சாத்தையாறு அணை

மதுரை மாவட்டம பாலமேடு சாத்தையாறு அணை முற்றிலுமாக வறண்டு பாலைவனம் போல் காணப்படும் காட்சிகள் காண்போரை கலங்க வைத்துள்ளது. மதுரை பாலமேடு அருகே அமைந்துள்ள 98 ஏக்கர் பரப்பளவு மற்றும் 29 அடி நீர் கொள்ளளவு கொண்ட சாத்தையாறு அணையின் மூலம் 11 கண்மாய்களும், சுமார் 2,000 ஏக்கர் விவசாய நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன. ஆனால், கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக அணைக்கு நீர்வரத்து முற்றிலும் நின்றதுடன் பருவமழையும் பொய்த்துப் போயிருக்கிறது., அணையில் தேங்கியிருந்த தண்ணீரும் முற்றிலுமாக ஆவியாகி வறண்டு கிடக்கிறது.வைகையிலும் தண்ணீர் இல்லை.. மக்கள் கவலையில் இருக்கிறார்கள்.

மன உளைச்சல், பதற்றம் அல்லது தற்கொலை எண்ணங்கள் தோன்றும் போது உடனடியாக உதவி பெறத் தொடர்புகொள்ள வேண்டிய தற்கொலை தடுப்பு மற்றும் மனநல உதவி எண்கள் (Helpline Numbers):

தமிழ்நாடு அரசு உதவி எண்:

104 (24 மணி நேரமும் செயல்படும் அரசு இலவச சேவை)

முக்கியத் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் உதவி எண்கள்:

சினேகா : 044-24640050 (24 மணி நேரமும் செயல்படும்)

டெலி-மானஸ் (இந்திய அரசு): 14416 அல்லது 1800-891-4416 (24 மணி நேர இலவச சேவை)

வந்தேவாலா பவுண்டேஷன் : 9999 666 555

ஆஸ்ரா : 91-9820466726

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+