தமிழக அரசு இசைக்கல்லூரியில் படிக்க ஆசையா? அப்ளை பண்ணுங்க.. அரசு உதவி தொகையும் இருக்கு!
மதுரை: பசுமலையில் உள்ள தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரியில் ஆண்டுக்கு ரூ.5000 உதவித்தொகையுடன் இசைப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. இசையில் ஆர்வம் உள்ளவர்கள் கல்லூரியில் நேரடியாக அல்லது www.artandculture.tn.gov.in என்ற மெயில் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.
இசைக்கலைஞர் ஆக வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருக்கும். எங்கு படிப்பது எப்படி படிப்பது என்று தெரியாமல் இருப்பார்கள். இசைக்கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்காக பவிண்ணப்ப படிவம் அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை பசுமலையில் உள்ள அரசு இசைக்கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்.

மூன்றாண்டுகள் பட்டயப்படிப்பு குரலிசை,வீணை / வயலின் / புல்லாங்குழல் / நாதசுரம் / தவில் / மிருதங்கம் / பரதநாட்டியம் / நாட்டுப்புறக்கலை படிப்புகளுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி. 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
குரலிசை,வீணை / வயலின் / புல்லாங்குழல் / நாதசுரம் / தவில் / மிருதங்கம் / பரதநாட்டியம் / நாட்டுப்புறக்கலை
துணைப்பாடங்கள்: வீணை / வயலின் / புல்லாங்குழல் / நாதசுரம் / தவில் / மிருதங்கம் / பரதநாட்டியம் / நாட்டுப்புறக்கலை
குரலிசை. கல்வித்தகுதி 10 வகுப்பு தேர்ச்சி. வயது 16 வயது முதல் 21 வயது வரை.
கல்விக் கட்டணம் ஆண்டிற்கு - ரூ 325(நாதஸ்வரம், தவில் மற்றும் இசை ஆசிரியர் பயிற்சி பிரிவுகளுக்கு படிப்பு கட்டணம் இல்லை)
சிறப்புக் கட்டணம் - ரூ 425 கல்விக் கட்டணம் ஆண்டிற்கு - ரூ 1180 (அயல்நாட்டு மாணாக்கர்களுக்கு ரூ 5350)
சிறப்புக் கட்டணம் ஆண்டிற்கு - ரூ 300சேர்க்கைக் கட்டணம் - ரூ 10 வங்கி எண் - 11450417973 ஐ.எஃப்.எஸ்.சி. - SBINOOO2254 வங்கி பெயர் - SBIகிளை - பசுமலை
ஓராண்டு இசை ஆசிரியர் பயிற்சிக்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் இசைக்கலைமணி பட்டயம். 16 வயது முதல் 25 வயது வரை. குரலிசை / பரதநாட்டியம்12 வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையானது 17 வயது முதல் 22 வயது வரை உள்ளவர்கள் அப்ளை செய்யலாம்.
மாலை நேர இசைக்கல்லூரி இரண்டு ஆண்டுகள் சான்றிதழ் படிப்பு வீணை / மிருதங்கம் / பரதநாட்டியம் / குரலிசை. கல்வித்தகுதி 10 வகுப்பு தேர்ச்சி. வயது 16 வயது முதல் 21 வயது வரை.
இக்கல்லூரியில் முழு நேர இசை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு வருகைப் பதிவின் அடிப்படையில் கல்வி உதவித் தொகை மாதந்தோறும்ரூ. 500 வீதம் 10 மாதங்களுக்கு வழங்கப்படுகிறது.கல்லூரி வந்து செல்வதற்கு நடைமுறையிலுள்ள அரசு விதிமுறைகளின் படி இலவச பேருந்து பயண சலுகை அளிக்கப்படும். மாணவ மாணவியருக்கு இலவச தங்கும் விடுதி தனித்தனியாக செயல்படுகிறது.
தற்போது மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இசையில் ஆர்வம் உள்ளவர்கள் கல்லூரியில் நேரடியாக அல்லது www.artandculture.tn.gov.in என்ற மெயில் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். விபரங்களுக்கு 9442087629 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications