பெண் குளிப்பதை பேனா கேமரா மூலம் படம் பிடித்து.. 55 வயதில் சிக்கிய அறநிலையத்துறை இணை ஆணையர்!
பெண் குளிப்பதை கேமரா மூலம் படம் பிடித்த அரசு அதிகாரி கைது செய்யப்பட்டார்
மதுரை: பெண் குளிக்கிறதை கேமரா மூலமாக வீடியோ எடுத்திருக்கிறார் மிஸ்டர் பச்சையப்பன்.. வயசு 55.. செய்யும் தொழில் இந்து அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர்! யாரா இருந்தால் என்ன, கேடு கெட்ட செயலை செய்ததால் பச்சையப்பனை தூக்கி உள்ளே வைத்துவிட்டது போலீஸ்!
மதுரை, தெப்பக்குளம் பகுதியை சேர்ந்தவர்தான் இந்த பச்சையப்பன். இந்து அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர். கடந்த ஜுன் 28ம் தேதி, சதுரகிரி மலைக்கோயிலில் உண்டியல் எண்ணும் பணி நடந்தது.
இந்த பணியில் திண்டுக்கல் இந்து அறநிலையத்துறையில் பணியாற்றும் ஒரு பெண் அதிகாரி ஈடுபட்டிருந்தார். பச்சையப்பனும் அங்கு பணி நிமித்தமாக சென்றார்.

பேனா
அப்போது கோயில் பகுதியில் உள்ள பாத்ரூமில் அந்த பெண் அதிகாரி குளிக்க சென்றிருக்கிறார். அப்போது பாத்ரூமில் ஆணியில் ஒரு பேன்ட் தொங்கி இருந்திருக்கிறது. அந்த பேன்ட்டில் சொருகி இருந்த ஒரு பேனா ரெட் கலரில் எரிந்திருக்கிறது.

குளியல் காட்சிகள்
இதனால் சந்தேகமடைந்த அந்த பெண், பேனாவை எடுத்து பார்த்தால், அது பேனா இல்லை, பென் கேமரா என்பதும், அவ்வளவு நேரமாக குளித்த காட்சி எல்லாம் அதற்குள் பதிவாகி இருந்ததும் தெரியவந்தது. இதைவிர வேறு சில ஆபாச வீடியோவும் அதில் இருந்ததாம். அது மட்டுமில்லை.. அந்த பேன்ட் பச்சையப்பனுடையது என்றும் தெரியவந்தது. உடனடியாக சாப்டூர் போலீசிலேயே பெண் புகார் தந்தார். போலீசாரும் பச்சையப்பன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

காஸ்ட்லி காமிரா
இந்நிலையில், விடிகாலை வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்த பச்சையப்பனை போலீசார் அதிரடியாக கைது செய்து எஸ்பி ஆபீசில் வைத்து விசாரணையை ஆரம்பித்தனர். அந்த பென் கேமரா.. ரொம்ப காஸ்ட்லியாம். அதில் எது ரெக்கார்ட் ஆனாலும், செல்போனில் லைவ்-ஆக பார்க்க முடியுமாம். இதையெல்லாம் கேள்விப்பட்டு இந்து சமய அறநிலையத்துறை அதிர்ச்சியில் உள்ளது.

தீவிர விசாரணை
கைதான பச்சையப்பன் சாதாரண ஆள் கிடையாது. சவுடார்பட்டியில், இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான மீனாட்சியம்மன் கோயிலில் பழமையான ஐம்பொன் சிலைகள் கடத்தலில் தொடர்பு உள்ளவராம்.
இதே சதுரகிரி கோயில் உண்டியல் வருமானத்தை எண்ணும்போது பணத்தில் கையாடலும் செய்துள்ளாராம். போன வருஷம் தன் பிறந்த நாளுக்கு அதிகாரிகளை கட்டாயப்படுத்தி வரவழைத்து காஸ்ட்லி கிப்ட் கேட்டும் வாங்கி இருக்கிறாராம். இவ்வளவு ஆட்டம் போட்ட பச்சையப்பன் இன்று களி தின்று, கம்பி எண்ண போகிறார்!
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications