சீட் பிரச்சினை இல்லை.. "ஊசி.." திமுக எம்எல்ஏ சரவணன் பாஜகவில் சேர இதுதான் காரணமாம்! அதிரிபுதிரி போங்க
மதுரை: திமுகவின் திருப்பரங்குன்றம் தொகுதி எம்எல்ஏவாக இருந்த டாக்டர்.சரவணன், நேற்று காலை பாஜகவில் இணைந்தார். மாலையே அவர் மதுரை வடக்கு தொகுதிக்கான பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
Recommended Video
திமுகவில் திருப்பரங்குன்றம் தொகுதியில் மறுபடியும் சரவணனுக்கு சீட் தராத நிலையில், அவர் திடீரென கட்சி மாறிவிட்டார்.
திமுக போன்ற திராவிட சித்தாந்தம் கொண்ட கட்சியிலிருந்து எப்படி, பாஜகவுக்கு சரவணன் சென்றார் என்பது பலரது மனதில் உள்ள கேள்வி.

மதுரையில் பேட்டி
இந்த நிலையில்தான், டாக்டர். சரவணன் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். காலை பாஜக மாநிலத் தலைவர் தலைமையில் பாஜகவில் இணைந்த எனக்கு மதியமே சர்ப்ரைஸ் கிப்ட் ஆக மதுரை வடக்கு தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டது. மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்து ஆலோசித்து பின்னர் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளேன். திமுகவில் எம்எல்ஏவாக இருந்தவர்கள் எல்லோரையும் வேட்பாளராக அறிவித்த நிலையில் எனக்கு ஒதுக்காததை மதுரையில் உள்ள மாவட்டச் செயலாளர்களின் சூழ்ச்சியாக தான் நான் பார்க்கிறேன்.

தடுப்பூசி காரணம்
நான் அடிப்படையில் மருத்துவர், சமூக சேவகர் மக்களுக்கு சேவை செய்வதற்காக எனக்கு ஒரு பிளாட்பார்ம் வேண்டும் அதற்காக தற்போது பாஜகவுடன் இணைந்துள்ளேன். இவ்வாறு சரவணன் தெரிவித்தார். பல கட்சிகள் இருந்த நிலையில் பாஜகவில் இணைந்ததின் காரணம் குறித்த கேள்விக்கு, கொரோனா காலகட்டத்தில் தடுப்பு மருந்தினை 9 மாதத்தில் இந்தியாவிற்கு வழங்கினார் பிரதமர் மோடி. இதனை படிக்கும் பொழுது மன மகிழ்ச்சி அடைந்தது. அதனால் பாஜகவில் இணைந்தேன் என்று தெரிவித்தார் சரவணன்.

மக்கள் சேவை
தற்போது, பாஜகவின் நான் சேர்ந்துள்ளேன். தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட தொண்டர்கள் என் வழியில் பாஜகவில் இணைவார்கள். அது கட்டாயம். திமுக 60 வருடம் பழமையான இயக்கம். நான் தொண்டனாக இருந்து எம்எல்ஏவாக வளர்ந்ததற்கு காரணம் திமுகதான். தற்போது, பொதுமக்களுக்கு சேவை செய்வதற்கு எனக்கு பிளாட்பார்ம் தேவை. அதனால்தான் பாஜகவில் இணைந்தேன் என்றார்.

10 பொருத்தம்
திமுகவிற்கும், பாஜகவிற்கும் கொள்கை வேறுபாடு உள்ளது, இதை எவ்வாறு பார்க்கிறீர்கள் குறித்த கேள்விக்கு. திருமணத்திற்கு பத்து பொருத்தமும் பார்ப்பதில்லை அதேபோல்தான் சில பொருத்தங்கள் இருந்தால் போதும் அதைத்தான் நான் கொரோனா தடுப்பு மருந்தை கொடுத்தது ஒருவிதம் அதனால் இணைந்தேன் என்றார். மதுரை வடக்குத் தொகுதியில் திமுக வேட்பாளர் தளபதியை எதிர்த்து போட்டியிடப் போகின்றீர்களா என்ற கேள்விக்கு, என்னை எதிர்த்து நிற்கும் திமுக வேட்பாளரை மிகப்பெரிய போட்டியாக நினைக்கவில்லை, வெற்றி எனக்கே நிச்சயம் எனக் கூறினார்.












Click it and Unblock the Notifications