கருணாநிதி முதல்வராக இறக்க கூடாது என்று நினைத்தேன்.. அதில் வெற்றியும் பெற்றேன்.. சீமான் பரபர
சாகும் வரை மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியை முதல்வராக விடாமல் பார்த்துக் கொண்டது நான்தான் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
மதுரை: சாகும் வரை மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியை முதல்வராக விடாமல் பார்த்துக் கொண்டது நான்தான் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
நேற்று மதுரை ஒத்தக்கடை பகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் மாவீரர் நாள் கூட்டம் நடைபெற்றது. உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் இந்த கூட்டம் அதிகம் முக்கியத்துவம் பெற்றது. நேற்று இதில் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு அதிக கவனம் ஈர்த்தது.
தன்னுடைய பேச்சு முழுக்க சீமான், திமுகவை கடுமையாக விமர்சனம் செய்தார். திமுகவை எப்போதும் ஆட்சியில் அமர விட மாட்டேன் என்று சீமான் குறிப்பிட்டார்.

சீமான் எப்படி
சீமான் தனது பேச்சில், முதல்வர் பதவியில் இருக்கும் போது கருணாநிதி இறந்துவிட கூடாது என்று நினைத்தேன், அவர் முதல்வர் பதவியில் இருந்து உயிர் விட கூடாது. அதனால் கடைசி காலத்தில் அவரை முதல்வராக விட கூடாது என்று பாடுபட்டேன். இதற்காக கடுமையாக உழைத்தேன். தேர்தல் பணிகளை செய்தேன்.

திமுக ஆட்சி
கடைசியில் நான் அதில் வெற்றியும் பெற்றேன். அவர் இறக்கும் போது முதல்வராக இல்லை. அவரை கடைசிவரை முதல்வராக விடாமல் பார்த்துக்கொண்டேன். கருணாநிதி திரும்பவும் முதல்வர் ஆகாமல் இருந்ததற்கு நான் தான் காரணம். திமுக எப்போதும் ஆட்சிக்கு வர முடியாது.

தமிழர்கள் எப்படி
தமிழர்கள் விநோதமானவர்கள். முன்னாள் பிரதமர் ராஜூவ் காந்தியை படுகொலை செய்தது விடுதலைப்புலிகள்தான். ஆம் அது உண்மைதான். அதில் எந்த தவறும் கிடையாது. வன்முறைக்கு பதிலடி வன்முறைதான்.

தமிழர்கள் எதிர்காலம்
நாம் தமிழர் கட்சிதான் தமிழகத்தின் எதிர்காலம். விரைவில் திராவிட கட்சிகள் தமிழகத்தில் இருந்து அழிந்துவிடும். நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு அளித்தால் நீங்கள் வாழலாம். இல்லையென்றால் நீங்கள் சாக வேண்டியதுதான். அதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், என்று சீமான் தனது பேச்சில் குறிப்பிட்டுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications