சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு... இளம் காளைகள் கட்சி எடுத்த அதிரடி முடிவு..!
மதுரை: தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்கும் நிலைப்பாட்டில் உள்ளது இளம் காளைகள் கட்சி.
மதுரையை தலைமையிடமாக கொண்டு ஜல்லிக்காட்டு ஆர்வலர்களால் நடத்தப்பட்டு வருகிறது கட்சி இளம் காளைகள் கட்சி.
மதுரை மாவட்டம் முழுவதும் இந்தக் கட்சிக்கான கட்டமைப்பு கிராமவாரியாக ஓரளவு சொல்லிக்கொள்ளும் உள்ளது.

நேதாஜி கார்த்திகேயன்
தமிழகம் தழுவிய அளவிலும் நிர்வாகிகள் நியமனம் உறுப்பினர் சேர்ப்பு உள்ளிட்ட பணிகளும் இளம் காளைகள் கட்சியில் நடைபெற்று வருகின்றன. இந்தக் கட்சியின் தலைவராக நேதாஜி கார்த்திகேயன் என்பவர் உள்ளார். இவர் நடிகர் சூர்யா அரசியலுக்கு வர வேண்டும் எனக்கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர்.

சூர்யாவுக்கு அழைப்பு
சூர்யா தற்போதைய சூழலில் அரசியலுக்கு வர வாய்ப்பில்லை என்பதால் தனது கட்சியின் ஆதரவை எந்தக் கட்சிக்கு தெரிவிப்பது என்பது பற்றி கடந்த இரண்டு மாதங்களாக ஆலோசனை மேற்கொண்டு, பெரும்பான்மை நிர்வாகிகளின் கருத்தை ஏற்று திமுகவுக்கு ஆதரவு தெரிவிக்க முடிவெடுத்துள்ளார்.

நேரில் சந்திப்பு
சிறுகுச்சியும் பல்குத்த உதவும் என்ற பழமொழிக்கேற்ப இவர்கள் ஆதரவை திமுகவும் ஏற்றுக்கொள்ளும் எனத் தெரிகிறது. இதனிடையே திமுக மாநில சுற்றுசூழல்அணி செயலாளர் கார்த்திகேய சேனாதிபதியை சந்தித்து பேசிய இளம் காளைகள் கட்சித் தலைவர் நேதாஜி கார்த்திகேயன், மதுரை மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு தொகுதிகளிலும் தங்கள் கட்சிக்கு உள்ள செல்வாக்கு பற்றி விளக்கி கூறியிருக்கிறார்.

சிறு அமைப்புகள்
கார்த்திகேய சேனாதிபதி மூலம் திமுக தலைவர் ஸ்டாலினை நேதாஜி கார்த்திகேயன் விரைவில் நேரில் சந்தித்து தனது ஆதரவு கடித்தத்தை கொடுக்கவுள்ளார். இதனிடையே தமிழகம் முழுவதும் உள்ள சிறு அமைப்புகள் மற்றும் இயக்கங்கள் சார்பில் திமுகவுக்கு அதிகளவு ஆதரவு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications