கமல், விஜயகாந்த், டிடிவி, காங்கிரஸ் - எப்படியிருக்கு இந்த புது கூட்டணி?
மதுரை: சட்டமன்ற தேர்தலில் திமுக, அதிமுக தவிர்த்து மற்ற கட்சிகள் இணைந்து புதிய கூட்டணி உருவாக்க வேண்டும் என்று இளம் காளைகள் கட்சி வலியுறுத்தியுள்ளது.
2017-ம் ஆண்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு பிறகு மதுரையை சேர்ந்த நேதாஜி கார்த்திகேயன் என்பவர் இளம் காளைகள் கட்சியை தொடங்கினார். தொடக்கத்தில் அதில் உறுப்பினர் சேர்க்கை மந்தமாக இருந்த நிலையில் இப்போது மதுரை மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் ஓரளவு உறுப்பினர்களையும் சேர்த்துள்ளனர்.

இளம் காளைகள் கட்சியின் கொள்கைகளை பொறுத்தவரை தமிழகத்தின் பாரம்பரியத்தை மீட்டெடுக்க வேண்டும் என்பது பிரதானமாக இருக்கிறது.
குறிப்பாக, மதுரையின் பாரம்பரியமான தமுக்கம் மைதானம் மீட்பு, பாரம்பரிய மருத்துவம் மீட்டெடுப்பு, இயற்கை வள கொள்ளைகள் தடுத்து நிறுத்தம் என்பன உள்ளிட்ட கொள்கைகளை வகுத்து இளம் காளைகள் கட்சி செயல்பட்டு வருகிறது. இதனிடையே சூர்யாவை அரசியலுக்கு வருமாறு அழைப்பு விடுத்த கட்சியும் இது தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், எதிர்வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திமுக, அதிமுக தவிர்த்து 3வது அணி அமைய வேண்டும் என்று இளம் காளைகள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் தலைவர் நேதாஜி கார்த்திகேயன் கூறுகையில், "திமுகவும், அதிமுகவும் மாறி மாறி தமிழகத்தை ஆண்டு, அரசியல் ஊழல்வாதிகளின் கூடாரமாகிவிட்டது. தமிழகத்தின் இயற்கை வளங்கள் சுரண்டப்படுகின்றன. இரண்டு கட்சிகளும் அரசியலில் இளைஞர்களை புறக்கணிக்கின்றனர். வேலைவாய்ப்புகளை உருவாக்கவில்லை..
ஆகவே இந்த முறை திமுக, அதிமுக தவிர்த்து அமமுக, மக்கள் நீதி மய்யம், தேமுதிக, இளம் காளைகள் கட்சி, சில சமுதாய அமைப்புகள் சேர்த்து ஒரு கூட்டணியை உருவாக்க வேண்டும் என இளம் காளைகள் கட்சி முயற்சி செய்கிறது.
காங்கிரஸ் போன்ற கட்சிகள் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி மூன்றாவது அணியில் இடம் பெற வேண்டும். இதற்கான முயற்சியாக அனைத்துக்கட்சி தலைவர்களையும் சந்திக்க உள்ளோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications