கல்லா கட்டும் கல்குவாரிகள்.. விதிமீறல் ஓனர்கள் மீது கிரிமினல் ஆக்சன்! அதிரடியாக உத்தரவிட்ட ஹைகோர்ட்!

Subscribe to Oneindia Tamil

மதுரை: சட்டவிரோதமாக குவாரிகள் நடத்தி அரசுக்கு இழப்பு ஏற்படுத்தும் நபர்கள் மீது குற்றவியல் சட்டப்படி வழக்கு பதிவு செய்யது நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில், சட்ட விரோதமாக குவாரி நடத்தி அபராதம் விதிக்கப்பட்டவர்கள் மீது உச்ச நீதிமன்ற உத்தரவின்படி குற்றவியல் சட்ட நடவடிக்கைகளை எடுக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், அபராதம் விதிக்கப்பட்டு அபராத தொகை கட்டாதவர்கள் மீது வருவாய் மீட்புச் சட்டம் படி நடவடிக்கைகள் எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது அரசு தரப்பில் தகவல் தெரிவித்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூரை சேர்ந்த காசிராஜன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கை தாக்கல் செய்தார். அதில், தமிழகத்தில் கட்டுமான தேவைகளை நிறைவேற்றும் விதமாக தமிழக அரசு சுமார் 1700 கல் குவாரிகள் நடத்துவதற்கு அனுமதி வழங்கியுள்ளது.

கல் குவாரி நடத்துவதற்கு அனுமதி வாங்கும் நபர்கள் அனுமதிக்கப்பட்ட பரப்பளவை விட அதிக அளவு சட்ட விரோதமாக கற்களை வெட்டி விற்பனை செய்து வருகின்றனர். பலர் உரிமம் காலாவதியான பிறகும் தொடர்ந்து கனிம வளங்களை வெட்டி விற்பனை செய்து வருகின்றனர்.

Madurai high court Illegal Quarry

சட்டவிரோத குவாரி

புதுக்கோட்டை மாவட்டத்தில் இது போன்ற பலர் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டனர். சிலர் அரசு புறம்போக்கு நிலங்களை பட்டா நிலமாக போலியாக ஆவணங்கள் தயாரித்து அந்த இடங்களில் கல்குவாரிகள் நடத்தி வருகின்றனர். இதனால் அரசுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் இழப்புகள் ஏற்படுகிறது. மேலும் சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்படுகிறது. சமீபத்தில் புதுக்கோட்டை எழில் நகரை சேர்ந்த முருகேசன் என்பவர் புதுக்கோட்டை மாவட்டத்தில் கனிம வள விதிகளை மீறி குவாரி செய்து வருகிறார். இது குறித்து புகார் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அபராத வசூல்

இதேபோல் கரூர் மாவட்டம் ஆண்டாங்கோவிலை சார்ந்த ரங்கசாமி என்பவர் (அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் அப்பா) சட்டவிரோத குவாரிகள் மேற்கொண்டதால் சுமார் 15 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால் அதை வசூல் செய்வதற்கான எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இவ்வாறு சட்ட விரோத குவாரிகள் செய்பவர்கள் மீது வழக்கு தொடர்ந்தால் அபராதம் விதித்து பெயரளவுக்கு நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.

கனிம விதிகள்

மேல் நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படுவதில்லை எனவே உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சட்டவிரோதமாக குவாரிகள் செய்பவர்கள் மீது அபராதம் விதிப்பது மட்டுமல்லாமல் அதனை வசூல் செய்யவும் அவர்கள் மீது குற்றவியல் சட்டத்தின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

வருவாய் இழப்பு

இந்த வழக்கு நீதிபதிகள் அனிதா சுமந்த், நீதிபதி குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுதாரர் அளித்த புகாரின் பேரில் குளத்தூர் வத்தனாக்குறிச்சி கிராமத்தில் முருகேசன் என்பவர் அனுமதிக்க படாத நிலங்களில் சுமார் 9 ஆயிம் கனமீட்டர் கனிம வளங்கள் சட்டவிரோதமாக வெட்டி எடுத்து உள்ளார். இதனால் கடந்த 2023 ஆண்டு அவருக்கு 3 கோடியே 15 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது .ஆனால் இதுவரை அவர் அபராத தொகையை கட்டாததால் வருவாய் துறை சட்டப்படி வசூலிப்பதற்கு தற்போது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

குற்றவியல் நடவடிக்கை

இதனைத் தொடர்ந்து நீதிபதிகள்," குவாரிகள் சட்ட விரோத செயலில் ஈடுபடுபவர்கள் மீது விதிக்கப்படும் அபராத தொகை மற்றும் அவர்கள் மீது குற்றவியல் சட்ட விதியின் படி நடவடிக்கை எடுப்பது குறித்து ஏற்கனவே உச்ச நீதிமன்றம் தெளிவான உத்தரவு உள்ளது. எனவே அதன் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அபராத தொகைகள் வசூலிப்பது மற்றும் குற்றவியல் சட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுப்பது குறித்த நிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்" என உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்தி வைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+