கள்ளக்காதலனுடன் உறவு.. பார்த்துவிட்ட 5 வயது சிறுவன்.. கழுத்தை நெரித்த தாய்.. மதுரையில் கொடூரம்
மதுரை: மதுரையில் கள்ளக்காதலுக்காக 5 வயது மகனை கயிற்றால் கழுத்தை இறுக்கி கொன்ற சம்பவத்தை அடுத்து தாயும் அவரது கள்ளக்காதலனும் கைது செய்யப்பட்டனர்.
மதுரை மாவட்டம் டி கல்லுப்பட்டி அருகே உள்ள வி குச்சம்பட்டியை சேர்ந்தவர் ராம்குமார் (28). இவரது மனைவி ஆனந்தஜோதி (25). இவர்களுக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிறது.
இவர்களுக்கு ஜீவா (5), மகள் லாவண்யா (3) உள்ளனர். ராம்குமார் கொத்தனார் வேலை செய்து வருகிறார். ஆனந்தஜோதியோ விருதுநகரில் உள்ள ஒரு கடையில் வேலை செய்து வருகிறார்.

அங்கன்வாடி
ஜீவா அங்குள்ள அங்கன்வாடி படித்து வந்தார். இந்த நிலையில் ஜீவா பள்ளிக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்து தூங்கியுள்ளார். அப்போது மாலை நேரம் ஆனதால் ஜீவாவை ஆனந்தஜோதி எழுப்பியுள்ளார். அப்போது ஜீவா பேச்சு மூச்சு இல்லாமல் இருந்ததை அடுத்து அதிர்ச்சி அடைந்தார்.

கழுத்தை நெரித்த அடையாளம்
இதையடுத்து ஜீவாவை தூக்கிக் கொண்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். ஜீவாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்து பல மணி நேரம் ஆகிவிட்டதாகவும் அவரது கழுத்தை நெரித்த அடையாளமும் இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

ஜீவாவுக்கு பேச்சு மூச்சில்லை
இதுகுறித்து ஆனந்தஜோதியிடம் ராம்குமார் கேட்டுள்ளார். அப்போது ஜீவா மதியம் வேளையில் தன்னுடன் தூங்கிக் கொண்டிருந்ததாகவும் தான் வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு வந்து பார்த்தபோது ஜீவா பேச்சு மூச்சில்லாமல் கிடந்தார்.

மகனை கொலை செய்தது அம்பலம்
இதனால் சந்தேகம் அடைந்த ராம்குமார் வி சத்திரப்பட்டி போலீஸில் புகார் தெரிவித்துள்ளார். அதிலும் தனது மனைவி ஆனந்தஜோதி மீது சந்தேகம் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இதையடுத்து தனிப்படை போலீஸார் ஆனந்தஜோதியை விசாரணை செய்த போது மகனை தானே கொலை செய்தது அம்பலமானது.

நெருக்கம்
ஆனந்தஜோதிக்கும் ராம்குமாரின் உறவினர் மருதுபாண்டி என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. கடந்த இரு நாட்களுக்கு முன்னர் இருவரும் நெருக்கமாக இருந்ததை ஜீவா பார்த்துவிட்டான்.

இருவர் கைது
இதை தனது கணவர் ராம்குமாருக்கு கூறிவிடுவானோ என்ற அச்சத்தில் ஆனந்தஜோதியும் மருதுபாண்டியும் ஜீவாவின் வாயை பொத்தி கழுத்தை நெரித்து கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications