சொந்தப்பணத்தை வாரி இறைக்கும் டாக்டர் சரவணன்... நிவாரணப் பணிகளிலும் உட்கட்சி அரசியல்
மதுரை: மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதி திமுக எம்.எல்.ஏ.வும், மருத்துவ அணி நிர்வாகியுமான டாக்டர் சரவணன் கொரோனா நிவாரணப் பணிகளுக்காக சொந்தப் பணத்தை வாரி இறைத்து வருகிறார்.
தினமும் திருப்பரங்குன்றம் தொகுதிக்கு விசிட் அடிக்கும் இவர், அங்குள்ள விவசாயிகள், தொழிலாளர்கள், வியாபாரிகள் என பல தரப்பினரையும் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிகிறார். அதோடு மட்டுமல்லாமல் அது தொடர்பாக மாவட்ட ஆட்சியரை உடனடியாக அந்த இடத்தில் இருந்தே தொடர்பு கொண்டு பேசி தீர்வு காண்பதற்கு வழியமைத்துக் கொடுக்கிறார்.

மதிமுகவில் இருந்து வந்தவர் என்பதால் டாக்டர் சரவணனை மதுரை திமுக நிர்வாகிகள் சிலர் வேண்டாத வெறுப்போடு தான் பார்த்து வருகின்றனர். ஆனால் அதையும் மீறி எதைப்பற்றியும் பொருட்படுத்தாமல் கொரோனா கால நிவாரணப் பணிகளில் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பாக நம்மிடம் பேசிய மதுரை மாநகர திமுக நிர்வாகி ஒருவர், யாரிடமும் ஒரு பைசா கூட வாங்காமல் ரூ.50 லட்சம் வரை தனது சொந்த நிதியை சரவணன் செலவழித்துள்ளார் என்றும் ஆனால் அவரின் செயல்பாடுகள் இங்குள்ள ஒரு சில நிர்வாகிகளின் கண்களை உறுத்துவதாகவும் தெரிவித்தார்.

மதுரை புறநகர் செயலாளரான மூர்த்தி, தனது மாவட்டத்திற்குட்பட்ட மேலூர், மதுரை கிழக்கு, போன்ற பகுதிகளில் ஓரளவு நிவாரணப் பொருட்களை வழங்குகிறார் என்றும் மதுரை மாநகர செயலாளரான கோ.தளபதி தான் செலவு செய்ய தடுமாறுகிறார் எனவும் கூறினார். மேலும், கோ.தளபதி நிர்வாகிகளை கைகாட்டி விட்டு சென்றுவிடுவதாகவும் இதனால் அவர்கள் உதவிப் பொருட்கள் வழங்க சிரமப்படுவதாகவும் தெரிவித்தார்.
இதுவரை கோ.தளபதி செய்த ஒரே உதவி மதுரை திருநகரில் உள்ள தனது திருமண மண்டபத்தை நிவாரணப் பொருட்கள் விநியோகம் செய்வதற்கு இலவசமாக கொடுத்தது தான் என்றும் தனது மாநகர செயலாளர் பதவிக்கு சரவணன் போட்டியாக வந்துவிடுவாரோ என கோ.தளபதி அஞ்சுவதாகவும் கூறினார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications