ஆதரவாளர்கள் தரும் நெருக்கடி! இடியாப்ப சிக்கலில் டாக்டர் சரவணன்! பரபரக்கும் மதுரை அரசியல்!
மதுரை: மதுரை மாநகர் மாவட்ட பாஜக தலைவர் டாக்டர் சரவணன், மீண்டும் திமுகவில் இணையவிருப்பதாக தகவல்கள் உலா வருகின்றன.
டாக்டர் சரவணனை நம்பி மதுரையில் அரசியல் செய்து வரும் நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள், ''அண்ணே மீண்டும் திமுகவுக்கே போகலாம்'' என அவரை நச்சரிக்க ஆரம்பித்துள்ளார்களாம்.
இதனால் இடியாப்ப சிக்கலில் சிக்கிக்கொண்டதை போல் உணரும் அவர், அடுத்ததாக என்ன முடிவெடுக்கலாம் என்ற யோசனையில் ஆழ்ந்திருப்பதாக தெரிவிக்கிறார்கள் உள்விவரம் அறிந்தவர்கள்.

டாக்டர் சரவணன்
திமுகவில் திருப்பரங்குன்றம் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தவர் டாக்டர் சரவணன். இவருக்கு உள்ளூர் அரசியல் காரணமாக கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுகவில் மீண்டும் சீட் கிடைக்கவில்லை. ஐ பேக் டீம் பலத்த சிபாரிசு செய்தும் இவருக்கு சீட் கொடுக்காததால், திருப்பரங்குன்றம் தொகுதியை அதிமுகவின் ராஜன் செல்லப்பாவிடம் பறிகொடுத்தது திமுக. இதனிடையே தனக்கு சீட் கிடைக்காத ஆற்றாமையில் உணர்ச்சிவசப்பட்டு பாஜகவில் இணைந்தார் டாக்டர் சரவணன்.

முக்கியப் பதவி
பாஜகவில் மதுரை மாநகர் மாவட்ட தலைவர் பதவி டாக்டர் சரவணனை தேடி வந்தது. அவரும் அந்தப் பதவிக்கேற்ற முறையில் தனது களப்பணிகளால் கட்சியின் மாநில மற்றும் தேசியத் தலைமையின் கவனத்தை ஈர்த்தார். இதனிடையே மத்திய அரசின் கீழ் வரும் வாரியங்களில் ஏதேனும் ஒரு வாரியத்தில் தலைவர் பதவியை டாக்டர் சரவணன் எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால் இதற்கு பாஜக தலைமையிடம் இருந்து முறையான பதில் எதுவும் வரவில்லை எனக் கூறப்படுகிறது.

ஆதரவாளர்கள் நெருக்கடி
இருப்பினும் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் சரவணன் கட்சி நிகழ்ச்சிகளை நடத்தி வரும் சூழலில், அவரது ஆதரவாளர்கள் மீண்டும் திமுகவுக்கே போகலாம் என அவரை குடைந்தெடுக்க ஆரம்பித்துள்ளார்களாம். சரவணனும் தன்னால் முடிந்தவரை பல்வேறு காரணங்களை கூறி ஆதரவாளர்களை அமைதிப்படுத்தி வருகிறாராம். கட்சிக்காக இந்த ஒரு வருடத்தில் பல லட்சங்களை செலவு செய்த உங்களுக்கு, வாரியத் தலைவர் பதவி கூட கொடுக்க விரும்பாத இடத்தில் நீங்கள் ஏன் இருக்க வேண்டும் என அடிபொடிகள் சரவணனை உசுப்பி விடுகிறார்களாம்.

அரசியலில் சாதாரணம்
இதனால் அவருமே லேசான தடுமாற்றத்தில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. டாக்டர் சரவணன் அகமுடையார் சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால் தென்மாவட்டங்களில் அவரது தேவையை திமுகவுமே விரும்புவதாக தெரிகிறது. அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா என சூரியன் திரைப்படத்தில் வரும் நடிகர் கவுண்டமணியின் வசனத்திற்கேற்ப மதுரையில் எதுவும் எப்போதும் நிகழலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
திமுகவில் உதயநிதிக்கு செயல் தலைவர் பதவி? மெல்ல நகரும் திட்டம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
திமுகவில் இருந்து தூக்கலாம்! மோடியை பார்த்ததும் புது தெம்பில் விஜய்! ஆதவ் அர்ஜுனாவுடன் அவசர மீட்டிங் -
"வாயை மூடி பேசவும்" மாவட்டச் செயலாளர்கள் கண்ட்ரோலில் திமுக குழு.. விரக்தியில் அடிமட்ட தொண்டர்கள்! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம்












Click it and Unblock the Notifications