Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எல்லாத்தையும் மாத்தணும்! ராமநாதபுரத்திற்கு நோ? மதுரை பக்கம் திரும்பும் மோடி? கைக்கு வந்த ரிப்போர்ட்

Subscribe to Oneindia Tamil

மதுரை: லோக்சபா தேர்தலில் பிரதமர் மோடி தமிழ்நாட்டில் போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதியாகி வருகிறது. இதற்கான ஆலோசனைகள் நடந்து வருவதாக பாஜக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேசிய அளவில் பாஜக மிகப்பெரிய கட்சியாக உள்ளது. ஏன் உலக அளவில் அதிக தொண்டர்கள் கொண்ட கட்சியில் பாஜக ஒன்றாக உள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் என்னவோ பாஜகவிற்கு பெரிய ஆதரவு இல்லை.

Is PM Modi planning of contesting in Madurai instead of Ramanathapuram in 2024 Lok Sabha elections?

கடந்த லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜக சார்பாக ஒருவர் கூட எம்பியாக தேர்வாகவில்லை. அந்த அளவிற்கு பாஜகவிற்கு தமிழ்நாட்டில் பலம் இல்லாத சூழ்நிலை உள்ளது. பாஜகவிற்கு சில மாவட்டங்களில் சரியான பூத் கமிட்டி கூட இல்லாத நிலை உள்ளது.

பூத் கமிட்டியில் ஆள் போடுவதற்கு கூட உறுப்பினர்கள் இல்லாத சூழ்நிலை உள்ளது. தமிழ்நாடு மட்டுமின்றி தெலுங்கானா, ஆந்திரா, கேரளா போன்ற தென் மாநிலங்களிலும் பாஜக பெரிதாக வலுவாக இல்லை.

பாஜகவை தென்னிந்தியாவில் வலுப்படுத்தும் விதமாகவும், தமிழ்நாட்டில் பாஜகவின் கால் தடத்தை பதிக்கும் விதமாகவும் பிரதமர் மோடி சில திட்டங்களில் இறங்கி உள்ளாராம். தென்னிந்தியாவின் அரசியல் சூழ்நிலையை, முக்கியமாக தமிழ்நாட்டின் அரசியல் சூழ்நிலையை மொத்தமாக மாற்ற வேண்டும் என்ற திட்டத்தில் பாஜக சில ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறதாம்.

தமிழ்நாடு போட்டி: 2024 லோக்சபா தேர்தலில் பிரதமர் மோடி ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சு எழுந்தது. கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் வாரணாசி, குஜராத்தில் உள்ள வதோதரா தொகுதிகளில் பிரதமர் மோடி போட்டியிட்டார். இரண்டு தொகுதிகளிலும் பிரதமர் மோடி வெற்றிபெற்றார்.

அதன்பின் வதோதரா தொகுதியில் பிரதமர் மோடி எம்பி பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில் 2024 லோக்சபா தேர்தலில் தென் இந்தியாவில் கவனம் செலுத்த பாஜக முடிவு செய்துள்ளது. இந்த நிலையில்தான் 2024 லோக்சபா தேர்தலில் பிரதமர் மோடி ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுவது தொடர்பாக சமீபத்தில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா ஆலோசனை செய்துள்ளார்.

ஆலோசனை: தென் மாநில பாஜக தலைவர்கள், பொதுச்செயலாளர் கலந்து கொண்ட கூட்டத்தில் ஜே.பி நட்டா இந்த திட்டத்தை தெரிவித்து அது தொடர்பாக நேற்று ஆலோசனை கேட்டு இருக்கிறார். . இதற்கு பெரும்பாலான தலைவர்கள், உடனடியாக ஆதரவு வழங்கி உள்ளனர். மோடி ராமநாதபுரத்தில் போட்டியிட வேண்டும் என்று தீவிரமாக கோரிக்கை வைத்துள்ளனர். இதனால் மோடி எங்கே ராமநாதபுரத்தில் போட்டியிடுவாரோ என்று கேள்வி எழுந்துள்ளது.

இதையடுத்தே தற்போது பாஜக தலைவர் அண்ணாமலையும் ராமநாதபுரத்தில் இருந்து தன்னுடைய பேரணியை தொடங்கி உள்ளார். தமிழ்நாட்டில் அதிக எம்பிக்களை வெல்ல பாஜக முடிவு செய்துள்ளது. தமிழ்நாட்டில் எப்படியாவது பாஜகவை வளர்க்க வேண்டும் என்று அந்த கட்சி முடிவு செய்துள்ளது. இதனால் தமிழ்நாட்டில் ராமநாதபுரம் தொகுதியில் மோடி போட்டியிட வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது.

லோக்சபா தேர்தலில் இந்த முறை வடக்கில் பாஜகவிற்கு சரிவு ஏற்படும் என்று கணிப்புகள் தெரிவிக்கின்றன. அதேபோல் காங்கிரஸ் பெரிய எழுச்சி அடையும் என்றும் கணிப்புகள் தெரிவிக்கின்றன. அப்படி இருக்க வடக்கில் இழக்கும் இடங்களை தெற்கில் தட்டி தூக்கும் விதமாக மோடி தென் மாநிலத்தில்.. அதாவது தமிழ்நாட்டில் ராமநாதபுரம் தொகுதியில் மோடி போட்டியிட வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது.

மதுரை: இந்த நிலையில் இந்த லிஸ்டில் மதுரையும் சேர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. ராமநாதபுரத்தில் வெற்றி வாய்ப்பு குறைவாக இருக்கலாம் என்று சென்ற ரிப்போர்ட் காரணமாக மதுரையில் களமிறங்கலாமா என்றும் ஆலோசனைகள் செய்யப்பட்டு வருகிறதாம். கோவையில் பாஜக வலுவாக இருந்தாலும், மத்திய தமிழ்நாட்டில், தென் தமிழ்நாட்டில் போட்டியிட வேண்டும் என்ற திட்டம் உள்ளதாம்.

இதற்கு மதுரையே சரியாக இருக்கும் என்று டெல்லி கருதுகிறதாம். ராமநாதபுரத்தில் உளவுத்துறை ரிப்போர்ட்படி சாதகமான சூழ்நிலை இல்லை. கொங்கில், மதுரையில், கூட போட்டியிடலாம். ஆனால் ராமநாதபுரத்தில் போட்டியிட முடியாது. அங்கே பாஜகவிற்கு பூத் கமிட்டி கூட இல்லை. அப்படி இருக்க வெற்றிபெறுவது மிக கடினம். மோடி போட்டியிட்டு தோல்வி அடைந்தால் அது பாஜகவிற்கு பெரிய அவமானமாக இருக்கும். அதனால் ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்று டெல்லி நினைக்கிறதாம். இதனால்தான் ராமநாதபுரத்தில் போட்டியிடும் முடிவை பிரதமர் மோடி மற்றும் பாஜக கைவிடும் திட்டத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே மதுரை பக்கம் மோடி போகஸ் திரும்பும் வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+