ஜனவரி 22 முதல்.. காலவரையற்ற ஸ்டிரைக்கில் குதிக்கிறார்கள் அரசு ஊழியர்கள்
மதுரை: ஜனவரி 22ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதிக்கப் போவதாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு காரணமாக தமிழகம் முழுவதும் ஜனவரி 22ம் தேதி முதல் அரசு அலுவலகங்களின் இயக்கம் முடங்கும் என்று தெரிகிறது.

ஊதிய முரண்பாடுளைக் களைய வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி தொடர்ந்து பல்வேறு வகைகளில் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர் அரசு ஊழியர்கள். ஆனால் இதுவரை அதற்கு நிரந்தர தீர்வு எட்டப்படாமல் உள்ளது.
ஜாக்டோ ஜியோ அமைப்பின் போராட்டம் தொடர்பாக உயர்நீதிமன்றத்திலும் வழக்கு உள்ளது. இந்த வழக்கு விசாரணை 11ம் தேதி வரவுள்ளது. இந்த நிலையில் காலவரையற்ற போராட்டத்தை ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளது.
ஜனவரி 11ம் தேதி வழக்கில் என்ன மாதிரியான உத்தரவு வந்தாலும் தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் 22ம் தேதி முதல் காலவரையற்ற போராட்டம் தொடங்கும் என மதுரையில் நடந்த ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் உயர் நிலைக் கூட்டத்திற்குப் பின்னர் நிர்வாகிகள் கூட்டாக அறிவித்தனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications