அண்ணாமலை பக்கத்தில் வந்தபோது திடீரென சீறிய காளை மாடு.. பதறிய பாஜகவினர்.. சூழ்ந்து நின்று காத்தனர்
மதுரை: மேலூர் பகுதியில் பாதயாத்திரையை இன்று தொடங்கிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை வரவேற்க கொண்டு வந்த ஜல்லிக்கட்டு காளை கூட்டத்தை பார்த்து திமிறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை 'என் மண் என் மக்கள் யாத்திரை' என்ற பெயரில் தமிழகம் முழுவதும் நடைபயணம் மேற்கொள்கிறார். தமிழகம் முழுவதுமாக 168 நாட்கள் அண்ணாமலையின் பாத யாத்திரை நடைபெறுகிறது. சென்னையில் அவரது யாத்திரை நிறைவு பெறுகிறது. இதில் பிரதமர் மோடி பங்கேற்கலாம் என்று கூறப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக பாஜகவை தமிழ்நாட்டில் வலிமைப்படுத்தும் நோக்கில் அண்ணாமலை இந்த பாத யாத்திரையை மேற்கொள்கிறார்.

கடந்த மாதம் 28 ஆம் தேதி இராமேஸ்வரத்தில் இருந்து அண்ணாமலையின் பாத யாத்திரை தொடங்கியது. உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்த பாத யாத்திரையை தொடங்கி வைத்தார். அன்று முதல் அண்ணாமலை தொடர்ச்சியாக யாத்திரை மேற்கொண்டுள்ளார். யாத்திரைக்கு இடையே கட்சி தொண்டர்கள் மத்தியில் பேசும் அண்ணாமலை திமுகவை கடுமையாக விமர்சித்து பேசி வருகிறார்.
மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி உள்பட பல்வேறு பகுதிகளில் பாதயாத்திரையாக வந்த அண்ணாமலையின் நடைபயணம் இன்று மதுரை மாவட்டம் மேலூருக்கு வந்தது மேலூரில் உள்ள அரசு கலைக்கல்லூரி முன்பாக அண்ணாமலை இன்று தனது பாத யாத்திரையை துவக்கினார். பாஜக கட்சி தொண்டர்கள் அவருக்கு வரவேற்பு அளிக்க பெருமளவில் அங்கு கூடியிருந்தனர். அண்ணாமலைக்கு வரவேற்பு அளிக்கும் விதமாக நான்கு ஜல்லிகட்டு காளைகளையும் கட்சி நிர்வாகிகள் அங்கு அழைத்து வந்து இருந்தனர்.
காளைகள் அங்கு கட்டி வைக்கப்பட்டு இருந்தது. அண்ணாமலை பாத யாத்திரை துவங்கும் முன்பாக காளையை பார்த்ததும் ஒவ்வொரு காளையாக வணங்கினார். அப்போது ஒரு ஜல்லிக்கட்டு காளை மட்டும் கூட்டத்தை பார்த்ததும் மிரண்டு திடீரென்று திமிறியது. காலை தூக்கி போட்டது. அங்கும் இங்கும் ஓடுவதற்கு காளை முயற்சித்ததால் சுற்றி நின்றவர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக பாஜகவினர் அண்ணாமலையை சூழ்ந்து நின்று காத்தனர். ஓடிவந்த காளையின் உரிமையாளர் உடனடியாக வந்த காளையை கட்டுக்குள் கொண்டுவந்தார்.
அதன்பிறகே காளை சாந்தமானது. அதன்பின்னர் அந்த காளைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அண்ணாமலை தனது பாத யாத்திரையை தொடங்கியிருக்கிறார். மேலூரில் இருந்து பாதயாத்திரையை தொடங்கியுள்ள அண்ணாமலை மேலூர் பேருந்து நிலையத்தில் தொண்டர்கள் மத்தியில் பேச உள்ளார். அதனைத் தொடர்ந்து பல்வேறு பகுதிகளுக்கும் அண்ணாமலை தனது பாத யாத்திரையை மேற்கொள்ள உள்ளார்.
-
விஜய் VS உதயநிதி VS அண்ணாமலை.. தமிழ்நாடு அரசியலில் புதிய இன்னிங்ஸ்.. யாருக்கு சாதகம் தெரியுமா? -
விஜய், உதயநிதி, அண்ணாமலை.. இளம் முகம் இல்லாமல் தடுமாறும் அதிமுக.. எடப்பாடிக்கு அடுத்து யார்? -
அண்ணாமலை! எங்கிருந்தாலும் வாழ்க..! சொன்னது நயினார் நாகேந்திரன் இல்லை! யார்னு பாருங்க! -
Annamalai: பாஜக தலைவர்களுக்கு சுமையாக இருக்க விரும்பவில்லை! அண்ணாமலை உருக்கம்! -
Annamalai: புதிய கட்சியா.. பாஜகவில் நீடிப்பாரா.. நாளை 12 மணிக்கு முடிவை அறிவிக்கும் அண்ணாமலை? -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார் -
அண்ணாமலை பேட்டி.. டிசம்பர் 2025-லேயே விலக முடிவு செஞ்சேங்க.. அப்போ அமித் ஷா சொன்னது என்ன தெரியுமா? -
அண்ணாமலைய வச்சு மாஸ்டர் பிளான்! பின்னணியில் பிரபலம்.. பாஜகவின் A டீமா? 50% டெல்லி ப்ளூபிரிண்ட் ரெடி -
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு












Click it and Unblock the Notifications