மோடிக்குத்தானே.. இப்போது டேக் செய்துட்டா போச்சு.. நாடாளுமன்றக் கட்டட ட்வீட்டிற்கு கமல் பதில்
மதுரை : நாடாளுமன்றக் கட்டட ட்வீட்டை பிரதமர் மோடிக்கு இப்போது டேக் செய்துவிடலாம் என கமல்ஹாசன் தெரிவித்தார்.
வருகிற 2021 சட்டமன்றத் தேர்தலுக்காக சீரமைப்போம் தமிழகத்தை என்ற தலைப்பில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தனது முதலாம் கட்ட பிரச்சாரத்தை மதுரை மற்றும் நெல்லை மண்டலங்களில் இன்று முதல் டிசம்பர் 16 வரை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.
அந்தவகையில் இன்று மதுரையில் இருந்து துவங்குவதற்காக கமல்ஹாசன் மதுரை விமான நிலையத்திற்கு வருகை தந்தபோது அவர் கூறுகையில் காவல்துறையினரால் கடைசி நேரத்தில் சில இடங்களில் பிரச்சாரம் செய்ய தடை விதித்துள்ளனர்.

அனுபவம் இருக்கு
எங்களுக்கு தடைகள் புதிது இல்லை. தடைகள் குறித்து அனுபவம் இருக்கிறது. அதற்கான ஒத்திகையும் பார்த்து விட்டோம். பதற்றமின்றி மக்களை சென்று சேர்வோம். புதிய நாடாளுமன்ற கட்டிடம் எதற்கு என்று டுவிட் செய்தது மோடிக்கு டேக் செய்யவில்லை என கேட்கிறீர்கள். தற்போது செய்து விடலாம் என்றார்.

பிரச்சாரம்
கடந்த முறை தேர்தல் பிரச்சாரத்தின்போது சர்ச்சையான கருத்தால் பிரச்சாரம் தடைபட்டது குறித்த கேள்விக்கு கருத்து யாருக்கு குத்தலாக இருக்குமோ அவர்கள் தடைகளை செய்வார்கள், அதனை மீறியும் பிரச்சாரம் தொடரும் என்றார் கமல்ஹாசன்.

கமல்ஹாசன் பதில்
மக்கள் நீதி மய்ய மற்றும் ஆன்மீக அரசியல் ஒன்று சேருமா என்ற கேள்விக்கு, கமல்ஹாசன் பதில் அளிக்கையில் கட்சிகள் பிளவு பெற வாய்ப்பும் உள்ளது, கூடவும் உள்ளது அதனை மட்டும் கூற இயலும். மூன்றாவது அணி அமையுமா என்கிறீர்கள் அது சாத்தியமே... ஆனால் எப்போது சாத்தியம் என்பதை இப்போது பெறமுடியாது என்று கூறினார்.

மக்கள்
கமல்ஹாசன் தனது ட்விட்டரில் சீனப்பெருஞ்சுவர் கட்டும் பணியில் ஆயிரக்கணக்கான மக்கள் மடிந்து போனார்கள். மக்களைக் காக்கத்தான் இந்தச் சுவர் என்றார்கள் மன்னர்கள். கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்து பாதி இந்தியா பட்டினி கிடக்கையில், ஆயிரம் கோடியில் பாராளுமன்றம் கட்டுவது யாரைக் காக்க? பதில் சொல்லுங்கள் என் மாண்புமிகு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமரே என கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications