கமல்ஹாசன் மன்னிப்பு கேட்டே தீர வேண்டும்.. எச். ராஜா
மதுரை: சுதந்திர இந்தியாவின் முதல் இந்து தீவிரவாதி என்கிற பேச்சுக்கு கமலஹாசன் மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும் என பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா கூறியுள்ளார்.
மதுரை கரிமேட்டில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

"சுதந்திர இந்தியாவின் முதல் இந்து தீவிரவாதி கோட்சே என சொல்லும் கமல் சுதந்திரத்திற்கு பின்னர் நவகாளி கலவரத்தை கமல் கலவரம் அல்ல என கூறுகிறாரா?. இந்து, சீக்கிய பெண்களுக்கு எதிராக நடந்த வன்முறையை மறக்க முடியாது. காந்தியடிகள் கொல்லப்பட்டதை முதலில் கண்டித்து ஆர்.எஸ்.எஸ், இந்துக்களுக்கு தீவிரவாத எண்ணம் கிடையாது. கலவரத்தை உண்டாக்கும் எண்ணத்துடன் கமல் பேசி உள்ளார்.
கமலை போன்று ஒரு ஒழுக்கம் கெட்டவரை நான் பார்த்து கிடையாது. கமல் தீய நோக்கத்துடன் தான் பேசி உள்ளார். கமல் அரவக்குறிச்சி அருகே உள்ள பள்ளப்பட்டியில் பேசுவதற்கு என்ன காரணம். கமல் ஒரு இந்து விரோதி, திரைப்படத்தில் கூட இந்து கொள்கைக்கு எதிராக பேசி உள்ளார்.
கமலின் அனைத்து விசயங்களை எடுத்து பேசினால் கமலால் தாங்க முடியாது. கமல் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். நீதிமன்றத்தில் என்ன தீர்ப்பு வேண்டுமானாலும் வரட்டும். ஆனால் மக்கள் மன்றத்தில் கமலை எதிர்க்க வேண்டும்.
100 கோடி இந்துக்களை அவதூறாக பேசி உள்ளார். இஸ்லாமியர்களின் கைக்கூலியாக இருக்கிறார் கமல். கடலூர் மாணவி திலகவதி படுகொலைக்கு ஏன் நியாயம் கேட்கவில்லை. ராஜேந்திர பாலாஜியின் பேச்சு சரியானது. பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க கமல் மன்னிப்பு கேட்க வேண்டும்.
கமலுக்கு விஸ்வரூபம் படம் பிரச்சினையில் ஜெய்லுலாதீன் பேசியது நியாயமானதா. இந்து கோவில்கள் சர்ச் ஆகவும், மஜிதியாகவும் மாறி உள்ளது. அனைத்து மதத்தை புன்படுத்தும் விதத்தில் பேசினாலும் நான் எதிர்ப்பேன். கமல் விவகாரத்தில் நியூஸ் எக்ஸ் செய்தியாளர் கேள்விக்கு தான் மோடி பதில் சொல்லி உள்ளார். கமலுக்கு பதில் சொல்லவில்லை. இலங்கையில் சர்ச் தாக்குதலுக்கு இஸ்லாமியர்களே காரணம்" என தெரிவித்தார் ராஜா.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications