நடிகர் கமல்ஹாசனுக்கு கொள்கை ஏதுமில்லை.. அரசியலிலும் நடித்து வருகிறார்.. செல்லூர் ராஜூ அட்டாக்!

கமல்ஹாசனின் கொள்கை பணத்துக்காக விலை போகக் கூடியது என்று செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

மதுரை: மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசனுக்கு கொள்கை எதுவும் இல்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார். சினிமாவை விட அதிக பணம் கிடைக்கும் என்பதால் அரசியலிலும் கமல்ஹாசன் நடிப்பதாக கூறிய செல்லூர் ராஜூ, கமல்ஹாசன் பேசுவது அவருக்கே புரியாது என்று தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார்.

அதிமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.தென்னரசு, தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன், சுயேட்சைகள் உள்பட 77 பேர் போட்டியிடுகின்றனர்.

ஈரோட்டில் கமல்ஹாசன்

ஈரோட்டில் கமல்ஹாசன்

இதில் திமுக கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக திமுக, விசிக, சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட பல்வேறு கூட்டணிக் கட்சித் தலைவர்களும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் திமுக கூட்டணியில் புதிதாக இடம்பிடித்துள்ள மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக இரு நாட்கள் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். இதற்காக இன்று கமல்ஹாசன் ஈரோடு வந்துள்ளார்.

கமலுக்கு கொள்கையில்லை

கமலுக்கு கொள்கையில்லை

இந்த நிலையில் மதுரை காளவாசலில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் அதிமுகவினர் ஜெயலலிதா 75ஆவது பிறந்தநாள் கொண்டாடுவது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கூறுகையில், நடிகர் கமல்ஹாசனுக்கு கொள்கை என்று ஏதுமில்லை. அவர் ஒரு சிறந்த நடிகர் அவ்வளவு தான். அவர் என்ன பேசுகிறார் என்பது அவருக்கே தெரியாது.

அதிர்ச்சி வைத்தியம்

அதிர்ச்சி வைத்தியம்

ஈரோடு தொகுதி மக்கள் வித்தியாசமான மக்களாக உள்ளனர். ஆளும் கட்சிக்கு ஒரு அதிர்ச்சி வைத்தியத்தை ஈரோடு மக்கள் கொடுப்பார்கள். எது மாதிரியும் இல்லாமல் புது மாதிரி உள்ளது ஈரோடு கிழக்கு தொகுதி. இடைத்தேர்தலில் எது செய்தால் மக்களை கவர முடியும் என செயல்படும் திமுகவினருக்கு நோபல் பரிசு வழங்கலாம். கமல்ஹாசனின் கொள்கை, பணத்துக்காக விலை போகக்கூடிய கொள்கை. இவரெல்லாம் பணத்துக்காக நடிக்க கூடியவர்.

பணத்திற்காக அரசியலில் நடிக்கிறார்

பணத்திற்காக அரசியலில் நடிக்கிறார்

சினிமாவில் நடிப்பதை விட அதிகமாக பணம் கிடைக்கும் என்பதற்காக கமல்ஹாசன் இங்கு நடித்து வருகிறார். அவர் ஒரு சிறந்த நடிகர் அவ்வளவு தான். அவர் பேசுவதை கவனித்தால் திமுகவுக்கு வாக்கு போட நினைப்பவர்கள் கூட வாக்கு போட மாட்டார்கள். திமுக அந்த காலத்து கட்சி. கமல்ஹாசனை எவ்வாறு ஆஃப் பண்ணுவது என்பது திமுகவிற்கு நன்கு தெரிந்துள்ளது. கமல்ஹாசன் ஒரு கொள்கைவாதி கிடையாது என்று தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+