கந்தன்மலைக்கு நெருக்கடி.. தியேட்டர்களில் வெளியிட முடியாதது ஏன்.. தயாரிப்பாளர் விளக்கம்
மதுரை: திருப்பரங்குன்றம் மலையை மையமாக வைத்து பாஜக ஆதரவாளர்களால் தயாரிக்கப்பட்ட 'கந்தன்மலை' திரைப்படத்தை தியேட்டர்களில் வெளியிட முடியாத நெருக்கடி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே இந்த திரைப்படம் இன்று 'யூ டியூப்'பில் படம் வெளியாகிறது. இந்த படத்தில் கதையின் நாயகனாக பாஜக மூத்த தலைவர் ஹெச் ராஜா நடித்துள்ளார். இப்படத்தின் கதைக்களம் என்பத திருப்பரங்குன்றம் மலை அருகே உள்ள ஒரு கிராமம் ஆகும். படத்தில் நாடக காதலும் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழக பாஜகவில் மூத்த தலைவர்களில் ஒருவரான ஹெச் ராஜா பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினர் ஆவார். இவர் கோயில்கள், கடவுள் நம்பிக்கை போன்ற விஷயங்களில் தீவிர ஈடுபாடு உடையவர். அதேநேரம் திமுகவை ஆரம்ப காலம் முதலே கடுமையாக விமர்சித்து வருகிறார். அண்மையில் திருப்பரங்குன்றம் விவகாரம் சர்ச்சையாக மாறியிருக்கிறது.

திருப்பரங்குன்றம் மலையின் உச்சியில் உள்ள தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என இந்து அமைப்புகள் விரும்புகின்றன. இதற்கு பாஜகவும் முழு ஆதரவு தெரிவித்துள்ளது.அதேநேரம் அரசு சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என கூறி மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டும் நிறைவேற்றவில்லை. இது தொடர்பாக அவமதிப்பு மற்றும் மேல்முறையீட்டு வழக்குகள் குறித்த விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது
இந்த சூழலில் திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவது தொடர்பான பிரச்னை கார்த்திகை மாதத்தில் ஏற்பட்டு வருவதாக இந்து அமைப்புகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்நிலையில் திருப்பரங்குன்றம் மலை குறித்து 'கந்தன் மலை' என்று திரைப்படத்தை பாஜகவினர் தயாரித்துள்ளனர். ஹெச் ராஜா இப்படத்தின் கதாநாயகனாக நடித்துள்ளார். வீர முருகன் என்பவர் இயக்கி உள்ளார். சிவ பிரபாகரன் - சந்திரசேகர் ஆகியோர் படத்தை தயாரித்துள்ளனர்.
இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியானது. அப்போது எச்.ராஜா முறுக்கு மீசையுடன் கழுத்தில் ருத்ராட்ச மாலை, கையில் ருத்ராட்ச மாலை அணிந்தபடி நிற்கும் காட்சி இடம் பெற்று இருந்தது.
கந்தன் மலை திரைப்படத்தை பொறுத்தவரை திருப்பரங்குன்றம் மலை அருகே உள்ள ஒரு கிராமமே கதைக்களமாக இருக்கிறது. அங்கு நடக்கும் நாடக காதல், கோயில்களில் அறநிலையத்துறையின் செயல்பாடுகள் குறித்து விமர்சிக்கும் வகையில் படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தபடத்தில் ஹெச் ராஜா பஞ்சாயத்து தலைவர் வேடத்தில் நடித்துள்ளார். படத்தில் வில்லன் கேரக்டரில் நடிகர் சேரன்ராஜா நடித்துள்ளார்.
கந்தன் மலை திரைப்படத்தில் பாஜக மாநில ஆன்மிகம் மற்றும் கோயில்கள் மேம்பாட்டு பிரிவு செயலாளர் சிவபிரபாகர், சந்திரசேகரன் ஆகியோர் தயாரித்துள்ள இப்படத்தை வீரமுருகன் இயக்கி உள்ளார். இந்த படத்தில் காதல், வீரம், சண்டை என பல விஷயங்கள் உள்ளதாம். எனினும் ஏன் தியேட்டர்களில் வெளியிடவில்லை என்று பாஜகவினர் தயாரிப்பாளரிடம் கேள்வி எழுப்பி வந்தனர்.
இதற்கு பதில் அளித்த கந்தன்மலை படத்தின் தயாரிப்பாளர் சிவபிரபாகர் கூறுகையில், இரண்டரை மணி நேரம் ஓடும் வகையில் தயாரித்த படம் தற்போது ஒரு மணி நேரத்திற்கு மேலாக ஓடும் வகையில் மறுவடிவமைக்கப்பட்டிருக்கிறது. அறுபது நாளில் இந்த படத்தை தயாரித்து முடித்துள்ளோம். இப்படத்தை இன்று தியேட்டர்களில் வெளியிடுவதாக இருந்தோம். ஆனால் அரசியல் நெருக்கடியால் தியேட்டர்கள் கிடைக்கவில்லை. எங்களுக்கு தியேட்டர் தருவதாக அறிவித்தவர்கள் கூட இப்போது, நீங்களே தியேட்டரை வாடகைக்கு வேண்டுமானால் எடுத்துக் கொள்ளுங்கள். நாங்களாக திரையிட முடியாது எனக்கூறிவிட்டார்கள். அப்படி ஒவ்வொரு தியேட்டரையும் வாடகைக்கு எடுத்து ஓட்டுவது இயலாத காரியம் ஆகும் எனவே யூ டியூப்பில் வெளியிட தீர்மானித்துவிட்டோம். அதன்படி இன்று 'தாமரை' என்ற யூடியூப் தளத்தில் படம் வெளியாகிறது" இவ்வாறு கூறினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications