Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

செட்டிநாட்டு பாணி மேற்கூரை முதல் ஏசி அரங்கு வரை! காரைக்குடி ரயில் நிலையத்தில் என்னென்ன வசதிகள்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: காரைக்குடி ரயில் நிலையம் உலகத் தரத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சுமார் ரூ 20.34 கோடியில் பிரமாண்ட வசதிகளை ரயில்வே செய்துள்ளது. அவை என்னென்ன என்பதை பார்க்கலாம். பயணிகளின் பாதுகாப்பு வசதி குறித்து தெரிந்து கொள்ளலாம்.

Karaikudi railway station

இதுகுறித்து தமிழ்நாடு ரயில் செய்திகள் எனும் சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: செட்டிநாட்டின் பெருமை! காரைக்குடி ரயில் நிலையம் உலகத் தரத்துக்கு மாற்றம்! ₹20.34 கோடியில் பிரமாண்ட வசதிகள்!

தமிழ்நாட்டின் செட்டிநாட்டுக் கட்டிடக்கலை மற்றும் பாரம்பரியத்தின் தலைநகராக விளங்கும் காரைக்குடி ரயில் நிலையம், அம்ரித் பாரத் ரயில் நிலையத் திட்டத்தின் கீழ் (Amrit Bharat Station Scheme - ABSS) ரூ.20.34 கோடி செலவில் அதிநவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது.

மதுரை கோட்டத்தில் அமைந்துள்ள இந்த நிலையத்தின் மறுசீரமைப்புப் பணிகள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டு, பயணிகள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளன. இனிமேல், செட்டிநாடு பாரம்பரியத்தின் அழகை வெளிப்படுத்தும் நவீன ரயில் முனையமாக காரைக்குடி ஜங்ஷன் திகழும்!

பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் புதிய வசதிகள்

காரைக்குடி ரயில் நிலையத்தில் பயணிகளின் பயண அனுபவத்தை மேம்படுத்த, ரூ.20.34 கோடி செலவில் பின்வரும் பிரமாண்ட வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

புதிய நுழைவு வாயில்: நிலையம் எளிதில் தெரியும் வகையில், புதிய மற்றும் விசாலமான நுழைவு, வெளியேறும் ஆர்ச் (Arch) அமைப்பு.

செட்டிநாடு கட்டடக்கலை: ரயில் நிலைய கட்டடத்தின் முன் பகுதியில், வெயில் மற்றும் மழையில் இருந்து பயணிகளைப் பாதுகாக்க, செட்டிநாடு பாணியில் அமைக்கப்பட்ட விசாலமான மேற்கூரை மற்றும் கூரையுடன் கூடிய நடைபாதை.

உள்கட்டமைப்பு

அகலமான வாகனச் சாலைகள் மற்றும் தனிப் பாதசாரிகள் பாதை உட்பட மேம்படுத்தப்பட்ட 'சர்குலேட்டிங் ஏரியா'.
மேம்படுத்தப்பட்ட முகப்பு வேலைகள் (Modern Facade Works).
ஏற்கனவே உள்ள மேம்பாலம் (FOB) மேம்படுத்தப்பட்டதுடன், கூடுதலாக 6 மீட்டர் அகல புதிய மேம்பாலம் கட்டப்பட்டது.

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வசதிகள்

லிஃப்ட் வசதி: பயணிகள் எளிதாக பிளாட்ஃபார்ம்களுக்கு செல்ல, பிளாட்ஃபார்ம் 1, 2&3 மற்றும் 4&5 ஆகியவற்றில் 3 புதிய லிஃப்ட்கள் நிறுவப்பட்டுள்ளன. சாய்வுதளங்கள் (Ramps), மாற்றுத்திறனாளிகளுக்கான கழிவறைகள், முன்பதிவு கவுண்டர்கள் மற்றும் பார்க்கிங் வசதிகள்.

நவீன வசதிகள்

ஏசி காத்திருப்பு அரங்கு: விசாலமான புதிய குளிர்சாதன வசதி கொண்ட காத்திருப்பு அரங்கு, கூடுதல் இருக்கைகள், தாய்ப்பால் கொடுக்கும் அறை, தனித் தனியான கழிவறை/குளியல் வசதிகள். 5 நடைமேடைகளையும் இணைக்கும் வகையில் 3 மின் தூக்கிகள், நடைமேடையில் கூடுதல் இருக்கைகள், உள்ளூர் கலாச்சாரத்தை விளக்கும் வண்ண ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன.

கலை மற்றும் கலாச்சாரம்

செட்டிநாட்டின் உள்ளூர் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் சுவர் ஓவியங்கள் (Mural Art).
பயணிகள் தகவல் அமைப்பு: ரயில் வருகை மற்றும் பெட்டி குறித்த விவரங்கள் அறிய, நவீன ரயில் அறிவிப்புப் பலகைகள், கோச் அறிவிப்புப் பலகைகள் மற்றும் டிஜிட்டல் டிஸ்ப்ளே யூனிட்கள்.

விசாலமான பார்க்கிங்

மேற்கூரைகளுடன் கூடிய நவீன வாகன நிறுத்துமிட வசதி. இருசக்கர வாகனம்: 440 சதுர மீட்டர் பரப்பளவில், 200 இருசக்கர வாகனங்கள் நிறுத்தலாம். நான்கு சக்கர வாகனம்: 276 சதுர மீட்டர் பரப்பளவில், 26 கார்கள் நிறுத்தலாம்.

காரைக்குடி ஜங்ஷன் இனி தினசரி 6000 பயணிகள் மற்றும் ஆன்மீகச் சுற்றுலாப் பயணிகள் பயன்பெறும் வகையில், செட்டிநாட்டின் கலாச்சாரச் செழுமையை பிரதிபலிக்கும் உலகத் தரமான ரயில் முனையமாகச் செயல்படும். இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+