திருநங்கைகள் கடவுளின் ஸ்பெஷல் படைப்பு..’டோரதி’ விமர்சனத்தால் பாதிப்பில்லை! கார்த்திக் சுப்புராஜ் நச்

Subscribe to Oneindia Tamil

மதுரை: திருநங்கைகள் கடவுளின் ஸ்பெஷல் படைப்பு.. ஆனால் அவர்களை வாழ கூட தகுதி இல்லாத சூழலை உருவாக்கியுள்ளது ஒரு வன்முறை தான் எனவும், திருநங்கை பற்றிய படம் வரவே கூடாது என்பது யாருடைய பிரச்சனை? இந்த படம் விவாதிக்கப்பட வேண்டிய படம் ..இந்த விவாதம் வாயிலாக சமூகத்தில் ஒரு நல்ல தீர்வு கிடைக்கட்டும் என 'டோரதி' படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் கூறியுள்ளார்.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகி திரையரங்கின் வெற்றிக்கரமான ஓடிக் கொண்டிருக்கும் 'டோரதி' திரைப்படம் குறித்து சமூக வலைதளங்களில் காரசார விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. மூன்றாம் பாலினத்தவர் தொடர்பாக முற்போக்கு - பிற்போக்குவாதிகள் வலைதள போர் நடத்திக் கொண்டிக்கின்றனர்.

Karthik Subbaraj Transgender

இச்சூழலில், திரைப்படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், நடிகர்கள் ரிஷகாந்த், சனந்த், மதுரை கூடல் நகர் பகுதியில் உள்ள தியேட்டரில் படத்தை ரசிகர்களுடன் பார்த்தனர். தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்," ஆன்லைன் விமர்சனங்கள் எங்களை பெரிதாக பாதிக்கவில்லை. படம் பார்க்காதவர்கள் தான் ஆன்லைனில் விமர்சனம் செய்கிறார்கள். படம் பார்க்காதவர்கள் இந்தப் படத்தை தொடர்ச்சியாக பாராட்டி வருகிறார்கள். மக்களிடையே நல்ல வரவேற்பை படம் பெற்றிருக்கிறது மகிழ்ச்சியாக உள்ளது.

90 காலகட்டத்தில் நடக்கக்கூடிய கதைக்களம் தான் இது. படத்தில் இடம்பெற்றிருக்கும் வசனத்திற்கான அர்த்தம் தவறாக சித்தரிக்கப்படுகிறது. 10 வருடம் கழிந்தும் இப்போது திருநங்கைகள் எந்த சூழலில் இருக்கிறார்கள் என்பதை பார்க்க வேண்டும். அவர்கள், பல்வேறு துறைகளில் உயர்ந்து வந்துள்ளார்கள். அதற்கு இவ்வளவு ஆண்டுகள் போராட்டம் தேவைப்பட்டது. அதை குறிப்பிட்டு தான் அந்த வசனம் வைக்கப்பட்டது. அதை தான் படத்தில் சொல்ல வந்தோம் என படம் பார்த்தவர்களுக்கு புரியும். சிலர் படம் பார்க்காமல் தேவையில்லாத விவாதங்களை கிளப்பி விட்டனர்.

ஆணாக பிறந்தவர், பெண்ணாக உணர்ந்து பெண்ணாக மாற முயற்சி செய்தால் அவர்களை இந்த சமூகம் முடக்க நினைக்கிறது. எவ்வளவு பிரச்சனைகளை தாண்டி அவர்கள் வெளியே வந்து சாதிக்கிறார்கள். அவர்கள் எதிர்பார்ப்பது ஒரு சராசரியா மனித வாழ்க்கை தான். அதை அவர்களின் உணர்வுகளோடு திரைப்படத்தில் காட்டியது குறித்து பல திருநங்கைகள் என்னிடம் நன்றிகளையும் தங்களது மகிழ்ச்சியையும் வெளிப்படுத்துகின்றனர்.

இந்த திரைப்படம் சிறுவர்களிடையே அடுத்த தலைமுறையினரிடையே பாதிப்பை ஏற்படுத்தாது. மாற்றத்தை தான் ஏற்படுத்தும். படத்தின் மெயின் இன்டென்ஷன் அதுதான். நாம் அன்றாட வாழ்வில் பார்க்கும் திருநங்கைகள் சாலையில் இருக்கிறார்கள். பிச்சை எடுக்கிறார்கள். தவறான பாதையில் ஈடுபடுகிறார்கள் அவர்களை ஒரு மனிதர்களாக கூட நாம் மதிப்பதில்லை. இந்த படம் பார்த்தால் அவ்வாறு அவர்களை பார்ப்பவர்களுக்குள் ஒரு மாற்றம் ஏற்படும் அந்த நம்பிக்கையில் தான் இந்த திரைப்படத்தை எடுத்துள்ளோம்.

புராண காலத்தில் இருந்து நாம் மூன்றாவது பாலினத்தவர்களை கேள்விப்பட்டிருக்கிறோம். நாம் வளர்ந்து வரும் போது பல நபர்களை பார்த்துள்ளோம். அவர்களுக்கு பல இழப்புகள் நிகழ்ந்துள்ளது. உடலளவில் ஒரு ஆணாக பிறந்து பெண்ணாக மாற நினைத்து புது பொன்னாக பிறக்க வேண்டும் என அவர்கள் நினைக்கும் அந்த உணர்வை அப்படியே படத்தில் பிரதிபலித்துள்ளோம். இதை வெளியே சொன்னால் அசிங்கம் என இத்தனை வருடமாக அவர்களுக்குள் ஒரு தயக்கத்தை உண்டு பண்ணியது இந்த சமூகம் தானே.

சொந்த வீட்டிலிருந்து வெளியே துரத்துவது கொலை செய்வது என அவர்களுக்கான எதிரான அநீதிகள் பல நிகழ்ந்துள்ளன. திருநங்கைகள் கடவுளின் சிறந்த ஸ்பெஷல் படைப்பு. ஆனால் அவர்களை வாழ கூட தகுதி இல்லாத சூழலை உருவாக்கியுள்ளது ஒரு வன்முறை தானே. கிளைமாக்ஸ் நார்மலாக முடிந்திருந்தால் கார்த்திக் சுப்புராஜ் படம் கிடையாது. கல்யாண விருந்து பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. கல்யாண விருந்து பாடலுக்கு எந்தளவு வரவேற்பு இருந்ததோ அந்த அளவுக்கு முத்து மணி பாடல் ஆரம்பிக்கும் போது ரசிகர்கள் கொண்டாட்டத்தை திரையரங்கத்தில் பார்க்க முடிகிறது." என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+