முதல்ல எதிர்க்கட்சி! இப்போ "கருப்பு எம்ஜிஆர்”.. அண்ணாமலைக்காக ஒட்டப்பட்ட போஸ்டர்! மதுரையில் பரபரப்பு
மதுரை: அதிமுகவின் நிறுவனரும், மறைந்த முன்னாள் முதலமைச்சருமான எம்ஜிஆர் உடன் ஒப்பிட்டு, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு கருப்பு எம்ஜிஆர் என்று ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திற்கு சில தனித்துவ கலாச்சாரங்கள் இருப்பது வழக்கம். அப்படி மதுரைக்கு என்று உணவு, வழிபாடு என்று பிரத்யேகமாக ஏராளமான கலாச்சாரங்கள் இருந்தும், தூங்கா நகரத்தின் போஸ்டர் கலாச்சாரம் எப்போதும் சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. சினிமாவில் நட்சத்திரங்களான ரஜினி, கமல், அஜித், விஜய் தொடங்கி, அரசியல்வாதிகள் வரை டிசைன் டிசைனாக நகைச்சுவையுடன் போஸ்டர் அடிப்பதில் மதுரை மக்களுக்கு நிகர் யாரும் இல்லை என்றே கூறலாம்.

இப்படி ஒரு கற்பனையா என்று மற்ற மாவட்ட மக்கள் வியக்கும் வகையில், மதுரையில் போஸ்டர்கள் அடிக்கப்படுவது வழக்கம். இதற்கு இன்னொரு சான்றாக அமைந்துள்ளது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அடிக்கப்பட்டுள்ள கருப்பு எம்ஜிஆர் போஸ்டர்.
மத்திய பாஜக அரசின் 8 ஆண்டுகள் சாதனை விளக்க பொதுக்கூட்டம் மதுரையில் நடைபெறவுள்ளது. இதற்காக மதுரை வரும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை வரவேற்கும் விதமாக மதுரை மாவட்ட பாஜக நிர்வாகி டாக்டர் சரவணன், கருப்பு எம்ஜிஆர் அண்ணாமலை என்று புதிய போஸ்டரை அடித்து கவனம் ஈர்த்துள்ளார். அந்த போஸ்டரில் புல்லட் பைக்கில் கருப்பு உடையணிந்து அண்ணாமலை ஒரு பக்கத்திலும், இன்னொரு பக்கம் போலீஸ் உடையான காக்கி யூனிஃபார்ம் அணிந்து புல்லட் பைக்கில், டாக்டர் சரவணனும் இடம்பெற்றுள்ளனர்.
ஏற்கனவே அதிமுகவின் எதிர்க்கட்சி என்ற அடையாளத்தை சொந்தம் கொண்டாடி வரும் பாஜக, இப்போது அதிமுகவின் மாபெரும் அடையாளமான எம்ஜிஆர் என்ற பிம்பத்தை கையில் எடுத்துள்ளது. இதுமட்டுமல்லாமல் கருப்பு எம்ஜிஆர் என்று தேமுதிக கட்சியினரால் விஜயகாந்த் என அழைக்கப்பட்டு வரும் நிலையில், தேமுதிகவினரை வம்புக்கு இழுக்கும் வகையில் கருப்பு எம்ஜிஆர் என்று அண்ணாமலைக்கு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்தில் உள்ள பாஜகவின் முக்கிய போராட்டங்களையும், ஆர்ப்பாட்டங்களையும் முன்னெடுத்து வரும் டாக்டர் சரவணன் மதுரை மாநகர் முழுக்க இந்த போஸ்டரை அடித்துள்ளார். அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், பாஜக நிர்வாகிகளின் இந்த போஸ்டர் மதுரை மாவட்ட அதிமுக நிர்வாகிகள் தரப்பில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை! -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
புதுச்சேரியில் அமைச்சர்கள் நியமனம்.. முதல்வர் ரங்கசாமியுடன் கருத்து வேறுபாடு? நமச்சிவாயம் விளக்கம் -
அஸைன்மென்டுடன் இறங்கிய செங்க்ஸ், ஆதவ்.. ஆல் அவுட் ஆகும் அதிமுக.. அடுத்த விக்கெட் யார்? -
இடைத்தேர்தலில் மீண்டும் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடுவீர்களா? மரகதம் குமரவேல் ரியாக்ஷன் என்ன? -
எடப்பாடி மீது அதிமுக எம்எல்ஏக்களுக்கு நம்பிக்கை இல்லை! எரியுதடி மாலானு ஏன் புலம்புறீங்க? தவெக பதிலடி -
திமுகவுடன் குதிரை பேரம் நடத்தியது யார்?.. எடப்பாடிக்கு செங்கோட்டையன் அடுக்கடுக்கான கேள்வி!












Click it and Unblock the Notifications