நீர் மேலாண்மையில் நம் தமிழர்கள் “வேற மாதிரி”.. கீழடி அகழாய்வில் வெளிப்பட்ட புதிய சான்று!

Subscribe to Oneindia Tamil

மதுரை: கீழடியில் நடைபெற்று வரும் 11 ஆம் கட்ட அகழாய்வில், பண்டைய தமிழர்களின் நுட்பமான நீர் மேலாண்மை முறைகள் மற்றும் தொழிற்கூடம் செயல்பட்டதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. இந்த புதிய கண்டுபிடிப்புகள் தமிழர் நாகரிகத்தின் பெருமையை உலகிற்குப் பறைசாற்றுவதாக அமைந்துள்ளது.

சிவகங்கை மாவட்டம், கீழடியில் கடந்த சில ஆண்டுகளாக மத்திய மற்றும் மாநில தொல்லியல் துறைகள் இணைந்து பல்வேறு கட்டங்களாக அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த அகழாய்வுகளில் பண்டைய தமிழர்களின் குடியிருப்புகள், கட்டிட அமைப்புகள், கருவிகள், மண்பாண்டங்கள், ஆபரணங்கள் உள்ளிட்ட பல முக்கிய பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.

Keeladi Excavation Phase

இந்த ஆய்வுகள் மூலம் தமிழர் நாகரிகம் மிகப் பழமையானது என்பதும், பண்டைய தமிழர்கள் முன்னேறிய நகர்ப்புற வாழ்க்கை முறையுடன் வாழ்ந்ததற்கான உறுதியான ஆதாரங்களும் வெளிக்கொண்டு வரப்பட்டன. கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை கீழடியில் அகழாய்வு நடத்தி வருகிறது.

இந்நிலையில், 2017க்குப் பிறகு முதன்முறையாக பண்டைய மனிதர்களின் மேம்பட்ட நீர் மேலாண்மைத் தொழில்நுட்பங்களை வெளிப்படுத்தும் விரிவான செங்கல் சுவர்களுடன் கூடிய ஒரு புதிய பகுதியை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இது இந்தியத் தொல்லியல் துறை கண்டுபிடித்த முதன்மைப் பகுதியிலிருந்து தனித்து நிற்கிறது.

கடந்த 10 கட்ட அகழாய்வுகளில் மட்பாண்டம், நெசவு, இரும்பு மற்றும் மணிகள் தயாரிக்கும் தொழில்கள் கீழடியில் இருந்ததாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்திருந்தனர். இந்நிலையில் 11 ஆம் கட்ட அகழாய்வில் தோண்டப்பட்ட குழிகள் கீழடி மக்களின் ஒரு புதிய தொழிற்கூடத்தை வெளிப்படுத்துகின்றன என்பதை நிரூபிக்கப் போதுமான ஆதாரங்கள் உள்ளதாகத் தொல்லியலாளர்கள் உறுதிபடக் கூறுகின்றனர்.

முறையான ஒரு நீர்வழித்தடமும், மேலும் வடக்கு நோக்கி நீண்டு செல்லும், மூன்று முதல் எட்டு அடுக்கு செங்கற்களைக் கொண்ட ஒரு கட்டமைப்புச் சுவரும் அடையாளம் காணப்பட்டுள்ளன. இது அங்கு வசித்தவர்களின் மேம்பட்ட நீர்வழிக் கட்டுமான நுட்பங்களைப் பறைசாற்றுவதாக அமைந்துள்ளது.

2014 ஆம் ஆண்டு முதல் அகழாய்வு நடைபெற்று வந்த முதன்மைப் பகுதிக்குத் தெற்கே, 2026 மார்ச் மாதம் முதல் 9 குழிகள் தோண்டப்பட்டுள்ளன. தமிழக தொல்லியல் துறை அகழாய்வைக் கைப்பற்றிய 2017-க்குப் பிறகு, தோண்டப்பட்ட அனைத் பிரிவுகளிலுமே கட்டிட அமைப்புகளுக்கான சான்றுகள் வெளிப்பட்டுள்ளது இதுவே முதல்முறை.

பழைய குழிகளுக்கும் புதிய குழிகளுக்கும் இடையே இடைவெளிகள் காணப்படுகின்றன. இது ஒரு சுதந்திரமாக இயங்கிய தொழிற்கூடப் பகுதியாக இருக்கலாம் என்பதைக் காட்டுகிறது. கூடுதல் ஆதாரங்கள் கிடைக்க வேண்டியிருந்தாலும், இதுவும் கீழடியின் ஓர் தொழிற்பகுதியே என்று நாம் உறுதியாக முடிவுக்கு வரலாம் என்று கீழடி அகழாய்வு இயக்குநர் ரமேஷ் மாசேதுங் கூறியுள்ளார்.

மேலும் 7 முதல் 9 குழிகளைத் தோண்டுவதற்குப் பணியாளர்கள் ஆயத்தமாகி வருகின்றனர். இதன் மூலம் கூடுதல் தொல்பொருட்களைக் கண்டெடுத்து, பண்டைய தமிழர்களின் வாழ்க்கை முறையை வெளிக்கொணரலாம் என்று தொல்லியலாளர்கள் நம்புகின்றனர்.

ஒரே அகழாய்வுக் குழியில் மூன்று விதமான நீர் மேலாண்மை அமைப்புகள் கண்டறியப்பட்டுள்ளது கீழடி அகழாய்வு வரலாற்றிலேயே இதுவே முதல்முறை. மூடப்பட்ட கால்வாய், நேர்த்தியாக அமைக்கப்பட்ட சுடுமண் குழாய் மற்றும் சுருள் வடிவிலான குழாய் ஆகியவை கண்டறியப்பட்டுள்ளன.

தொழிலகத் தேவைகளுக்காகவும், நீர் மேலாண்மைக்காகவும் பண்டைய தமிழர்கள் கையாண்ட இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், அவர்களின் நகரமைப்பையும் பொறியியல் திறனையும் வெளிப்படுத்துகிறது என்கிறார்கள் ஆய்வியலாளர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+