கீழடி என்றாலே சிலருக்கு பயம்.. அகழாய்வுகளின் அறிக்கையை வெளியிட முடியல! அமர்நாத் ராமகிருஷ்ணன் ஆதங்கம்
மதுரை: கீழடி அகழ்வாராய்ச்சியை மேற்கொண்ட இந்திய தொல்லியல் துறை ஆய்வாளர் ராமகிருஷ்ணன், வரலாற்றை மாற்றும் அகழாய்வு அறிக்கைகளை வெளியிடுவதில் தடங்கல் இருப்பதாக கூறியுள்ளார். மதுரையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், கி.மு. 300 -இல் தான் நமது சங்கக் காலமும், நாகரீகமும் தொடங்குகிறது என இன்று வரை வரலாற்று மாணவர்களுக்கு கற்றுக் கொடுத்து வருகிறார்கள்.
தமிழகத்தில் நடத்தப்பட்டிருக்கும் ஆய்வுகள் மூலம் பல ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இந்த ஆதாரங்கள் எல்லாம் வெளிப்படையாக வெளி உலகிற்கு தெரியாத காரணத்தாலேயெ நமது வரலாற்றை இன்றும் மாற்ற முடியாமல் இருக்கின்றோம். அது எப்போது மாறும்.. இதை மாற்ற முயற்சிப்பதாலேயே இவ்வளவு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகிறோம் என்று கூறினார்.

கீழடி அகழ்வாராய்ச்சி
தமிழ்நாட்டின் தொன்மை வாய்ந்த நாகரீகங்கள் மற்றும் மக்களின் வாழ்க்கை முறைகள் பற்றிய உண்மைகளை வெளிக்கொணர அகழ்வாராய்ச்சிகளானது நடத்தப்படுகிறது. இதில் கீழடி, ஆதிச்சநல்லூர், கொற்கை போன்ற இடங்களில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சிகள் தமிழ்நாட்டின் தொன்மை நாகரீகத்தை வெளிக்கொணர்ந்துள்ளது.
இதில் கீழடியில் தொல்பொருள் அகழ்வாராய்ச்சிக்கு இந்திய தொல்லியியல் ஆராய்ச்சியாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கியதோடு, பல்வேறு கண்டுபிடிப்புகளை வெளியிட்டார். ஆனால் இந்த அகழ்வாராய்ச்சியினை முழுமையாக முடிக்கும் முன்பே அவரை இடமாற்றம் செய்து உத்தரவிட்டது மத்திய அரசு. இதுமட்டுமல்லாமல் அவர் மேற்கொண்ட ஆய்வு அறிக்கையினையும் மத்திய அரசு வெளியிடவில்லை.
எழுத்து பிழையை மட்டுமே திருத்துவேன்..
அமா்நாத் ராமகிருஷ்ணன் மேற்கொண்ட அகழ்வாராய்சி அறிக்கையினை திருத்தி எழுதி சமர்பிக்குமாறு இந்திய தொல்லியியல் துறை கடிதம் அனுப்பியுள்ளது. இதற்கு அமர்நாத் ராமகிருஷ்ணன் அறிக்கையில் எழுத்து பிழையை வேண்டுமானால் திருத்துவேன்.. உண்மையைத் திருத்த மாட்டேன் என்று பதில் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் தான் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் வரலாற்றை மாற்றும் அகழாய்வு அறிக்கைகளை வெளியிடுவதில் தடங்கல் இருப்பதாக கூறியுள்ளார்.
மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கீழடி விவகாரம் குறித்து பேசிய அமர்நாத் ராமகிருஷ்ணன் கூறியதாவது:-இந்தியா என்ற பன்முகத்தன்மைக்கு எதிராக பயம் கொண்டுள்ளார்கள்.. அது ஏன் என்று எனக்கு தெரியவில்லை? கீழடி உலகம் முழுவதும் பேசப்படுகிறது.. ஆனால் கீழடி என்றாலே ஏன் சிலருக்கு பயம் வருகிறது.. இதற்கு விரிவான அகழாய்வு நடைபெற்றதே காரணம்.
15 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்கள்
இந்திய துணைக் கண்டத்தில் 15 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் கிடைத்துள்ள ஒரே இடம் என்றால் அது தமிழ்நாடு தான்.. கீழடியில் இதுவரை 5 சதவீதம் ஆய்வு கூட செய்யப்படவில்லை. ஆனால் இந்த ஆய்வே இன்று உலகை பேச வைத்துக் கொண்டிருக்கிறது.
கிமு 300-இல் தான் நமது சங்கக் காலமும், நாகரீகமும் தொடங்குது என இப்போ வரை வரலாற்று மாணவர்களுக்கு கற்றுக் கொடுத்துட்டு இருக்காங்க.. இது எப்போது மாறும் என தெரியவில்லை. தமிழகத்தில் நடத்தப்பட்டிருக்கும் ஆய்வுகள் மூலம் பல ஆதாரங்கள் நமக்கு கிடைத்திருக்கின்றன. ஆனால், இந்த ஆதாரங்களை எல்லாம் வெளி உலகிற்கு வெளிப்படையாக தெரியாததால் தான் நம் வரலாற்றை இன்னும் நம்மால் மாற்ற முடியவில்லை.
பல மாற்றங்களை ஏற்படுத்தும்
எவ்வளவோ ஆய்வுகள் நடந்து இருக்கின்றன. ஆனால் எதையும் அப்டேட் செய்யாமல் இருக்கிறோம். இதனை மாற்ற முயற்சிப்பதால்தான் இப்போது இவ்வளவு பிரச்சினைகள். உண்மை கருத்துகளை சொல்வது என்பதில் ஆணித்தரமாக உள்ளோம். என்னிடம் இருக்கும் ஆய்வறிக்கை வெளியே வந்தால்தான் உலகத்துக்கு தெரியும்.
ஆனால் அதை வெளியிடுவதில் பல தடங்கல்கள் ஏற்படுகின்றன. தொல்லியியலில் ஆதாரங்கள் கிடைக்கும் போதெல்லாம் பல மாற்றங்களை ஏற்படுத்தும். அது பல ஆய்வுகளுக்கு வழிவகுக்கின்றன.. " எனத் தெரிவித்தார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications