நாளை தான் தீபாவளி.. தமிழக மக்களுக்கு கொண்டாட ஆசை இருக்காதா? விடுமுறை வேண்டும்: எல்.முருகன் கோரிக்கை!
மதுரை: மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு தமிழக அரசு விடுமுறை அளிக்க வேண்டும் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நாளை நடைபெறுகிறது. பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இதனையொட்டி, மத்திய அரசு அலுவலகங்களுக்கு மதியம் வரை அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் அந்தந்த மாநில அரசுகள் விடுமுறை அறிவித்துள்ளன. அதுபோல், தமிழ்நாட்டிலும் விடுமுறை அறிவிக்க வேண்டும் எனக் கோரிக்கைகள் எழுந்து வருகின்றன. இந்நிலையில், மத்திய இணை அமைச்சர் எல்.முருகனும் இதுதொடர்பாக தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், "அயோத்தியில் ராமருக்கு கோவில் கட்டுவது ஒவ்வொரு இந்தியனின் கனவு. இது இந்தியர்களின் உணர்வுப்பூர்வமான தருணம். பாரத தேசம் முழுவதும் அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை தான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. அயோத்தியில் ராமர் கோயில் வந்துவிடாதா என்று ஏங்கித் தவித்த இந்தியர்களுக்கு நாளை தான் பொன்னான நாள். இன்னும் சொல்லப்போனால், ஒவ்வொரு இந்தியனுக்கும் நாளை தான் தீபாவளி.
ராமர் கோவில் திறப்பையொட்டி தமிழகத்தில் அரசு விடுமுறை அளிக்கப்பட வேண்டும். அது அனைத்து மக்களின் கோரிக்கையாக உள்ளது. மக்களின் விருப்பத்தை அறிந்து அரசு நிறைவேற்ற வேண்டும். ராமபிரான் பல நூறு ஆண்டுகளுக்கு பிறகு அயோத்திக்கு வரப் போவதை கொண்டாடி தீர்க்கும் ஆசை தமிழக மக்களுக்கு இருக்காதா? எனவே, ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை கொண்டாடுவதற்காக தமிழ்நாட்டில் பொது விடுமுறையை அரசு அறிவிக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
-
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி!












Click it and Unblock the Notifications