மானாமதுரையில் காதல் விவகாரத்தில் சட்ட கல்லூரி மாணவர் படுகொலை.. பெண்ணின் தந்தை, சகோதரர் கைது

Subscribe to Oneindia Tamil

சிவகங்கை: செங்கல்பட்டில் காதல் விவகாரத்தில் இளைஞர் பிரவீன்குமார் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவமே மறையாத நிலையில், மானாமதுரை அருகே சட்ட கல்லூரி மாணவரை காதல் விவகாரத்தில் வெட்டி படுகொலை செய்ததாக பெண்ணின் தந்தை மற்றும் சகோதரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை தாலுகாவுக்கு உட்பட்ட சின்ன புதுக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் வெள்ளச்சாமி. இவருக்கு இரு மகன்கள். மூத்த மகன் முருகேசன். இளைய மகன் சிவபாலன் (வயது 29). சிவபாலன் மதுரையில் உள்ள சட்டக் கல்லூரியில் படித்து வந்தார். பாதியில் படிப்பை நிறுத்தியதாக கூறப்படுகிறது. இவர் தனது மாமா பொண்ணு தாரணியை காதலித்து வந்துள்ளார்.

Law college student Murder in Manamadurai over love affair Girl s father brother arrested

சகோதரர் முருகேசன் ஏற்கனவே தனது மாமாவான முருகேசன் - பாலபாக்கியம் தம்பதியின் மூத்த மகள் அபினாவை திருமணம் செய்து வாழ்க்கை நடத்தி வருகிறார். இவர்களது இளைய மகள் தான் தாரணி. தாரணியை நான் காதலிக்கிறேன் என்றும், எனக்கு திருமணம் செய்து வைக்க கூறியும் நேற்று சிவபாலன் மாமா முருகேசன் வீட்டுக்கு சென்று பேசியிருக்கிறார்.

ஏற்கனவே பலமுறை திருமணம் செய்து வைக்க கோரி குடும்பத்தினர் கேட்டும் முருகேசனின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் நேற்று மீண்டும் போய் கேட்டு இருக்கிறார். மேலும் மாமா முருகேசன் மற்றும் அவரது மகன் அருணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதற்கு இப்போது நீ படிப்பை பாதியில் நிறுத்திவிட்டாய்.. இதனால் பொண்ணு தர முடியாது என முருகேசன் குடும்பத்தினர் சம்மதம் தெரிவிக்கவில்லை.

இதில் ஆத்திரமடைந்த சிவபாலன் அரிவாளால் முருகேசன் மற்றும் அருணை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் பதிலுக்கு முருகேசனும் அவரது மகன் அருணும் சேர்ந்து சிவபாலனை தாக்கி அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே சிவபாலன் உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மானாமதுரை துணைக் காவல் கண்காணிப்பாளர் மற்றும் மானாமதுரை காவல் ஆய்வாளர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று முருகேசன் மற்றும் அருணை கைது செய்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் சென்னையை அடுத்த திருப்போரூரில் காதல் விவகாரத்தில் இளைஞர் பிரவீன் குமாரை பெண்ணின் தந்தை ஆள் வைத்து அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+