குழு லோன் கட்டலையா? வாடிப்பட்டி லாட்ஜுக்கு வர்ரியா? போனில் வழிந்த மேனேஜர்.. ஆடியோவால் வந்த சிக்கல்!

Subscribe to Oneindia Tamil

மதுரை: கடன் வசூல் என்ற பெயரில் பொதுமக்களை துன்புறுத்தக் கூடாது என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் அத்துமகளில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டப்படுகிறது அப்படித்தான் மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் கடன் தொகையை செலுத்தாத பெண்ணை லாஜிக் அழைத்த அதிர்ச்சி ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

வங்கிகள் அல்லாது தற்போது பல நிறுவனங்கள் பொதுமக்களுக்கு கடனுதவி வழங்குகின்றன. குறிப்பாக கிராமப்புறங்களில் குழு லோன் என்ற பெயரில் நூற்றுக்கணக்கான வங்கி அல்லாத நிறுவனங்கள் பல்வேறு பெயர்களில் பொதுமக்களுக்கு கடன்களை வழங்குகின்றன.

தொடர்ந்து மாதம் மட்டும் வாரவாரம் என பல்வேறு தவணைகளாக கடன் தொகை வசூலிக்கப்படுகிறது. அவ்வாறு பணம் வசூலிக்கும் போது, ரிசர்வ் வங்கியின் அங்கீகாரம் பெற்றதாக கூறினாலும் விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டு மிரட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக புகார் கூறப்படுகிறது.

Loan Recovery Shock

அது மட்டும் அல்லாமல் வீட்டில் அமர்ந்து கொள்வது, பெண்களை தரக்குறைவாக பேசுவது என வசூலிப்பு ஏஜெண்டுகள் அத்துமீறும் நிலையில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இந்த நிலையில் கடனை வசூலிக்கும் போது அத்துமீறுவது, மிரட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி உள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு அரசும் இதனை தடுக்கும் வகையில் சட்டம் இயற்றியுள்ளது. ஆனாலும் அத்துமீறல்கள் தொடர்ந்து கொண்டு தான் உள்ளன.

அப்படி தான், தவணை தொகை செலுத்தாத பெண்ணை லாட்ஜுக்கு வா என அழைத்த மேனேஜரின் ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவருடன் வசித்து வந்தார். தற்போது கணவரை பிரிந்த அவர் வாடிப்பட்டியில் குடியிருக்கிறார். இதற்கிடையே கடந்த ஆண்டு குடும்ப செலவுக்காக பெல் ஸ்டார் என்ற நிதி நிறுவனத்தில் கடன் பெற்று இருக்கிறார்.

தொடர்ந்து 11 மாதங்கள் தவணைத் தொகையை ஒழுங்காக கட்டி வந்த நிலையில் கடந்த மாதம் அந்த பெண்ணுக்கு விபத்து ஏற்பட்டது. கால்கள் உடைந்த நிலையில் அவர் சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். இந்த நிலையில் அவரது வீட்டுக்குச் சென்ற வசூலிப்பு ஏஜென்ட் ஒருவர் தவணைத் தொகையை ஏன் கட்டவில்லை என கேட்டு இருக்கிறார். உடல் சரியில்லாததால் கட்ட முடியவில்லை எனவும், அடுத்த மாதம் சேர்த்து கட்டி விடுகிறேன் எனக் கூறியதை அடுத்து அந்த ஏஜென்ட் சென்றுள்ளார்.

இந்நிலையில் அந்த பெண்ணை தொடர்பு கொண்ட ஒருவர் தான் பெல் ஸ்டார் நிறுவனத்தின் மேலாளர் எனவும் மதுரையைச் சேர்ந்த தான் தற்போது வாடிப்பட்டிக்கு வந்திருப்பதாக கூறி இருக்கிறார். மேலும் லோன் கட்டலையா? ஓடி பேட்ருவேன் என பேசியதோடு, அந்த பெண்ணை லாட்ஜுக்கு வாங்க பேசிக்கலாம் என அழைத்துள்ளார். எதற்காக என்னை அப்படி அழைக்கிறீர்கள் என அந்த பெண் கேட்டதும் சமாளித்த அவர் தொலைபேசி இணப்பை துண்டித்து விட்டார்.

இந்த நிலையில் தன்னை குறித்து பேசிய அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பெண் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து இருக்கிறார். ஆனால் லாட்ஜுக்கு வா என்பதை அவதூறாக கருத முடியாது எனவும் இருவரும் சமாதானமாக சென்று விடுமாறு போலீசார் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. தான் புகார் அளித்து ஐந்து மாதங்களாகியும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அந்த பெண் கோரிக்கை விடுத்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+