மதுரைக்குள் மாயாஜாலம்.. தெற்கு சட்டசபை தொகுதியில் திமுகவைவிட, பாஜக ஜஸ்ட் 3 ஆயிரம் ஓட்டுதான் பின்னிலை
மதுரை : மதுரை லோக்சபா தொகுதியில் உள்ள சட்டசபை தொகுதி வாரியாக பதிவான வாக்குகளில் நிலவரம் மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை லோக்சபா தொகுதியில் திமுக கூட்டணி சார்பாக போட்டியிட்ட சிபிஎம் வேட்பாளர் சு.வெங்கடேசன் 2,09,409 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார். இவரைத் தொடர்ந்து பாஜக வேட்பாளர் இராம ஸ்ரீனிவாசன் 2,09,409 வாக்குகள் பெற்று 2வது இடத்திற்கு வந்துள்ளார். இவருக்கு பின் அதிமுக வேட்பாளர் சரவணன் 2,25,519 வாக்குகள் பெற்று 3வது இடத்தில் இருந்தார்.

இந்த நிலையில் மதுரை லோக்சபா தொகுதியில் சட்டசபை தொகுதி வாரியாக பதிவான வாக்குகளில் திமுக நிர்வாகிகளையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அமைச்சர் மூர்த்தியின் தொகுதியான மதுரை கிழக்கு தொகுதியில் திமுக 1,15.201 வாக்குகளை கைப்பற்றியுள்ளது. அதேபோல் பாஜக 43,120 வாக்குகளை கைப்பற்றியுள்ளது.
அதேபோல் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தொகுதியான மதுரை மத்திய பகுதியில் 63,516 வாக்குகளையும், பாஜக 28,864 வாக்குகளையும் கைப்பற்றியுள்ளது. திமுக எம்எல்ஏ தளபதியின் தொகுதியான மதுடை வடக்கில் திமுக 59,955 வாகுகளையும், பாஜக 30,218 வாக்குகளையும் வென்றுள்ளது. ஆனால் மதுரை தெற்கு சட்டசபை தொகுதியில் பதிவான வாக்குகள் திமுகவினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
இங்கு மதிமுகவின் பூமிநாதன் எம்எல்ஏ-வாக இருக்கிறார். இந்த தொகுதியில் திமுக 45,783 வாக்குகளை பெற்றுள்ள நிலையில், பாஜக 42,073 வாக்குகளை கைப்பற்றியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளரை பாஜக வேட்பாளர் கைப்பற்றியுள்ள வாக்குகளுக்கு இடையிலான வித்தியாசம் வெறும் 3 ஆயிரமாக மட்டுமே உள்ளது.
இதே தொகுதியில் கடந்த 2 முறையும் அதிமுக எம்எல்ஏ சரவணன் தான் வென்றிருந்தார். இவர் செளராஷ்டிரா மொழி பேசுபவர். மதுரை தெற்கு தொகுதியில் செளராஷ்டிரா மக்கள் அதிகமுள்ள பகுதியாகும். இங்கு பாஜக அதிக வாக்குகளை பெற்றிருக்கிறது. ராமர் கோயில் திறப்பு விழாவின் போது ஏராளமான செளராஷ்டிரா மக்கள் இதே பகுதியில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒவ்வொரு வீடுகளுக்கும் நேரடியாக சென்று ராமர் கோயில் புகைப்படத்தையும், சில நோட்டீஸையும் கொடுத்து பூஜை செய்யுமாறு வலியுறுத்தி வந்தனர். அதேபோல் முக்குலத்தோர் சமூக மக்களும் மதுரை தெற்கு தொகுதியில் வசித்து வருகின்றனர். அதிமுகவின் சிறந்த கட்டமைப்பு உள்ள பகுதியிலேயே அதிமுக வேட்பாளர் சுமார் 16 ஆயிரம் வாக்குகளை இழந்திருக்கிறார்.இது அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளுக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
இந்த 16 ஆயிரம் வாக்குகள் தான் 2வது இடத்தில் வந்த பாஜகவிற்கும், 3வது இடத்தில் இருக்கும் அதிமுகவிற்கும் இடையிலான வித்தியாசம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான்












Click it and Unblock the Notifications