அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்! திருமண வாழ்க்கையில் பொன்விழா காணும் மு.க.அழகிரி! நெகிழும் துரை தயா!

Subscribe to Oneindia Tamil

மதுரை: திமுகவின் முன்னாள் தென் மண்டல அமைப்புச் செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி தனது 50வது திருமண நாளை மிக எளிமையாக கொண்டாடியுள்ளார்.

மு.க.அழகிரிக்கு அவரது மகன் துரை தயாநிதியும், மருமகள் அனுஷாவும் சமூக வலைதளங்களில் வாழ்த்துகளை பகிர்ந்து தங்கள் அன்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

50 ஆண்டுகள் ஒருவரை ஒருவர் புரிந்து வாழ்ந்து, இன்பம், துண்பம் என எல்லா நிகழ்வுகளிலும் ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக நின்று மணவாழ்க்கையில் பொன்விழா கண்டிருக்கிறார்கள் மு.க.அழகிரியும் அவரது மனைவி காந்தியும்.

மு.க.அழகிரி

மு.க.அழகிரி

திமுகவில் மிகவும் பவர்ஃபுல் மனிதராக ஒரு காலத்தில் வலம் வந்தவர் மு.க.அழகிரி. அஞ்சா நெஞ்சன் என்ற அடைமொழியோடு அவரது ஆதரவளர்களால் அழைக்கப்பட்ட இவர், மத்திய அமைச்சர், தென் மண்டல அமைப்புச் செயலாளர் என பரபரப்பாக இயங்கியவர். மதுரை சத்யசாய் நகரில் உள்ள இவரது இல்லத்தில் கட்சிக்காரர்கள் கூட்டம் அலைமோதும். திருமண நாள், பிறந்தநாள் என வாழ்த்துச் சொல்வதற்காக ஒரு பெரும் கூட்டமே அழகிரி இல்லத்தில் காத்துக்கிடக்கும்.

பொன் விழா

பொன் விழா

இப்படிபட்ட மு.க.அழகிரி சத்தமின்றி மிகவும் எளிமையாக தனது 50வது திருமண நாளை இன்று கொண்டாடியுள்ளார். மண வாழ்க்கையில் பொன்விழா காணும் இவருக்கு அவரது மகன் துரை தயாநிதியும் மருமகள் அனுஷாவும் சமூக வலைதளங்களில் வாழ்த்துக் கூறியுள்ளனர். தனது தாய் தந்தைக்கு இடையேயான அன்பு, ஒற்றுமை, சகிப்புத்தன்மை, நம்பிக்கை ஆகியவற்றை உடனிருந்து பார்க்கக் கூடிய வாய்ப்பை பெற்றிருந்ததாகவும் அன்பிற்கு எல்லையே கிடையாது எனவும் அது ஒரு எல்லையற்ற கடல் எனவும் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

உறவுகள் வாழ்த்து

உறவுகள் வாழ்த்து

இதேபோல் மு.க.அழகிரிக்கு அவரது குடும்ப உறவினர்கள் சிலரும் தொலைபேசி மூலம் 50ஆம் ஆண்டு திருமண நாள் வாழ்த்துக் கூறியுள்ளனர். அழகிரி அரசியலில் பிசியாக இருந்த போதும் சரி, இப்போதும் சரி திருமணம் உள்ளிட்ட ஆதரவாளர்கள் இல்ல விழாக்களில் மனைவியுடன் கலந்துகொள்வதை வழக்கமாக கொண்டுள்ளார். தாம் செல்லும் இடங்களுக்கு எல்லாம் மனைவி காந்தியையும் அழைத்துச் செல்லும் வழக்கம் உடையவர்.

மாறாத பாசம்

மாறாத பாசம்

திருமணத்தின் போது தனது மனைவியை எந்தளவு அழகிரி நேசித்தாரோ அதே நேசிப்பு தன் இன்று வரையும் தொடர்வதாக கூறுகிறரகள் அவரை நெருங்கி அறிந்த ஆதரவாளர்கள். மு.க.அழகிரி திருமணத்தை பொறுத்தவரை ஜாதி மறுப்புத் திருமணம் என்பது கூடுதல் தகவலாகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+