சமூக வலைதள சண்டைகளை கண்காணிப்பதுதான் போலீசுக்கு வேலையா? ஐகோர்ட் கிளை அதிருப்தி!

Subscribe to Oneindia Tamil

மதுரை: சமூக வலைதளங்களில் தனி நபர்களுக்கிடையே அல்லது இரு தரப்பினரிடையே நடக்கும் ஈகோ சண்டைகளையும், பரஸ்பர அவதூறுகளையும் கண்காணித்துக் கொண்டிருப்பது போலீசாரின் வேலை அல்ல என்று ஐகோர்ட் மதுரை கிளை அதிருப்தி வெளியிட்டுள்ளது.

பாஜக நிர்வாகி ஒருவர், சமூக வலைதள பக்கத்தில் இஸ்லாமிய சமூகத்தினரைத் புண்படுத்தும் வகையிலும், அவதூறான முறையிலும் கருத்துகளைப் பதிவிட்டதாகக் கூறி அவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்திருந்தனர். அந்த எப்.ஐ.ஆர் நடவடிக்கையை எதிர்த்தும், தன் மீதான வழக்கை முழுமையாக ரத்து செய்யக் கோரியும் அந்த பாஜக நிர்வாகி ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

Madras HC Madurai Bench Slams Police Over Monitoring of Social Media Clashes

அந்த மனு இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் மற்றும் எதிர் தரப்பினரின் சமூக வலைதள செயல்பாடுகளைக் கவனித்த நீதிபதி, இரு தரப்பினரின் போக்கிற்கும் கடும் கண்டனம் தெரிவித்தார்.

மேலும், சமூக வலைதளங்களிலேயே எப்போதும் ஒருவர் மாற்றி ஒருவர் மோதிக்கொண்டும், சண்டை போட்டுக் கொண்டும் இருக்கிறார்களே.. இரு தரப்பினருக்கும் வேறு உருப்படியான வேலைகள் எதுவுமே இல்லையா? என்றும் ஃபேஸ்புக், எக்ஸ் போன்ற சமூக வலைதளங்களில் தனிப்பட்ட முறையில் நடக்கும் சண்டைகளையும், விவாதங்களையும் பின்தொடர்ந்து கண்காணிப்பதுதான் போலீசாரின் முதன்மை வேலையா என்றும் கேள்வி எழுப்பினார்.

ஒரு தரப்பினர் தவறான அல்லது அவதூறான பதிவை வெளியிட்டால், அதற்குப் போட்டியாக மற்றொரு தரப்பினரும் சமூக வலைதளத்திலேயே அவதூறுகளைப் பரப்புவது சட்டத்திற்குப் புறம்பானது மற்றும் தவறான அணுகுமுறை. சமூக வலைதளங்களில் யாரேனும் அவதூறுகளைப் பரப்பினால் அதற்கு இணையத்திலேயே சண்டையிட்டுப் பதிலடி கொடுக்கக் கூடாது என நீதிபதி அறிவுறுத்தினார்.

பாதிக்கப்பட்ட தரப்பினர் உடனடியாக முறையான புகார் அளிக்க வேண்டும் என்றும், அந்தப் புகாரின் அடிப்படையில் சட்டம் அனுமதிக்கும் வழிகளின் கீழ் முறையாக எப்.ஐ.ஆர் பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுப்பதே சரியான தீர்வு என்றும் நீதிபதி தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+