"வர்றியா" அபர்ணா.. கையில் கிளவுஸூடன், பெண்ணின் அருகில் நெருங்கி சென்ற "பெஸ்டி".. அப்பறம் என்னாச்சு

மதுரையில் இளம்பெண்ணை கத்தியால் குத்தி கொன்ற நபரை போலீசார் கைது செய்தனர்

Subscribe to Oneindia Tamil

மதுரை: காதலித்த பெண் திடீரென தன்னை கழட்டிவிட்டதால், ஆத்திரமடைந்த காதலன், அந்த பெண்ணை சுத்தியலால் அடித்து கொன்ற சம்பவம் மதுரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

மதுரை பைபாஸ் ரோடு பொன்மேனி பகுதியை சேர்ந்தவர் பாண்டி.. பலசரக்கு கடை நடத்தி வருகிறார்.. இவருடைய மகள் அபர்ணா.. 19 வயதாகிறது. பிளஸ் 2 வரை படித்துள்ளார்.

இவர் ஹரிஹரன் என்ற 23 வயது இளைஞரை காதலித்து வந்துள்ளார்.. ஹரிஹரன் கோவையில் ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.

இருவருமே தீவிரமாக காதலித்து வந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு, ஹரிஹரன் அபர்ணா வீட்டிற்கு சென்று பெண் கேட்டுள்ளார். ஆனால் பாண்டி இதற்கு சம்மதிக்கவில்லை.. இதனால் ஹரிஹரன் அபர்ணாவிடம், "வீட்டில் பெற்றோர்கள் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.. எங்காவது சென்று நாம் திருமணம் செய்து கொள்ளலாம்" என்று சொல்லி வந்துள்ளார்.

 அபர்ணா

அபர்ணா

இதனிடையே, பாண்டி தன்னுடைய மகளை வேறு ஒருவருக்கு திருமணம் செய்ய முடிவு செய்தார்... வீட்டில் வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்துவிட்டதுமே, ஹரிஹரனிடம் பேசுவதை அபர்ணா நிறுத்தி கொண்டதாக கூறப்படுகிறது.. இறுதியில், முனீஸ்வரன் என்ற மாப்பிள்ளையை மகளுக்கு பார்த்து முடித்தார் பாண்டி.. நிச்சயதார்த்தமும் செய்தார்.. அடுத்த மாதம் முகூர்த்த நாளையும் குறித்துவிட்டு, கல்யாண வேலைகளில் பரபரப்பாக ஈடுபட துவங்கினார்..

 ஆவேசம்

ஆவேசம்


இதையெல்லாம் பார்த்து ஆத்திரமும், ஆவேசமும் அடைந்தார் ஹரிஹரன்.. அதனால், இதற்கு ஒரு முடிவை அபர்ணாவிடமே நேரடியாக கேட்டுவிடலாம் என்று முடிவு செய்து, சம்பவத்தன்று அபர்ணா வீட்டுக்கு சென்றார்.. வீட்டில் யாருமே இல்லாத நிலையில், அபர்ணா மட்டும் தனியாக இருந்தார். அபர்ணாவிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறி தகராறு செய்தார் ஹரிஹரன்.. ஆனால், அபர்ணா சம்மதிக்கவில்லை.. இதனால் ஆத்திரத்தில், கையோடு கொண்டு சென்ற கத்தியால், அபர்ணாவின் கழுத்தை அறுத்தும், குத்தியும் கொடூரமாக கொலை செய்துவிட்டு பைக்கில் தப்பி ஓடினார் ஹரிஹரன்..

 பைக் - சுத்தியல்

பைக் - சுத்தியல்

பைக்கில் ஹரிகரன் செல்வதை, அபர்ணாவின் அம்மாவும், சித்தியும் பார்த்துவிட்டனர்.. ஹரிஹரன் கையில் கத்தி, சுத்தியல், கிளவுஸ் போன்றவை போன்றவை இருந்ததையும் கண்டு பதறிப்போய்விட்டனர். பிறகு வீட்டிற்குள் சென்று பார்த்தபோதுதான் அபர்ணா ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை கண்டு அலறினர்.. இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது... எஸ்.எஸ்.காலனி போலீசாரும் விரைந்து வந்து, அபர்ணாவின் சடலத்தை போஸ்ட் மார்ட்டம் செய்ய அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்... இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையையும் தொடங்கினர்..

 பைக் - சுத்தியல்

பைக் - சுத்தியல்

பைக்கில் ஹரிகரன் செல்வதை, அபர்ணாவின் அம்மாவும், சித்தியும் பார்த்துவிட்டனர்.. ஹரிஹரன் கையில் கத்தி, சுத்தியல், கிளவுஸ் போன்றவை போன்றவை இருந்ததையும் கண்டு பதறிப்போய்விட்டனர். பிறகு வீட்டிற்குள் சென்று பார்த்தபோதுதான் அபர்ணா ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை கண்டு அலறினர்.. இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது... எஸ்.எஸ்.காலனி போலீசாரும் விரைந்து வந்து, அபர்ணாவின் சடலத்தை போஸ்ட் மார்ட்டம் செய்ய அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்... இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையையும் தொடங்கினர்..

 கிளவுஸ்

கிளவுஸ்

அப்போதுதான், இதில் வேறு ஒரு தகவல் வெளியானது.. இந்த சம்பவம் நடப்பதற்கு முந்தைய நாள், அபர்ணா வீட்டிற்கு ஹரிஹரன் சென்றாராம்.. அங்கிருந்த அபர்ணா அம்மாவிடம், மகளை தனக்கு திருமணம் முடித்து வைக்கும்படியும் கெஞ்சி கேட்டுள்ளார்.. தகராறும் செய்துள்ளார்... பிறகு அபர்ணாவிடம், "என்னிடம் சிரித்து பேசியது எல்லாம் பொய்யா? என்னை நீ காதலிக்கவே இல்லையா? உன் காதல் உண்மை என்றால், இப்பவே வா, நாம் ஓடிப்போயிடலாம் என்று அழைத்துள்ளார்.. ஆனால், அபர்ணா அப்போதும் மறுத்துள்ளார்.

 வாக்குமூலம்

வாக்குமூலம்

இதற்கு பிறகு, அபர்ணாவின் அம்மா சத்தம் போட்டு ஹரிஹரனை வெளியே துரத்தினர்.. இந்த சம்பவம் நடந்தபோதே போலீசாரிடம் சென்றிருந்தால், இப்படி கொலை வரை நடந்திருக்காது என்கிறார்கள் அக்கம்பக்கத்தினர்.. இதற்கு நடுவில் பைக்கில் தப்பி ஓடிய ஹரிஹரனை போலீசார் கைது செய்துவிட்டனர்... தனக்கு கிடைக்காத பெண், வேறு யாருக்குமே கிடைக்க கூடாது என்றுதான் கொலை செய்ததாகவும், அபர்ணாவை உயிருக்கு உயிராக விரும்பியதாலேயே இப்படி செய்துவிட்டேன் என்றும் போலீசில் வாக்குமூலம் தந்துள்ளார் ஹரிஹரன்.. தொடர் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+