ஆவின் பாலில் மிதந்த "ஈ".. வாடிக்கையாளர் அதிர்ச்சி.. மதுரை ஆவின் உதவி மேலாளர் சஸ்பெண்ட்!
மதுரை: மதுரையில் ஆவின் பால் பாக்கெட்டில் ஈ மிதந்த சம்பவத்தை அடுத்து மதுரை ஆவின் உதவி மேலாளர் சிங்காரவேலன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
மதுரை ஆவின் மூலம் நாள்தோறும் பல்வேறு டெப்போக்களுக்கு பால் பாக்கெட்டுகள் தயாரிக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாகமலை, புதுக்கோட்டை காமராஜர் பல்கலைக்கழகம் அருகே ஒரு டெப்போவில் மேலமாத்தூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் பச்சை நிற ஆவின் பால் பாக்கெட்டை வாங்கிச் சென்றார்.

அப்போது அந்த பாக்கெட்டின் உள்ளே ஈ மிதப்பதாக அந்த பெண் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து ஆவின் அதிகாரிகள் பல்கலைக்கழகம் அருகே உள்ள டெப்போவிற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது பால் பாக்கெட்டுகளை பேக் செய்யும் போது கவனக்குறைவு இருந்திருக்கலாம் என கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து காலி பாக்கெட்டுகளை விநியோகம் செய்யும் பெங்களூரை சேர்ந்த தனியார் ஒப்பந்த நிறுவனத்திற்கு ரூ 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் பால் தயாரிப்பு பணியின் போது கவனக்குறைவாக இருந்ததால் மதுரை ஆவின் பால் உதவி மேலாளர் சிங்காரவேலன் பணிஇடைநீக்கம் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை ஆவின் பொது மேலாளர் சாந்தி பிறப்பித்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications