மதுரை மாநகராட்சி குப்பை லாரி மோதி 21வயது இளம்பெண் தலைநசுங்கி பலி நெஞ்சை பதற வைக்கும் சிசிடிவி காட்சி

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரையில் மாநகராட்சி குப்பை லாரி மோதி 21 வயது இளம்பெண் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Recommended Video

    மதுரையில் மாநகராட்சி குப்பை லாரி மோதி 21 வயது இளம்பெண் தலைநசுங்கி பலி - CCTV வீடியோ

    இது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி மதுரையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    அந்த சிசிடிவி காட்சியில் வாகன ஓட்டுனரின் கவனமின்மையால் அப்பாவி பெண் பரிதாபமாக இறந்து போனது தெரியவந்துள்ளது.

    துணிக்கடை

    துணிக்கடை

    மதுரை அவனியாபுரம் பிரசன்னா காலனி பகுதியை சேர்ந்த பாபுலால் என்பவரின் மகள் துர்கா தேவி. இவர் மதுரைகீழவெளி பகுதியில் உள்ள துணிக்கடை ஒன்றில் பணியாற்றி வந்தார்.

     வாகனங்கள் அதிகம்

    வாகனங்கள் அதிகம்

    இந்நிலையில் நேற்று காலை வழக்கம் போல் பணிக்கு செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் தந்தையுடன் சென்றார். காலை நேரம் என்பதால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் கொஞ்சம் அதிகமாக இருந்தது. வாகனங்கள் இருபக்கமும் வேகமாக சென்று கொண்டிருந்தன.

     வேகமாக வந்த லாரி

    வேகமாக வந்த லாரி

    அப்போது சாலையை ஒரு புறத்திலிருந்து மறு புறமாக துர்கா தேவியின் தந்தை கடக்க முயன்றார். அந்த வழியாக மதுரை மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை லாரி அதிவேகமாக வந்தது. அப்போது திடீரென இருசக்கர வாகனத்தில் மோதியது. ‘

     உயிரிழப்பு

    உயிரிழப்பு

    இந்நிலையில் நிலைதடுமாற பின்னால் அமர்ந்திருந்த துர்காதேவி கீழே விழுந்தார். இதில் லாரியின் பின்சக்கரம் துர்காதேவியின் தலையின் மீது ஏறி இறங்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தந்தையின் கண் முன்னே மகள் உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு இராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததனர்.

     அதிக வேகம்

    அதிக வேகம்

    காவல்துறையினர் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மதுரை கீழவெளி பகுதியில் மாநகராட்சி சொந்தமான குப்பைலாரிகள் தண்ணீர் லாரிகள் வாகன ஓட்டிகள் பாதுகாப்பை கருத்தில் கொள்ளாமல் அதிவேகமாக வாகனங்களை இயக்குவதால் விபத்துக்கள் ஏற்படுவதாக அப்பகுதியினர் புகார் கூறுகின்றனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+