விஜய்யை பற்றி நான் பேச மாட்டேன்! அவர் ரசிகர்கள் என்னை கல்ல விட்டு அடிக்கிறதுக்கா? மதுரை ஆதீனம்
மதுரை: நடிகர் விஜய் குறித்து நான் எதுவும் பேச மாட்டேன். பிறகு அவரது ரசிகர்கள் என்னை கல்லை விட்டு அடிக்கிறதுக்கா என மதுரை ஆதீனம் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் சினிமா நடிகர்கள் தொடர்பான கேள்விகளை அவர் தவிர்த்தார்.
இதுகுறித்து மதுரை ஆதீனம் செய்தியாளர்களை சந்தித்த போது கூறியிருப்பதாவது: விஜய்ய பத்தி நான் எதுவும் சொல்ல விரும்பலை. அப்புறம் அவங்க ரசிகர்கள் என்னை கல்ல விட்டு அடிக்கவா? பவன் கல்யாண் யாரு, எனக்கு அவரை தெரியாது, அவர் ஆந்திரா துணை முதல்வராக இருந்தால் நம் தமிழகத்திற்கு என்ன பிரச்சினை?

பழனியில் நடந்த அனைத்துலக முத்தமிழ் முருகர் மாநாட்டுக்கு என்னை தமிழக அரசு சார்பில் அழைத்தார்கள். அதற்காக நான் சென்றேன். என்னை அவர்களாகவே கூட்டிச் சென்று கூட்டி வந்தனர். மிகவும் மரியாதையாக நடத்தினார்கள். வாராது வந்த மாமணியே என என்னை அழைத்தார் என கூறிய மதுரை ஆதீனம், துணை முதல்வரான உதயநிதிக்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.
மேலும் ரஜினிகாந்த் உடல்நலம் குறித்தும் சனாதன தர்மம் குறித்த விமர்சனங்கள் குறித்தும் பதிலளிக்க மறுத்துவிட்டார். மேலும் ஆதீனம் கூறுகையில், வைகையை சுத்தப்படுத்த வேண்டும் என ஒரு நாளைக்கு 15 ஆயிரம் கொடுங்கள் என சொன்னார்கள்.
அரசாங்கமே செய்ய வேண்டும் . உங்களால் முடியாது என நான் சொன்னேன். காசு எதற்கு என கேட்ட போது இந்த பணம் கூட கொடுக்க முடியவில்லை என்றால் எதுக்கு மடம் இருக்கிறது என என்னை மிரட்டினார்கள். மேலும் பத்து நோட்டீஸை கொண்டு வந்தார்கள். அவர்கள் என்னை பார்க்க வந்த முறையே தவறு, அவர்களின் நடவடிக்கைகள் எனக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியிருந்தன. அவர்களின் செயல்பாடும் சந்தேகமாக இருந்தன.
இந்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் தலையிட வேண்டும். வைகையாற்றை மக்கள் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். என்னை மிரட்டியவர்கள் குறித்து புகார் ஏதும் கூற விரும்பவில்லை. இதெல்லாம் எனக்கு சர்வ சாதாரணம், ஏச்சு பேச்செல்லாம் எவ்வளவோ வாங்கி விட்டேன். இதெல்லாம் எனக்கு தூசி போல் தட்டிவிட்டு போய்கிட்டே இருப்பேன்.
என்னை அரிவாளால் வெட்ட வந்திருக்கிறார்கள். இதற்கெல்லாம் பயப்பட மாட்டேன். போனால் என் உயிர்தானே போக போகிறது, போகட்டும். பெரிய ஆதீனம் துப்பாக்கி வைத்திருந்தார் என கூறிய அவர் தன்னிடமும் துப்பாக்கி இருப்பதாக சொல்லிவிட்டு பின்னர் தன் வாயே துப்பாக்கிதான் என்றார். புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் செங்கோலை மதுரை ஆதீனம்தான் கொண்டு போய் பிரதமரிடம் கொடுத்தார்.












Click it and Unblock the Notifications