நித்தியானந்தா எல்லாம் ஒரு பொருட்டே இல்லை.. ஆதீனத்திற்கு வந்தால் கைது செய்யப்படுவார்..' மதுரை ஆதீனம்
மதுரை: நித்தியானந்தா ஒரு பொருட்டே இல்லை என்று கூறிய மதுரை ஆதீனம், அவர் மதுரை ஆதீனத்திற்கு வந்தால் கைதாகிவிடுவார் என்றும் தெரிவித்தார்.
மதுரை ஆதீனத்தின் 293-வது ஆதீனமாக ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி முடிசூட்டப்பட்டார்.
இதனிடையே இன்று 293ஆவது மதுரை ஆதீன ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞாமசம்பந்த தேசிக சுவாமி செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், "மக்களோடு மக்களாக எப்போதும் தொடர்பில் இருப்பேன். அரசே ஆலயத்தை விட்டு வெளியேறு என்ற போராட்டத்திற்காகக் கன்னியாகுமரி முதல் சென்னை வரை நடைப் பயணம் மேற்கொண்டவன் நான் என்பதை மறந்து விடாதீர்கள். எல்லா அரசியல் கட்சிகளுடனும் தொடர்புடையவன்" என்றார்
தொடர்ந்து நித்தியானந்தா குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், "நித்தியானந்தா ஒரு பொருட்டே இல்லை, அவரையெல்லாம் பெரிதுபடுத்தாதீர்கள். அவர் இங்கு வந்தால் கைதாகிவிடுவார்" எனப் பதிலளித்தார்.
மேலும், சமூக நல்லிணக்க மாநாடுகளுக்கு அழைப்பு வந்தால் கலந்து கொள்வீர்களா என்ற கேள்விக்கு அவர், "சமூக நல்லிணக்க மாநாடுகளுக்கு அழைத்தால் செல்வேன் நான் குர்ஆனையும், பைபிளையும் ஏற்றுக்கொள்கிறேன். கிறிஸ்துவர்களும், முகம்மதியர்களும் இந்து சமயத்தில் தரப்படும் விபூதியைப் பூசிக்கொள்வார்களா? இந்து சமயத்தை இஸ்லாமியர்களும், கிறிஸ்துவர்களும் ஏற்றுக்கொள்வார்களா?" என்று கேள்வி எழுப்பினார்.
முன்னதாக கடந்த வாரம் நித்தியானந்தா தனது பேஸ்புக் பக்கத்தில், "மதுரை ஆதீனத்தின் 293வது சன்னிதானமாகப் பதவியேற்றுக் கொண்டு உள்ளேன். இனிமேல் இணையம் மூலம் பக்தர்களுக்கு ஆசி வழங்க உள்ளேன். கடந்த 2012ம் ஆண்டு, ஏற்கனவே அருணகிரிநாதரால் இளைய ஆதீனமாக நான் அறிவிக்கப்பட்டுள்ளேன்" எனத் தெரிவித்திருந்ததது குறிப்பிடத்தக்கது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications