பூமராங் ஆன கிண்டல்! பைனாகுலரோடு வந்த மதுரை அதிமுக வேட்பாளர் சரவணன்.. லென்ஸ் மூடியை கழட்டவே இல்லையே!
மதுரை: மதுரை லோக்சபா தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணன், பைனாகுலரோடு தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்துள்ளார். சு.வெங்கடேசனை கிண்டல் செய்ய முயன்ற சரவணன், லென்ஸ் மூடியை கழற்றாமல் பார்த்துக் கொண்டிருந்ததால் நெட்டிசன்களின் கிண்டலுக்கு உள்ளாகி வருகிறார்.
மக்களவைத் தேர்தலில் மதுரை லோக்சபா தொகுதியில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சிட்டிங் எம்.பி. சு.வெங்கடேசன், அதிமுக சார்பில் டாக்டர் சரவணன், பாஜக சார்பில் ராம சீனிவாசன், நாம் தமிழர் கட்சியின் சார்பில் சத்தியதேவி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

நான்கு முனைப் போட்டி நிலவும் மதுரை லோக்சபா தொகுதியில் அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் திமுக கூட்டணி வேட்பாளர் சு.வெங்கடேசன், அதிமுக வேட்பாளர் சரவணன் ஆகிய இருவரும் தீவிர தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், மதுரை தொகுதி அதிமுக வேட்பாளர் சரவணன் பைனாகுலருடன் தேர்தல் பிரச்சார மேடையேறி வருகிறார். பைனாகுலரை வைத்து, மதுரை எம்.பி சு.வெங்கடேசன் செய்த திட்டங்களை பார்ப்பதாக கூறி கிண்டலாக பேசி வருகிறார் டாக்டர் சரவணன்.
சரவணன் பேசுகையில், "மதுரையில் நாடாளுமன்ற உறுப்பினரை சு.வெ என்பார்கள். சும்மாவே இருந்தாரு.. சும்மாவே இருக்கப்போறார் என தெரிந்ததால அவருக்கு அப்படி பெயர் வைத்தார்களா என்று தெரியவில்லை. அவர் ஒரு ட்விட்டர் அரசியல்வாதி. ஆன்லைனில் மட்டும் தான் இருப்பார், மக்களை நேரில் சந்தித்ததே கிடையாது. அவர் கதை எழுதிக் கொண்டிருந்தார். இப்போது கதை விட்டுக்கொண்டிருக்கிறார். இதை செய்தேன், அதை செய்தேன் என கதை விடுகிறார்.
மதுரை எம்.பி சு.வெங்கடேசன் இங்கு செய்த திட்டங்கள், பணிகள் கண்ணில் தென்படுகிறதா என்று பார்க்க பைனாகுலர் கொண்டு வந்தேன். எங்கேயாவது ஏதாவது அவர் செய்த திட்டங்கள் தென்படுகிறதா என பார்க்கிறேன். ஆனால் அவர் செய்த எதுவுமே என் கண்களுக்கு தெரியவில்லை." என்று கேலியாக பேசினார்.
ஆனால், அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணன் பார்த்துக் கொண்டிருந்த பைனாகுலரின் லென்ஸ் மூடியை அவர் கழற்றவில்லை. இதனைச் சுட்டிக்காட்டி, எதிர்க்கட்சியினர், நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் சரவணனை கிண்டல் செய்து வருகின்றனர். சு.வெங்கடேசனை கிண்டல் செய்ய பைனாகுலர் ஆயுதம் எடுத்த டாக்டர் சரவணன், கிண்டலுக்கு உள்ளாகியுள்ளார்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி












Click it and Unblock the Notifications