ஹெலிகாப்டர் தளம் முதல் பார்க்கிங் வரை.. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை இப்படிதான் இருக்கும்.. வீடியோ!
மதுரை: மதுரையில் கட்டப்பட்டு வரும் எய்ம்ஸ் மருத்துவமனையின் மாதிரி வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. ஹெலிகாப்டர் தளம் முதல் குடியிருப்பு வளாகம் வரை எப்படி உருவாக்கப்படும் என்று அந்த வீடியோவில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. அதேபோல் மதுரை எய்ம்ஸின் முதற்கட்ட பணிகள் 2026 ஜனவரி மாதம் முடிவடையும் என்றும், 2ஆம் கட்ட பணிகள் 2027ல் நிறைவடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2019ஆம் ஆண்டு மதுரை வந்த பிரதமர் நரேந்திர மோடி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார். அதன்பின் 7 ஆண்டுகள் வரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. கடந்த 5 ஆண்டுகளாக மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் நடக்காமல் இருந்த நிலையில், கடந்த ஆண்டு ஒரு வழியாக தொடங்கப்பட்டது.

ஸ்டாலின் விமர்சனம்
அண்மையில் முதல்வர் ஸ்டாலின், மதுரை வந்த அமித் ஷா, எய்ம்ஸ் மருத்துவமனையின் நிலையை பார்த்தாரா என்று கேள்வி எழுப்பினார். அதுமட்டுமல்லாமல் மத்திய அரசு முறையாக மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி ஒதுக்கீடு செய்திருந்தால், 2 ஆண்டுகளில் கட்டி முடித்திருக்கலாம் என்றும் விமர்சித்திருந்தார். இதனைத் தொடர்ந்து மீண்டும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விவாதத்திற்கு வந்தது.
மதுரை எய்ம்ஸ் மாதிரி வீடியோ
இந்த நிலையில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் மாதிரி வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. மொத்தமாக 900 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாக உருவாக உள்ளது. இதன் முதற்கட்ட பணிகள் 2026ஆம் ஆண்டு ஜனவரியில் முடிவடையும் என்று கூறப்பட்டுள்ள நிலையில், 2ஆம் கட்ட பணிகள் 2027ஆம் ஆண்டு நிறைவடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்னென்ன வசதிகள்
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் ஹெலிகாப்டர் இறங்குவதற்கான தரைதளம், கார் நிறுத்தம் பிரம்மாண்டமாக அமைய உள்ளது. அதேபோல் சோலார் கட்டமைப்பு, விளையாட்டு கட்டமைப்பு, மருத்துவக் கல்லூரி, மாணவர்களுக்கான விடுதி, அவசர சிகிச்சை மையம், குடியிருப்பு வளாகம் ஆகியவை கட்டப்பட்டு வருகிறது.
(1/2) We are proud to present sneak peek into the future of healthcare — the projected design of AIIMS Madurai Hospital.
— AIIMS,MADURAI (@madurai_aiims) June 17, 2025
This video offers a glimpse of state-of-the-art medical campus that will serve millions, blending advanced infrastructure with commitment to compassionate care pic.twitter.com/1H9i3fclGv
எய்ம்ஸ் மாணவர்கள்
அதுமட்டுமல்லாமல் எய்ம்ஸ் மருத்துவமனை வந்த பின் அப்பகுதி அடையப் போகும் வளர்ச்சி தொடர்பாகவும் விவரிக்கப்பட்டுள்ளது. 2026ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதற்கட்ட பணிகள் முடிவடையும் பட்சத்தில், ராமநாதபுரத்தில் படித்து வரும் மாணவர்கள் இங்கு மாற்றம் செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தென் மாவட்ட மக்களுக்கு வரப்பிரசாதம்
ஏனென்றால் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு, தற்போது ராமநாதபுரத்தில் உள்ள மருத்துவக் கல்லூரியில் தான் படித்து வருகின்றனர். இந்த வீடியோ மதுரை மக்களிடையே ஒரு வழியாக நிம்மதியை ஏற்படுத்தி இருக்கிறது. ஏனென்றால் தென் மாவட்ட மக்களின் மிகப்பெரிய வரப்பிரசாதமாக மதுரை எய்ம்ஸ் இருக்கும். அதுமட்டுமல்லாமல் மருத்துவமனைக்கு முக்கிய மாவட்டமாக மதுரை மாறும் என்றும் பார்க்கப்படுகிறது.
-
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர்












Click it and Unblock the Notifications