மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் எப்போது நிறைவு? மருத்துவக் கல்லூரி தலைவர் நாகராஜன் வெங்கட்ராமன் பதில்!
மதுரை: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமான பணிகள் குறித்து மருத்துவமனை தலைவர் நாகராஜன் வெங்கட்ராமன் பதில் அளித்துள்ளார்.

கடந்த 2015ம் ஆண்டு பிப்ரவரியில் அறிவிக்கப்பட்ட தமிழக எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 2018ம் ஆண்டு மதுரை தோப்பூரில் இடம் தேர்வு செய்யப்பட்டது. தோப்பூரில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி 27 இல் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.
இந்த மருத்துவமனை 224.24 ஏக்கர் பரப்பளவில் சுமார் 750 படுக்கைகளுடன் அமைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்டு வெறும் சுற்றுச்சுவர் மட்டுமே கட்டப்பட்டுள்ள நிலையில், கட்டுமான பணிகள் எப்போது தொடங்கும் என்று கேள்விக்கு, இதுவரை பதில் தெரியாமல் இருக்கிறது.
இந்த நிலையில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தலைவரை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மதுரையில் உள்ள வி.என். நரம்பியல் சிறப்பு மருத்துவமனையின் தலைவராக உள்ள மருத்துவர் நாகராஜன் வெங்கட்ராமனை மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவராக நியமனம் செய்து மத்திய சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நல அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து நாகராஜன் வெங்கட்ராமன் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், இந்த அறிவிப்பு மகிழ்ச்சியளிக்கிறது. மதுரை எய்ம்ஸ் விவகாரத்தில் மாநில அரசு ஆர்வமாக இருக்கிறது. இதனால் எவ்வளவு வேகமாக மக்களுக்கான மருத்துவத்தை வழங்க முடியுமோ, அதற்கான பணிகளை செய்வோம். நல்லது செய்வதற்காக பலரும் உதவி செய்வார்கள். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையை போல் மாற்ற வேண்டும் என்ற ஆசை இருக்கிறது என்று தெரிவித்தார்.
தொடர்ந்து, எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் குறித்த கேள்விக்கு, கட்டுமான பணிகள் பற்றி இதுவரை தெரியவில்லை. எவ்வளவு விரைவாக கட்டுமான பணிகளை முடிக்க முடியுமோ, அந்த அளவிற்கு வேகமான முடிக்க நினைக்கிறோம். மத்திய, மாநில அரசுகள் அதிக ஒத்துழைப்பு தருவார்கள். மக்களுக்கான சேவையில் வழங்குவதில் தென் மாவட்டத்திலேயே சிறந்த மருத்துவமனையாக கொண்டு வர வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அதற்கான பணிகளை விரைந்து அனைவரும் சேர்ந்து முடிப்போம் என்ற நம்பிக்கை இருக்கிறது என்று தெரிவித்தார்.
தொடர்ந்து, எந்தெந்த துறைகளில் எய்ம்ஸ் மருத்துவமனை சிறந்தவையாக விளங்கும் என்ற கேள்விக்கு, டெல்லியில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தான் அனைவரும் சிகிச்சைக்கு செல்வார்கள். அதனால் தரமான கல்வி, தரமான மருத்துவம், தரமான சிகிச்சைகள், தரமான கருவிகள் என அனைத்திலும் சிறந்தவையாக இருக்கும் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து மத்திய, மாநில அரசுகளுக்கான கோரிக்கை உங்களின் என்ன என்ற கேள்விக்கு, அரசு தான் என்னை தேர்வு செய்துள்ளது. கோரிக்கை என்பது நாம் பிரச்சினைகளை கண்டறிந்து அவர்களிடம் கொண்டு செல்ல வேண்டும். அதற்கு உடனடியாக நடவடிக்கை எடுப்பார்கள். எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இடம் வழங்கியது மாநில அரசு தான். மாநில அரசு பற்றி கவலையில்லை. எய்ம்ஸ் மருத்துவமனை தமிழர்களுக்கு கிடைத்த பரிசு. எவ்வளவு சீக்கிரம் எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வர முடியுமோ, அவ்வளவு விரைவாக அமைக்க நடவடிக்கை எடுப்பேன் என்று தெரிவித்தார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications