மதுரை விமான நிலைய சம்பவம்.. அமமுக நிர்வாகி புகாரின் பேரில் எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு
மதுரை விமான நிலையத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கோஷமிட்ட ராஜேஸ்வரன் புகாரின் பேரில் எடப்பாடி பழனிச்சாமி மீது வழக்கு பதிவு
மதுரை: மதுரை விமான நிலையத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கோஷமிட்ட விவகாரத்தில் தன்னை தாக்கியதால் அமமுக பிரமுகர் ராஜேஸ்வரன் புகாரின் பேரில் 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வரும் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி நேற்று பகல் 11 மணியளவில் மதுரைக்கு வந்தார். விமான நிலைய உள்வளாகத்தில் எடப்பாடி பழனிசாமி இறங்கினார்.
அப்போது வெளிய வருவதற்காக சிறிய பஸ் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த பேருந்தில் எடப்பாடி பழனிசாமி நின்றபடி பயணம் செய்தார். அப்போது அந்த பேருந்தில் அவருடன் பயணித்த ஒருவர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கோஷமிட்டார்.

எடப்பாடி பழனிசாமி
மேலும் எடப்பாடி பழனிசாமியை நோக்கி வீடியோ எடுத்துக் கொண்டே எதிர்ப்பு கோஷமிட்டார். உடனே பேருந்தில் வந்த எடப்பாடி பழனிசாமியின் பாதுகாவலர் , அந்த நபர் வீடியோ எடுக்கக் கூடாது என தடுத்தனர். இந்த விவகாரம் சர்ச்சைக்குள்ளானதால் விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த அந்த நபர் குறித்து போலீஸார் விசாரணை நடத்தினர்.

சமூகவலைதளங்களில் வைரல்
இந்த வீடியோவை அவர் சமூகவலைதளங்களில் வைரலானது. விமான நிலையத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தரக்குறைவாக கோஷமிட்ட நபர் சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே வையாபுரிபட்டியை சேர்ந்த ராஜேஸ்வரன் (42) என்பதும் இவர் அமமுக பிரமுகர் என்பதும் தெரியவந்தது. மேலும் அவர் சிங்கப்பூரில் இருந்து சென்னை வழியாக சொந்த ஊரான மதுரை்கு சென்றது தெரியவந்தது.

விசாரணை
இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் ராஜேஸ்வரன் அவணியாபுரம் போலீஸில் நேற்று மாலை ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் எடப்பாடி பழனிசாமியின் தூண்டுதலின் பேரில் அவரது பாதுகாவலர் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் சிலர் என்னை தாக்கியதுடன் என்னிடம் இருந்த செல்போனையும் பறித்துக் கொண்டனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

6 பேர் மீது வழக்கு
இந்த புகாரின் பேரில் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் மணிகண்டன் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அது போல் எடப்பாடி பழனிசாமி தரப்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் புகாரின் பேரில் ராஜேஸ்வரன் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ராஜேஸ்வரனிடமும் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட் கட்டத்தானே நிலம் கொடுத்தோம்.. என்ன கொடுமை இது.. விஜய்க்கு எதிராக திரளும் பரந்தூர் மக்கள் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications