Madurai Airport: உடனடியாக அமல்.. சர்வதேச விமான நிலையமானது மதுரை.. வெளியானது அரசாணை.. என்னென்ன பலன்?
மதுரை: மதுரை விமான நிலையத்தை (Madurai Airport)சர்வதேச விமான நிலையமாக அறிவிக்க வேண்டும் என்பது தென்மாவட்ட மக்களின் நீண்டகால கோரிக்கையைாக இருந்தது. இதற்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இந்நிலையில் தான் மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அங்கீகரித்து மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் அரசாணை வெளியிட்டுள்ளது. அதில், உடனடியாக அமலாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏற்படும் பலன்கள் பற்றி இங்கு பார்க்கலாம்.
தமிழகத்தில் மொத்தம் 10 விமான நிலையங்கள் உள்ளன. இதில் ஓசூர் மற்றும் நெய்வேலி விமான நிலையங்கள் தனியாருக்கு சொந்தமானது.
சேலம், தஞ்சாவூர், தூத்துக்குடி, வேலூர் உள்ளிட்டவை உள்நாட்டு விமான நிலையமாக உள்ளது. சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்டவை வெளிநாட்டு விமான நிலையமாக செயல்பட்டு வருகிறது.

சர்வதேச விமான நிலையம்
இந்நிலையில் தான் மதுரையில் செயல்பட்டு வரும் விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அறிவிக்க வேண்டும் என்பது தென்மாவட்ட மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்து வந்தது. இதுதொடர்பாக தொடர்ந்து மத்திய அரசிடம் வலியுறுத்தப்பட்டு வந்தது.
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் கடந்த 10ம் தேதி மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் , மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டது.
அரசாணை
அதன்படி தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில் , மதுரை விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக உடனடியாக செயல்பாட்டுக்கு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அரசாணை மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.
என்னென்ன பலன்கள்?
இதன்மூலம் பல்வேறு பலன்கள் கிடைக்க உள்ளது. வெளிநாடுகள் - மதுரை இடையேயான விமான போக்குவரத்து அதிகரிக்கும். மதுரைக்கு துபாய், அபுதாபி, கொழும்பு உள்ளிட்ட இடங்களில் இருந்து விமானங்களை இயக்க பல நிறுவனங்கள் ரெடியாக உள்ளன. இனி இந்த இடங்களுக்கான விமான சேவைகள் அதிகரிக்கும். இதன்மூலம் அரபு நாடுகளுக்கு பணியாற்ற விமான பயணங்கள் மேற்கொள்ள நினைக்கும் மக்கள் திருவனந்தபுரம் செல்லாமல் மதுரையில் இருந்தே பயணிக்கலாம்.
சுற்றுலா மேம்படும்
மேலும் மதுரையில் மீனாட்சி அம்மன் கோவில், திருப்பரங்குன்றம் சுப்பிரமணியன் சுவாமி கோவில், அழகர் கோவில் உள்பட ஏராளமான கோவில்கள் உள்ளன. இதனால் வெளிநாடுகளில் இருந்து வரும் பக்தர்கள் நேரடியாக மதுரை வர முடியும். இது மதுரையை சுற்றுலா இடமாகவும், அங்குள்ள மக்களின் வாழ்வாதாரம் மேம்படும். சுற்றுலா மேம்படும். அதேபோல் வெளிநாடுகளுக்கான ஏற்றுமதியை மதுரை விமான நிலையம் வழியாக மேற்கொள்ள முடியும். இப்படியாக பல்வேறு பலன்கள் கிடைக்க உள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications