"விடாமுயற்சி" அஜித்திற்கும் டிக்கெட்.. அடம்பிடித்த அடங்காத அஜித் க்ரூப்! கடைசியில் ஒரே புலம்பல்!
மதுரை: நடிகர் அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் இன்று ரிலீசாகியுள்ளது. முதல் நாளான இன்று அஜித் ரசிகர்கள் இத்திரைப்படத்தைக் கொண்டாடித் தீர்த்தனர். இதற்கிடையே மதுரையில் விடாமுயற்சி படத்திற்கு ரசிகர்கள் அஜித்திற்கும் டிக்கெட் போட்டுள்ளனர். அஜித் தங்களுடன் படத்தைப் பார்க்காமல் விட்டது வேதனை அளிப்பதாகவும் சோகமாகப் பேசியுள்ளனர்.
தமிழ் சினிமாவில் தற்போது உச்சத்தில் இருக்கும் நடிகர்களில் ஒருவர் அஜித். இவரது படங்கள் எப்போது வந்தாலும், எவ்வளவு தாமதமாக வந்தாலும் அதற்கு மாபெரும் ஓபனிங் கிடைக்கும்.

அஜித்:
இவரது நடிப்பில் கடைசியாக துணிவு திரைப்படம் வெளியானது. 2023 பொங்கலுக்கு வெளியான துணிவு, விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது. தொடர்ந்து லைகா தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் அவர் நடிப்பார் என அறிவிக்கப்பட்டது. இத்திரைப்படத்திற்கு விடாமுயற்சி எனப் பெயரிடப்பட்டது.
கடந்தாண்டே இந்த படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், பல்வேறு காரணங்களால் பட ரிலீஸ் தாமதமானது. கடந்த மாதம் பொங்கல் சமயத்திலேயே விடாமுயற்சி வெளியாகும் என அறிவிப்பு எல்லாம் வெளியானது. இருப்பினும், கடைசி நேரத்தில் மீண்டும் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. இந்தச் சூழலில் தான் இன்று பிப்ரவரி 6ம் தேதி படம் ரிலீஸானது.
வீடியோ:
நீண்ட தாமதத்திற்குப் பிறகு ரிலீஸ் ஆனாலும், இப்படத்தைக் கொண்டாட அஜித் ரசிகர்கள் தவறவில்லை. இன்று காலை முதலே மாநிலம் முழுக்க படத்தை அஜித் ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்து வருகிறார்கள். இதற்கிடையே மதுரையில் அஜித் ரசிகர்கள் விடாமுயற்சி முதல் நாள் முதல் ஷோவுக்கு அஜித்திற்கும் சேர்த்து டிக்கெட் புக் செய்துள்ளனர். இது மட்டுமின்றி அஜித் தங்களுடன் சேர்ந்து படம் பார்க்கவில்லை என இவர்கள் ஃபீல் பண்ணி வீடியோ கூட வெளியிட்டுள்ளனர்.
அஜித்திற்கும் டிக்கெட்:
அதில் அவர்கள், "நாங்கள் அவருக்காக டிக்கெட்டை புக் செய்துள்ளோம். அஜித் சார் மதுரைக்கு வந்து விடாமுயற்சி படத்தை எங்களுடன் பார்க்க வேண்டும். எங்கள் கொண்டாட்டத்தை அவர் நேரில் பார்க்க வேண்டும் என்பதற்காகவே அவருக்கும் சேர்த்து டிக்கெட் போட்டுள்ளோம். இது அவருக்கான சீட். அவர் வராமல் போனது வருத்தத்தைத் தருவதாக உள்ளது.
கோரிக்கை:
ஆனால், எங்கள் கொண்டாட்டம் அவரிடம் போய் சேர்ந்திருக்கும் என நம்புகிறோம். தயவு செய்து மதுரைக்கு வாங்கள். எங்கள் கொண்டாட்டத்தைப் பார்த்தாலே உங்கள் மீது எவ்வளவு அன்பை வைத்துள்ளோம் என்பது புரியும். நீங்கள் என்ன சொன்னாலும் அதைக் கேட்கத் தயார். ஆனால், எங்கள் ஆசை ஒன்றே ஒன்று தான். நீங்கள் எங்களுடன் சேர்ந்து ஒரு படத்தையாவது பார்க்க வேண்டும் என்பதை அடங்காத அஜித் க்ரூப் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். நாங்கள் எதாவது தவறு செய்திருந்தாலும் சாரி ஏகே சார்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
விடாமுயற்சி திரைப்படத்தில் அஜித் குமார், திரிஷா, அர்ஜுன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மகிழ் திருமேனி இயக்கியுள்ள இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. விடாமுயற்சி ரீலிசாகியுள்ள நிலையில், அடுத்தகட்டமாக அவர் குட் பேட் அக்லி படத்தில் நடித்துள்ளார். அஜித் போர்ஷன் சூட்டிங் அனைத்தும் முடிந்துவிட்ட நிலையில், சில மாதங்களில் அந்த படமும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு!












Click it and Unblock the Notifications