Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'கேம் ஓவர்..' வலிமை உடன் மோதும் ஆர்ஆர்ஆர்.. எச்சரிக்கை விடுக்கும் அஜித் ரசிகர்கள்.. கலக்கும் போஸ்டர்

Subscribe to Oneindia Tamil

மதுரை: ராஜமவுலி இயக்கத்தில் உருவாகியுள்ள ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்துக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் மதுரை அஜித் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

போனி கபூர் தயாரிப்பில் இயக்குநர் எச் வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை.

கடந்த 2019இல் இந்தப் படத்தின் ஷூட்டிங் தொடங்கப்பட்ட போதிலும், அதன் பிறகு இந்தப் படம் குறித்த மிகக் குறைவான தகவல்களே வெளியிடப்பட்டது.

 அப்டேட் எப்போ

அப்டேட் எப்போ

இதனால் அஜித் ரசிகர்கள் ஏமாற்றத்தில் இருந்தனர். அந்த சமயத்தில் பல்வேறு இடங்களிலும் வலிமை அப்டேட் குறித்து ரசிகர்கள் கேட்ட சம்பவங்கள் டிரெண்டிங் ஆனது. குறிப்பாக, இந்தியா இங்கிலாந்து டெஸ்ட் தொடரின்போது, இங்கிலாந்து வீரர் மொயின் அலியிடம் வலிமை அப்டேட்டை கேட்ட வீடியோ இணையத்தில் வைரலானது. அதேபோல ஐரோப்பியக் கோப்பை கால்பந்து போட்டியிலும் வலிமை அப்டேட் குறித்த பதாகையை ஒருவர் வைத்திருந்தார்.

 புரொமோஷன்கள்

புரொமோஷன்கள்

ஆனால், கடந்த சில வாரங்களாக நிலைமை அப்படியே தலைகீழ்! முதலில் போஸ்டர், அடுத்து மோஷன் போஸ்டர் என அடுத்தடுத்து அப்பேட்களை கொடுத்துக் கலக்கினார் போனி கபூர். அத்துடன் நிற்காமல் மேக்கிங் வீடியோ மற்றும் 2 பாடல்களும் வெளியாக ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது படக்குழு! பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே உருவாகியுள்ள வலிமை படத்தின் புரொமோஷன்கள் இப்போது முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 ரிலீஸ் எப்போது

ரிலீஸ் எப்போது

இந்தச் சூழ்நிலையில், அடுத்துப் படத்தின் டிரைலர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை படத்தின் வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்டாத நிலையில், டிரைலரில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொங்கல் விடுமுறை தினங்களை குறித்து வலிமை திரைப்படம் வரும் ஜனவரி 13 அல்லது 14ஆம் தேதிகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 ஆர்ஆர்ஆர் படம்

ஆர்ஆர்ஆர் படம்

அதேநேரம் வலிமை படத்துக்குப் போட்டியாக பாகுபலி இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் உருவாகியுள்ள ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் ஜனவரி 7ஆம் தேதி வெளியாகவுள்ளது. சுமார் 450 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த படம், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் வெளியாகவுள்ளது. ஒரு வாரம் முன்னதாக வெளியானாலும் கூட, ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் வலிமை படத்திற்குப் போட்டி தரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது,

 கோபத்தில் ரசிகர்கள்

கோபத்தில் ரசிகர்கள்

இதனால் வலிமை வசூல் பாதிக்கப்படலாம் என்பதால் படத்தின் ரீலிஸ் கொஞ்சம் தள்ளிப்போகலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தின் மீது செம கடுப்பில் உள்ளனர் அஜித் ரசிகர்கள்! சுமார் 1.5 ஆண்டுகளுக்குப் பிறகு அஜித் படம் வெளியாகும் நிலையில், இந்த செய்தி அவரது ரசிகர்களைக் கொந்தளிக்க வைத்துள்ளது.

 கேம் ஓவர்

கேம் ஓவர்

இதனால் கடுப்பாகியுள்ள மதுரை அஜித் ரசிகர்கள், தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர். அந்த போஸ்டரில், "ஆர்.ஆர்.ஆர். உங்கள் ஆட்டம் முடியப் போகிறது" என்று எச்சரிக்கை விடுத்து அதகளப்படுத்தியுள்ளனர் மதுரை அஜித் ரசிகர்கள். இந்த போஸ்டரை இணையத்தில் பலரும் பகிர்ந்து வருகின்றனர்,

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+