மதுரை பாஜக நிர்வாகி கெத்துக்காட்ட நினைத்து எப்போதோ வெளியிட்ட வீடியோ.. இப்போது என்னாச்சு பாருங்க
மதுரை: ஆயுதங்களை இடுப்பில் மறைத்துவைத்து வெளியில் எடுப்பது போல் வீடியோ எடுத்து, கெத்துக்காக வீடியோ வெளியிட்ட பாஜக இளைஞரணி மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஆயுதங்களை காட்டி அச்சுறுத்தும் வகையில் வீடியோ வெளியிடுவது குற்றமாகும். ஆயுதங்களை காட்டி அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டால் நடவடிக்கை எடுப்பது போல், வீடியோ வெளியிடுவோர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

அதன்படி தான் பிறந்த நாள் கேக்கை வாள்களில் வெட்டிய பல ரவுடிகள் அதற்காக தனியே சிறையில் கம்பி எண்ணினார்கள். இதேபோல் விளையாட்டிற்காக கேக்கை அரிவாளால் அல்லது வாளால் வெட்டியவர்களும் சிறையில் கம்பி எண்ணும் நிலையும் ஏற்பட்டது. போலீசார் கைது நடவடிக்கைகள் தொடர்ந்ததால் ஆயுதங்களை காட்டி வீடியோ வெளியிடுவது சமூக வலைதளங்களில் குறைந்து போனது.
இந்நிலையில் ஆயுதங்களை இடுப்பில் மறைத்து வைத்து வெளியில் எடுப்பது போன்று வீடியோ வெளியிட்ட பாஜக இளைஞரணி மதுரை மாவட்ட செயலாளர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ளார். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த வீடியோ இப்போது எடுக்கப்பட்டது அல்ல..
ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு கோவையில் எடுக்கப்பட்ட இந்த வீடியோ இப்போது வேகமாக பரவிய நிலையில், மதுரை தல்லாகுளம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதன்பின்னர் தான் பாஜக இளைஞரணி மதுரை மாவட்ட செயலாளர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டார். அதன்பின்னர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே அபாயகரமான ஆயுதங்களுடன் புகைப்படங்கள் / வீடியோக்களை பதிவிடும் நபர்கள், கோரமான ஆயுதங்களைக் கொண்டு விழாக்களில் கேக் வெட்டும் நபர்கள், அச்சுறுத்தும் தொனியில் ஆயுதங்களுடன் BGM கொண்ட வீடியோக்கள் பதிவிடும் நபர்களின் விவரங்களை 94874 64651 என்ற எண்ணிற்கு தெரிவிக்கலாம் என திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண் குமார் அறிவித்துள்ளார்.
அதேபோல் இளைஞர்கள் கவனிக்க வேண்டிய விஷயம்.. வீலிங் செய்து இன்ஸ்டாகிராமில் அல்லது பேஸ்புக்கில் வீடியோ வெளியிட்டாலும் சிக்கலில் சிக்க வாய்ப்பு உள்ளது. யாராவது உங்கள் பதிவை டேக் செய்து புகார் அளித்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பார்கள். அபாயகரமான வகையில் சாலையில் அசுர வேகத்தில் சென்று வீலிங் செய்தவர்கள் வீடியோ இன்ஸ்டாகிராமில் கெத்துக்காக பதிவிட்டிருப்பார்கள். அப்படி பதிவிட்டவர்கள் சிக்கலில் சிக்கும் வாய்ப்பு உண்டு.
-
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications