ஒரே சமயத்தில் சித்திரைத் திருவிழாவும், தேர்தலும்.. மதுரையில் கூடி ஆலோசித்த 6 எஸ்.பிக்கள்!
Recommended Video

மதுரை: மதுரையில் நடைபெற உள்ள சித்திரை திருவிழா மற்றும் பாராளுமன்ற தேர்தலையொட்டி, பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து சிறப்பு டிஜிபி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
மதுரையில் வருகிற 8 ம் தேதி சித்திரை திருவிழா தொடங்குகின்றது. இதில், முக்கிய நிகழ்வான தேரோட்டம் 18 ம் தேதியும், கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு 19ம் தேதியும் நடைபெறுகின்றது.

அதே போல், பாராளுமன்ற தேர்தலின் வாக்குப்பதிவும் 18ம் தேதி நடைபெறுவதால், மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் பாதுகாப்பு குறித்து, சிறப்பு டி.ஜி.பி விஜயகுமார் தலைமையில், மதுரை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் ஆலோசனை நடைபெற்றது.

இதில், தென் மண்டல காவல்துறை ஐ.ஜி. சண்முக ராஜேஸ்வரன், மதுரை மாநகர் காவல்துறை ஆணையர் டேவிட்சன், தேவ ஆசிர்வாதம் மற்றும் மதுரை டிஐஜி பிரதீப் குமார், திண்டுக்கல் டிஐஜி ஜோஷி நிர்மல்குமார், ராமநாதபுரம் டிஐஜி திருமதி.காமினி மற்றும் மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட 6 மாவட்ட எஸ்.பிக்கள் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதில், சித்திரை திருவிழாவின் போது எத்தனை காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். எங்கெங்கு கண்காணிப்பு கோபுரங்கள் அமைப்பது, போக்குவரத்து மாற்றங்கள் குறித்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
மேலும், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் திருவிழா ஏற்பாடுகள் மற்றும் அதனை சுற்றியுள்ள வாக்கு மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications