குலுங்குகிறது மதுரை.. ஸ்டாலின் நடத்தும் ரோடு ஷோ.. ஒவ்வொரு ரூட்டிலும் சம்பவம்! டிராபிக்கிலும் மாற்றம்
மதுரையில் நாளை திமுகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது.. முதல்வர் ஸ்டாலின் இந்த பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்கிறார்.... இந்நிலையில், மதுரையில் 16 கி.மீ. தூரத்துக்கு ரோடு ஷோ இன்று செல்ல உள்ளார்.. முதல்வரின் வருகையையொட்டி 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். போக்குவரத்திலும் மிகப்பெரிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
மதுரைக்கு வரும் முதலமைச்சர் ஸ்டாலின், இன்றைய தினம் தனியார் ஹோட்டலில் சிறிது தூரம் ஓய்வெடுக்கிறார்.. மாலை 5 மணியளவில் பெருங்குடி முதல் ஆரப்பாளையம் வரை 16.5 கிலோமீட்டர் தொலைவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ரோடு ஷோவில் பங்கேற்கிறார்.

போலீஸ் பாதுகாப்புகள்
அந்தவகையில், பெருங்குடி, வில்லாபுரம், சோலையழகுபுரம், ஜீவாநகர், டிவிஎஸ் பாலம், பழங்காநத்தம் ரவுண்டானா, பைபாஸ் ரோடு, காளவாசல், குரு தியேட்டர், திண்டுக்கல் ரோடு சந்திப்பு, ஆரப்பாளையம் வரை சாலையோரம் திரண்டிருக்கும் பொதுமக்கள், கட்சியினரை திறந்த வேனில் நின்றபடி முதல்வர் சந்திக்கிறார்.
இதையொட்டி, மாநகர காவல் ஆணையர் லோகநாதன் தலைமையில் 2 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.. வில்லாபுரம், ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் முதல்வர் வேனை விட்டு இறங்கி, சாலையில் நடந்து சென்று மக்களை சந்திப்பதுடன், பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன..
ரோடு ஷோவுக்குப் பிறகு மதுரா கோட்ஸ் பாலம் அருகே புதுப்பிக்கப்பட்ட முன்னாள் மேயர் முத்துவின் சிலையை முதல்வர் திறந்துவைக்கிறார். இரவில் அரசு சுற்றுலா மாளிகையில் தங்குகிறார்.
போக்குவரத்து மாற்றம்
முதல்வரின் வருகையையொட்டி, போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.. முதல்வர் செல்லும் பகுதியையொட்டி, இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.. வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அறிந்து கொள்வதற்காக இதனை போக்குவரத்து போலீசார் அறிக்கையாகவும் வெளியிட்டுள்ளனர்.. அதில் உள்ளதாவது:
பெருங்குடி சந்திப்பிலிருந்து 'ரோடு ஷோ' நடக்கும் அவனியாபுரம், மருதுபாண்டியர் சிலை, பெரியார் சிலை, வில்லாபுரம் ஆர்ச் வரையுள்ள ரோடு, ஜெயவிலாஸ் சந்திப்பு முதல் சோலையழகுபுரம், ஜெய்ஹிந்துபுரம் மெயின் ரோடு, ஜீவாநகர் சந்திப்பு, சந்தரர்ராஜபுரம் மார்க்கெட், டி.வி.எஸ்., நகர் மேம்பாலம், மாடக்குளம் சந்திப்பு, ஜி.ஆர்.டி., ஓட்டல் ரோடு, பழங்காநத்தம், ரவுண்டானா, பைபாஸ் ரோடு, காளவாசல் சந்திப்பு, குரு தியேட்டர் சந்திப்பு வரையுள்ள திண்டுக்கல் ரோடு, அகர்வால் கண் மருத்துவமனை சந்திப்பு வரையுள்ள ரோடு, ஏ.ஏ.ரோடு, அரசரடி சிக்னல் சந்திப்பு வரையுள்ள ரோடு, புதுஜெயில் ரோடு, முன்னாள் மேயர் முத்து சிலை வரை இன்று காலை 6:00 மணி முதல் 'ரோடு ஷோ' முடியும் வரை எந்த ஒரு வாகனமும் நிறுத்த அனுமதி இல்லை.
பெருங்குடி வாகனங்கள்
பெருங்குடி சந்திப்பிலிருந்து அவனியாபுரம், வில்லாபுரம் வழியாக வாகனங்கள் நகருக்குள் செல்வதற்கு அனுமதி இல்லை. நகரிலிருந்து வில்லாபுரம், பெருங்குடி வழியாக விமான நிலையம் செல்லும் வாகனங்கள் தெற்குவாசல், சிந்தாமணி ரோடு, ரிங் ரோடு மண்டேலா நகர் வழியாக செல்ல வேண்டும்.
மண்டேலா நகர் சந்திப்பிலிருந்து பெருங்குடி, அவனியாபுரம், வில்லாபுரம் வழியாக நகருக்குள் வரும் வாகனங்கள் அனைத்தும் அருப்புக்கோட்டை ரிங் ரோடு, விரகனுார் ரவுண்டானா, வைகை தென்கரை ரோடு வழியாக செல்ல வேண்டும்.
மண்டேலா நகர் சந்திப்பில் இருந்து பெருங்குடி, அவனியாபுரம் வழியாக திருப்பரங்குன்றம் செல்லக்கூடிய வாகனங்கள் அருப்புக்கோட்டை ரிங் ரோடு, செம்பூரணி ரோடு வழியாக அவனியாபுரம் பஸ் ஸ்டாண்ட் சென்று திருப்பரங்குன்றம் ரோடு வழியாக செல்ல வேண்டும்
திருப்பரங்குன்றம் கப்பலூர்
கப்பலுார் ரிங் ரோட்டிலிருந்து திருநகர், திருப்பரங்குன்றம் வழியாக செல்லக்கூடிய கனரக சரக்கு வாகனங்களுக்கு இன்று மதியம் 1:00 மணி முதல் முற்றிலும் தடை விதிக்கப்படுகிறது. இவ்வாகனங்கள் கூத்தியார் குண்டு பாலம் வழியாக நாகமலை புதுக்கோட்டை ரிங் ரோடு, சமயநல்லுார் ரிங் ரோடு வழியாக பாத்திமா கல்லுாரி ரவுண்டானா, ஆனையூர் வழியாக செல்ல வேண்டும்.
சமயநல்லுார் ரிங் ரோட்டிலிருந்து பாத்திமா கல்லுாரி, குரு தியேட்டர் சந்திப்பு, காளவாசல் சந்திப்பு வழியாக பழங்காநத்தம், திருப்பரங்குன்றம் சாலை செல்லக்கூடிய வாகனங்கள் அனைத்தும் -துவரிமான் ரிங் ரோடு, - நாகமலை புதுக்கோட்டை ரிங் ரோடு வழியாக கப்பலுார் பாலம் செல்ல வேண்டும்.
திருப்பரங்குன்றத்திலிருந்து பழங்காந்தம் வழியாக பெரியார் பஸ் ஸ்டாண்ட், காளவாசல் சந்திப்பு செல்லக்கூடிய அனைத்து வாகனங்களும் திருப்பரங்குன்றம் -அவனியாபுரம் ரோடு வழியாக அவனியாபுரம் சென்று நகருக்குள் செல்ல வேண்டும்.
காளவாசல் சந்திப்பு
காளவாசல் சந்திப்பிலிருந்து பழங்காநத்தம் ரவுண்டானா வழியாக திருப்பரங்குன்றம் செல்லக்கூடிய வாகனங்கள் அனைத்தும் கென்னட் ரோடு சந்திப்பில் இடதுபுறம் திரும்பி பெரியார் பஸ் ஸ்டாண்ட் திருப்பரங்குன்றம் ரோடு வழியாக செல்ல வேண்டும்.
சமயநல்லுார் ரிங் ரோட்டிலிருந்து பாத்திமா கல்லுாரி, குரு தியேட்டர் சந்திப்பு வழியாக ஆரப்பாளையம் செல்லக்கூடிய பஸ்கள், இலகு ரக வாகனங்கள் அனைத்தும் பாத்திமா கல்லுாரி சந்திப்பு, தத்தனேரி மெயின் ரோடு, அருள்தாஸ்புரம் பாலம் சந்திப்பு. அம்மா பாலம் வழியாக ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் செல்ல வேண்டும்.
ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்டு
ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்டில் இருந்து குரு தியேட்டர் சந்திப்பு வழியாக வெளியூர் செல்லக்கூடிய பஸ்கள், வாகனங்கள் அனைத்தும் அகர்வால் கண் மருத்துவமனை சந்திப்பின் வலது புறம் திரும்பி, தெற்கு வைகை தென்கரை ரோடு, குரு தியேட்டர் சந்தப்பிற்கு முந்திய 'யூ டர்ன்' வழியாக வலது புறம் திரும்பி காமராஜர் பாலம் சென்று கல்லுாரி சந்திப்பு, திண்டுக்கல் ரோடு, சோதனைச்சாவடி வழியாக அனைத்து ஊர்களுக்கும் செல்ல வேண்டும்.
உசிலம்பட்டி, தேனி, கம்பம், குமுளி ஆகிய ஊர்களிலிருந்து காளவாசல் சந்திப்பு வழியாக ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் நோக்கி வரும் அனைத்து பஸ்களும் நாகமலை புதுக்கோட்டை ரிங் ரோடு, துவரிமான் சந்திப்பு, சமயநல்லுார் ரிங் ரோடு சந்திப்பு வழியாக திண்டுக்கல் ரோடு, பரவை சோதனைச்சாவடி, பாத்திமா கல்லுாரி ரவுண்டானா, தத்தனேரி மெயின் ரோடு, அருள்தாஸ்புரம் அம்மா பாலம் வழியாக ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் செல்ல வேண்டும்.
அரசரடி சந்திப்பு
காளவாசல் சந்திப்பிலிருந்து புதுஜெயில் ரோடு வழியாக செல்லக்கூடிய வாகனங்கள் அனைத்தும் அரசரடி சந்திப்பு, டி.பி. ரோடு நகரின் எந்த பகுதிகளுக்கும் செல்லலாம். கட்டபொம்மன் சிலை சந்திப்பு வழியாக நகரின் எந்த பகுதிக்கும் செல்லலாம்.
அரசரடி சந்திப்பிலிருந்து புதுஜெயில் ரோடு வழியாக சிம்மக்கல் வழியாக கோரிப்பாளையம் பகுதிக்கு நோக்கி செல்லக்கூடிய அனைத்து வாகனங்களும் டி.பி. ரோடு வழியாக பெரியார் பஸ் ஸ்டாண்ட், தெற்குமாரட் வீதி, கீழவாசல் சந்திப்பு, -காமராஜர் ரோடு வழியாக செல்ல வேண்டும்.
பெரியார் பஸ் ஸ்டாண்டில் இருந்து சிம்மக்கல், யானைக்கல், புதுப்பாலம் வழியாக மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட் செல்லக்கூடிய அனைத்து வாகனங்களும் தெற்குமாரட் வீதி சந்திப்பு, மகால் ரோடு, கீழவாசல் சந்திப்பு, காமராஜர் ரோடு வழியாக செல்ல வேண்டும்" என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications