டிசம்பர் 7.. மதுரைக்கு வரப்போகும் பிரம்மாண்ட அறிவிப்பு.. சஸ்பென்ஸ் வைத்த டிஆர்பி ராஜா!
மதுரை: டிசம்பர் 7ஆம் தேதி மதுரை மாவட்ட தொழில் வளர்ச்சி குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாக உள்ளதாக அமைச்சர் டிஆர்பி ராஜா தெரிவித்துள்ளார். கோவையில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பல்வேறு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், மதுரை குறித்த அப்டேட் ஒன்றையும் கொடுத்துள்ளார்.
2021ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைந்த பின் ஜல்லிக்கட்டு மைதானம், கீழடி அருங்காட்சியகம், டைடல் பார்க் உள்ளிட்ட பிரம்மாண்ட அறிவிப்புகள் வெளியாகியது. இதில் டைடல் பார்க் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டு விரைவாக நடந்து வருகிறது. இருந்தாலும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ஒசூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்கள் அளவிற்கு மதுரை தொழில் வளர்ச்சி அறிவிப்புகள் வெளியாகவில்லை.

தென் மாவட்டங்களுக்கான நுழைவு வாயிலாக மதுரை இருந்த போதும், தொழில்சாலைகளுக்கான எந்த அறிவிப்பும் இல்லாதது மதுரை மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் கோவையில் இன்று 3வது முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் தமிழக அரசு தரப்பில் கோவை தொழில் வளர்ச்சிக்காக ஏராளமான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி வருகிறது.
ஜான்சன் எலெக்ட்ரிக், ஹூண்டாய் வியா, டெல்த் ஹெல்த்கேர் உள்ளிட்ட நிறுவனங்களும், எஸ்டிடி டேட்டா சேவை மையமும் முதலீடு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. சுமார் ரூ.4,200 கோடிக்கும் அதிகமன முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் மதுரைக்கு ஏதெனும் முதலீடுகள் ஈர்க்கப்பட்டதா என்று எக்ஸ் தளத்தில் கேள்வி எழுப்பினார்.
அதற்கு டிஆர்பி ராஜா, டிசம்பர் 7ஆம் தேதி வரை காத்திருங்கள் என்று பதில் அளித்துள்ளார். மதுரையில் கட்டப்பட்டு வரும் அப்போலோ மருத்துவமனை மேம்பாலம் பணிகள் முழுமையாக நிறைவடைந்துவிட்ட நிலையில், அதனை டிசம்பர் 7ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் நேரில் வந்து திறந்து வைக்க உள்ளார்.
அப்போது மதுரை மாவட்ட தொழில் வளர்ச்சிக்கு வித்திடும் வகையில் புதிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே மதுரை மெட்ரோ திட்டம் நிராகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 9 ஆண்டுகளாக கட்டப்பட்டு வருகிறது. சட்டசபைத் தேர்தல் நெருங்கியுள்ள சூழலில், மதுரைக்கு ஏதேனும் ஸ்பெஷல் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications