வெளியானது மதுரை மாவட்ட வாக்காளர் பட்டியல்: 67,435 புதிய வாக்காளர்கள் சேர்ப்பு
Recommended Video

மதுரை: மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார் மாவட்ட ஆட்சியர் நடராஜன், மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட இறுதி வாக்காளர் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் பெற்றுக் கொண்டனர்,
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கலெக்டர் நடராஜன் கூறுகையில், மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் 25 லட்சத்து 66 ஆயிரத்து 319 வாக்காளர்கள் உள்ளனர்,

12 லட்சத்து 68 ஆயிரத்து 332 ஆண் வாக்காளர்களும், 12 லட்சத்து 97 ஆயிரத்து 864 பெண் வாக்காளர்களும், 123 திருநங்கை வாக்காளர்கள் என உள்ளனர். ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் 29 ஆயிரத்து 532 பேர் அதிகம் உள்ளனர்.
வாக்காளர் அடையாள அட்டை குறித்த விபரங்களை தெரிந்து கொள்ள 1950 என்கிற இலவச தொலைபேசி எண்ணை அழைக்கலாம், 01.09.2018 பிறகு 67,435 புதிய வாக்காளர் சேர்க்கப்பட்டு உள்ளனர், 17,730 வாக்காளர் நீக்கப்பட்டு உள்ளனர்.
மதுரை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட 6 சட்டமன்ற தொகுதிகளில் 15 லட்சத்து 20 ஆயிரத்து 728 வாக்காளர்கள் உள்ளனர் என கூறினார்.
தமிழகம் முழுவதும் இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications