மதுரையை வளைக்கும் திமுக.. அங்கே ஏன் திமுக பொதுக்குழு? 1977க்கு பிறகு சம்பவம் செய்யும் ஸ்டாலின்.. பலே

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரையில் இன்று நடக்கும் பொதுக்குழுவானது, திமுகவுக்கு மிக முக்கியமான நிகழ்வாக கருதப்படுகிறது.. இந்த முறை மதுரையில் பொதுக்குழுவை திமுக நடத்த காரணம் என்ன? இந்த வியூகம் எந்த அளவுக்கு திமுகவுக்கு தேர்தலில் கை கொடுக்கும்? என்று தெரியவில்லை.. எனினும், இன்றைய தினம் முதல்வரின் ரோடு ஷோ நடைபெற உள்ளதால், மதுரை மாநகரமே பரபரப்பாக காணப்படுகிறது.

வழக்கமாக திமுக எந்தவொரு முக்கிய நிகழ்வென்றாலும் திருச்சியை மையப்படுத்தியே நடத்தும்.. அல்லது கோவை மாவட்டத்தில் திட்டமிடுவது வழக்கம்.. அதிலும் பொதுக்குழு கூட்டங்கள் பெரும்பாலும் சென்னை அண்ணா அறிவாலயத்திலேயே நடைபெறும்.

Madurai DMK general council meeting mk stalin

பொதுக்குழு கூட்டம் ஏற்பாடு

அதேபோல, பொதுக்கூட்டம் நடத்துவதாக இருந்தாலும், திருச்சி, கோவையே பிரதானமாக கருதப்படும்.. கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு திருச்சியில் பொதுக்கூட்டத்தையும், எம்பி தேர்தலின் வெற்றி கூட்டத்தை கோவையிலும் நடத்தியிருந்தது.. இப்போது விரைவில் சட்டமன்ற தேர்தல் வருவதால், மீண்டும் தென்மாவட்டத்தையே குறி வைத்து நகர துவங்கியிருக்கிறது.


1977-க்கு பிறகு

அந்தவகையில், இந்த முறை பொதுக்குழு கூட்டத்தை மதுரையில் நடத்த முடிவு செய்துள்ளது... கடந்த 1977-ல் மதுரையில் பொதுக்குழு நடந்தது.. இந்த பொதுக்குழு கூட்டத்தில்தான், திமுக பொதுச் செயலாளராக பேராசிரியர் அன்பழகனும், பொருளாளராக சாதிக் பாஷாவும் தேர்வு செய்யப்பட்டனர்.

1977க்கு பிறகு மதுரையில் தற்போதுதான் திமுக பொதுக் குழு கூட்டம் நடைபெற உள்ளது பலரது கவனத்தையும் பெற்று வருகிறது. திமுக பொதுக்குழுவில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளதால் அதற்கான ஏற்பாடுகளும் உச்சக்கட்ட தீவிரத்தில் உள்ளன..

மதுரையில் பொதுக்குழு நடத்த சில காரணம் இருப்பதாக கூறப்படுகிறது.. அதாவது, இந்த முறை அதிமுக, பாஜக கூட்டணி இணைந்து செயல்பட போவதால், திமுக கூட்டணிக்கு எந்த சேதமும் வராத வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த ஸ்டாலின் முடிவு செய்துள்ளாராம்..

என்ன காரணம்

டங்ஸ்டன் விவகாரத்தில் திமுகவின் உறுதியான நிலைப்பாடு காரணமாக, மதுரை மக்களிடத்தில் திமுக . கூடுதல் செல்வாக்கு பெற்றிருக்கிறது.. இதனை மையப்படுத்தியே பொதுக்குழுவுக்கு மதுரையை முதல்வர் தேர்ந்தெடுத்திருப்பதாக சொல்கிறார்கள்.

அதேபோல,இளைஞர்கள், பெண்களை திமுக பக்கம் ஈர்க்கும் வகையில், சில அறிவிப்புகள் வெளிவரலாம் என்கிறார்கள்.. குறிப்பாக, பெண்கள், இளைஞர்களுக்கு சில பதவிகள் தரப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.. அதேபோல, பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், துணை பொதுச் செயலாளர்களின் எண்ணிக்கையையும் உயர்த்த திமுக திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

தீர்மானங்கள் - முடிவுகள்

மற்றொருபுறம், வயது மூப்பால் சரிவர கட்சி பணி செய்ய முடியாதவர்கள். கட்சி வளர்ச்சிக்கு பெரிதும் உழைக்காதவர்களை, முதல்வர் ஸ்டாலின் நீக்கவும் முடிவு செய்துள்ளாராம்.. அதுமட்டுமல்ல, வரப்போகும் தேர்தலில் வெற்றி பெற என்னென்ன செய்ய வேண்டும் என்ற அறிவுரைகளையும் முதல்வர் வழங்கக்கூடும்.

எனவே, இந்த பொதுக்குழுவில் மேற்கொள்ளப்படும் தீர்மானங்களும், முடிவுகளும் எப்படி இருக்க போகின்றன என்ற எதிர்பார்ப்பு கூடி வருகிறது.

மொத்தத்தில், தென்மண்டல தலைநகரமாக மதுரை விளங்குவதால், இன்றைய தினம் நடைபெறக்கூடிய இந்த பொதுக்குழு கூட்டம், சட்டமன்றத் தேர்தலுக்கு திமுகவை வலுப்படுத்தவும், ஆயத்தப்படுத்தி கொள்ளவும், ஒரு முன்னோட்டமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+